Thottal Thodarum

Dec 30, 2013

கொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானைக்கூட்டம், விழா, அடல்ட் கார்னர், கங்காரு

இணைய உலகில் 2006 முதல் இயங்கி வந்தாலும், வலைப்பதிவராய் தீவிரமாய் ஆரம்பித்தது 2008லிருந்துதான். அப்போதிலிருந்து என் வாழ்கையில் நோ லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களாகிய நீங்கள். இதில் 2010 ஆண்டு என் வாழ்க்கையில் ஒர் முக்கியமான வருடம் அவ்வருடத்தில் தான் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான  லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் வெளியானது. அதன் பிறகு  இந்த நான்கு வருடங்களில் சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள்,  கேபிளின் கதை, என அடுத்தடுத்து புத்தகங்கள் வெளியாயின. எல்லா புத்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு அபாரம். முதல் புத்தகமே போட்ட ஆயிரம் காப்பி விற்பது என்பது கனவான விஷயம். அக்கனவும் பலித்தது. அடுத்த வெளிவந்த சினிமா வியாபாரம் புத்தகம் என் வாழ்க்கையில் இன்னொரு கதவை திறந்துவிட்ட புத்தகம். கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, இரண்டாம் பதிப்பாய் மதி நிலையம் மூலம் வெளிவந்து இன்றும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்ற புத்தகம். இப்படி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற புத்தகங்களில் புதிய வெளியீடாக மதி நிலையம் “சாப்பாட்டுக்கடை” புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு கொடுத்த அதே ஆதரவை இப்புத்தகத்திற்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.. உங்கள் முன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 23, 2013

கொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3

தலைமுறைகள்
மூத்த கலைஞர் பாலு மகேந்திராவின் புதிய படைப்பு. இது நாள் வரை ஃபிலிமில் படமெடுத்துக் கொண்டிருந்தவர் கால மாற்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறார். புதிய பரிமாணமாய் நடிப்பு. ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் புதிய டெக்னாலஜியில் அவனவன் செல் போன் கேமராவில் எல்லாம் படமெடுத்துவிட்டு, அதை சினிமாஸ்கோபாக மாற்றி திரையெங்கும் க்ரெயின்ஸோடு வெளியிடும் வேளையில், இயல்பான வெளிச்சத்தில் சும்மா நச்சென “35 எம்.எம்”மில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ப்ரேம்களோடு படமாக்கியிருக்கிறார். இருந்தாலும் வீடியோ ஃபீலை மறைக்க முடியாததன் காரணம் டெக்னாலஜியா? அல்லது படத்தின் கதையா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜா தன் பழைய ஆர்கேவிலிருந்து நாலைந்து விஷயங்களை எடுத்து விட்டிருக்கிறார். இதை ஒரு அழகிய குறும்படமாய் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 16, 2013

கொத்து பரோட்டா -16/12/13

தொட்டால் தொடரும்
வெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்,  அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்”  டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு  https://www.facebook.com/ThottalThodarum , https://twitter.com/thottalthodarum 
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 9, 2013

கொத்து பரோட்டா - 09/12/13

சாப்பாட்டுக்கடை
சாப்பாட்டுக்கடை புத்தகமாய் வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றார் பதிப்பாளர். பா.ராகவன் படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ட்விட்டரில் பாராட்டி  சொல்லியிருந்தார். புத்தகத்தை ஆன்லைனின் வாங்க விரும்புவோர் இங்கே அழுத்தவும்
@@@@@@@@@@@@@@@@@@@

Dec 3, 2013

நடு நிசிக் கதைகள் - 3

நண்பர் ஒருவரின் பார்ட்டி. போலீஸ் கெடுபிடியினால் எல்லோரும் விரைவாக கிளம்ப, நடந்து செல்லும் தூரத்திலிருந்தவர்களும், வேறொருவரின் வண்டியில் பிரயாணப்பட இருக்கும் ஆட்களைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரு விதத்தில் இந்த கெடுபிடி கூட நல்லதே என்று தோன்றியது. நேரம் ஆக ஆக வாதம் விவாதமாகி குடுமிப்பிடி சண்டையாகிப் போகும் நிலைக்கு பல சமயம் இந்த கெடுபிடி புல்ஸ்டாப் போடுகிறது.

