Adhurs – Telugu Film Review
ஜூனியர் என்.டி.ஆரின் இரட்டை வேடம், நயந்தாரா, என்.டி.ஆரின் ஆதர்ச இயக்குனர் வி.வி.விநாயக், தேவி ஸ்ரீபிரசாத், என்று எல்லோரும் சேர்ந்து மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியிருந்தபடம். தெலுங்கு சினிமா உலகத்தை திருப்பியெல்லாம் போடவில்லை. வழக்கமான மசாலாதான். இரட்டையர்களாய் பிறநது, பிரிந்து போய். சாரி என்று கோவிலில் பிரம்மானந்தத்திடம் அஸிட்டெண்ட் பூசாரியாய் ஒருவன். கேங்ஸ்டரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து போலீஸ் ஆபீசர் சாயாஜி ஷிண்டேவிடம் கொடுக்கும் நர்சிம்மனாக ஒருவன். அவனுக்கு ஒரே எய்ம் போலீஸில் சேருவது. இன்னொரு பக்கம் நரசிம்மனை தேடியலையும் கல்கத்தா டான் மகேஷ் மஞ்ச்ரேக்கர். அவன் எதற்காக தேடியலைக்கிறான் நரசிம்மனை? நரசிம்மனும், சாரியும் சேர்ந்தார்களா? என்பதை வெள்ளி திரையில் காண்க. இரட்டை வேடங்களில் சாரியாகவும், நரசிம்மனாகவும் ஜூனியர் என்.டி.ஆர். நரசிம்மனாக வரும் என்.டி.ஆரைவிட, சாரியாக வரும் என்.டி.ஆர் மனதில் நிற்கிறார் அவரும் பிரம்மானந்தமும் அடிக்கும் காமெடி கூத்தினால். பிரம்மானந்தம் நயந்தாராவை காதலிக்க, நயன் தாரா ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நரசிம்மனை பார்த்துவிட்டு சாரியை காதலிக்க, ஒரு கட்டத்தில் நயனுக்...