கொத்து பரோட்டா -11/11/13
”பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப் பட வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். பவா ஒர் எனும் மனிதனைப் பற்றி பேசி கொண்டேயிருக்கலாம். அதே போல அவர் கதை சொல்லும் பாங்கிற்காக கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஒரு முறை நான், கார்க்கி, எஸ்.கே.பி கருணா, மிஷ்கின் என நண்பர்கள் முன் பவா கிணறு வெட்ட வருபவனைப் பற்றி சொன்ன கதை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ ஆளுமைகளுடனான அன்பு, ஆழ்ந்த படிப்பறிவு, அனுபவறிவு என பெற்றிருக்கும் பவாவிடம் ஏதாவது சொன்னால் அப்போதுதான் கேட்பது போல அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும், குழந்தைத்தனமும், நாம் சொன்னதற்கான பாராட்டோ, அல்லது விமர்சனமோ ச்ட்டென உறுத்தாமல் விழும். பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது கதை இருக்கும் என நம்புகிறவர். அதை மிக அழகாய் சொல்கிறவர்கள் இல்லாத காலத்தில் அப்படிப்பட்டவரைப் பற்றி அவர் வாழும் காலத்திலேயே ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்க் கொண்ட செந்தழல் ரவி, எஸ்.கே.பி.கருணாவை பாராட்டியே தீர வேண்டும். ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் சவுண்ட் சைடில் சில குறைபாடுகள் இருந்தாலும், தயாரிப்பாளர் என்பதால் செந்தழல் ரவி அவர்கள் பெரும்பாலான காட்சிகளில்...