தியேட்டரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-2
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே. இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்? என்பதுகளில் திரையரங்குகளை தவிர வேறு பொழுது போக்கே இல்லை என்ற நிலையில் வந்த தொலைக்காட்சி பெட்டி தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே ஒரு ஆட்டு ஆட்டியது என்றால் அது மிகையில்லை. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நேரத்திற்காகவே சாயங்காலமே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகிவிடுவார்கள். திரையரங்குகளீல் மாலை காட்சி காற்றாட ஆரம்பித்தது இந்த காலங்களில் தான். கூடவே ஞாயிற்று கிழமை சினிமா வேறு மக்க...