Posts

Showing posts with the label Konchem istam konchem kastam

Koncham Istam Koncham Kastam- Telugufilm review

Image
அடுத்த பதிவு..S.M.S.திரைவிமர்சனம் வர வர தெலுங்கில இனிமையான, இளமையான படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அப்படியான படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். படம் முழுவதும் ஒரு இளமை ஜுரம் பரவியிருக்கிறது. புதுசான கதை கிடையாது. ஆனாலும் சுவாரஸ்யமாய் தெரிவதற்கு நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.. சில்லுன்னுகுது. ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் மகனான சித்தார்த் காலேஜில் லெக்சரராய் இருக்கும் தாயுடம் ஹைதராபாத்தில் தனியே இருக்க, அவனின் தந்தை வெளிநாட்டிலிருந்தவர் இந்தியா வருகிறார். கீதா சுப்ரமணீயம் என்கிற தமன்னா வேறு ஊரிலிருந்து ஹைதராபாத்துக்கு மேல் படிப்புக்காக வர, இருவருக்கும் இருக்கும் பொதுவான ஏரியா நண்பர்கள் மூலம் நண்பர்கள் ஆகி, பின்பு காதலர்கள் ஆகிறார்கள். தங்கள் காதலை தமன்னாவின் அப்பா நாசரிடம் சொல்ல, அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்கிற குடும்பத்தில், குடும்பத்தின் வேல்யூ தெரியாத வீட்டில், என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்கிறார். அவர்கள் இருவரையும், சேர்த்து வைத்துவிட்டு உங்கள் பெண்ணை திருமணம...