Dec 2, 2013

கொத்து பரோட்டா -02/12/13

தொட்டால் தொடரும்
இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது இந்த வருடமும், தொட்டால் தொடரும் படப்பிடிப்பும்.. இரண்டுமே முடியப் போகிறது. இன்னமும் ஒரிரு வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிடும். தொடர் படப்பிடிப்பினால் காலையில் ஷுட்டிங்கிற்கு கிளம்பினால் இரவு வீடு மீண்டும் ஷூட் என்ற நிலையில் நேற்று இரவுதான் சென்னையை ஒரு ரவுண்டு அடித்தேன். இந்த இரண்டு மாதங்களில் தி.நகரில் இரண்டு இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் நகைக்கடையும், பர்னீச்சர் கடையும் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்லா காலியா இருந்த ஜி.என்.செட்டி சாலையையும் ட்ராபிக் ஆக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த முனையில சரவணா ஸ்டோர்ஸ், இன்னொரு முனையில போத்தீஸ்னு வந்திருச்சு. உஸ்மான் ரோடு பூராவும் கடைகளாகி அங்கேயும் மூச்சு திணறுது. நடுவுல பேட்டாக்காரன் வேற ஒரு கடை போட்டிருக்கான். எகானமி மோசமா இருக்குன்னு சொல்லிட்டிருக்காங்க.. ஆனா வர்ற கடைகளைப் பார்த்தா அப்படித் தெரியலையே..
@@@@@@@@@@@@@@@@@@

Dec 1, 2013

விடியும் முன்

 

ரொம்ப நாளாகிவிட்டது இப்படி ஒர் கிரிப்பிங் திரில்லரைப் பார்த்து.  நான்கு பேர்கள், மூன்று காரணங்கள், இரண்டு பேர், ஒரு நாள் என்ற கேப்ஷனே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு ட்ரைலர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிக்கையாளர் காட்சி போட்ட தைரியம் வேறு என்னுள் இருந்த ஆர்வத்தை மேலெழுப்ப.. தொட்டால் தொடரும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேற்றிரவு கிளம்பிவிட்டேன். 

Nov 25, 2013

கொத்து பரோட்டா - 25/11/13

தொட்டால் தொடரும்
42 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் கதைக்கு முக்கியமான காட்சிகளையும், ஒரு பாடல் காட்சிகளையும் எடுத்துவிட்டால் எல்லாம் சுபம். இச்சமயத்தில் என் படத்தின் நாயகனைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். இரண்டாம் கட்ட பாண்டிச்சேரி படப்பிடிப்பின் போது ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்கிற்க்காக குதித்த போது அவருக்கு வலது கால் முட்டியில் லிகமெண்ட் டேர் ஆகிவிட்டது.  கதையில் முக்கியமான நேரம் அது. வலியில் துடித்தார். தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்  அன்றைக்குத்தான் சிங்கப்பூருக்கு கிளம்பியிருந்தார். விஷயம் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாய்  ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் என்று சொல்ல, தமன் சற்று நேரம் யோசித்து,.. இருக்கட்டுங்க.. “என் ஒருத்தனால ஷூட்டிங் பாதிக்கக் கூடாது என்று சொல்லி, அன்றைக்கு மட்டுமில்லாமல் இன்றைக்கு வரை அதற்கான பிஸியோ ட்ரீட்மெண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் டெடிக்கேஷனுக்கு என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 13, 2013

B.A. Pass

 
தொட்டால் தொடரும் படப்பிடிப்பு காரணமாய் படம் பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் போனில் “தலைவரே நீங்க தொடரா எழுதிட்டு இருந்த கதை ஹிந்தியில படமா வந்திருச்சு” என்றார்.  நான் எழுதி வந்த நான் ஷர்மி வைரம் கதையைத்தான் சொல்கிறார் என்று புரிந்தது. ஆண் விபசாரனைப் பற்றிய கதை.  உடனடியாய் படத்தை தேடி டவுன் லோட் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

Nov 11, 2013

கொத்து பரோட்டா -11/11/13

”பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப் பட வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். பவா ஒர் எனும் மனிதனைப் பற்றி பேசி கொண்டேயிருக்கலாம். அதே போல அவர் கதை சொல்லும் பாங்கிற்காக கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஒரு முறை நான், கார்க்கி, எஸ்.கே.பி கருணா, மிஷ்கின் என நண்பர்கள்  முன் பவா கிணறு வெட்ட வருபவனைப் பற்றி சொன்ன கதை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ ஆளுமைகளுடனான அன்பு, ஆழ்ந்த படிப்பறிவு, அனுபவறிவு என பெற்றிருக்கும் பவாவிடம் ஏதாவது சொன்னால் அப்போதுதான் கேட்பது போல அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும், குழந்தைத்தனமும், நாம் சொன்னதற்கான பாராட்டோ, அல்லது விமர்சனமோ ச்ட்டென உறுத்தாமல் விழும். பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது கதை இருக்கும் என நம்புகிறவர். அதை மிக அழகாய் சொல்கிறவர்கள் இல்லாத காலத்தில் அப்படிப்பட்டவரைப் பற்றி அவர் வாழும் காலத்திலேயே ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்க் கொண்ட செந்தழல் ரவி, எஸ்.கே.பி.கருணாவை பாராட்டியே தீர வேண்டும்.  ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் சவுண்ட் சைடில் சில குறைபாடுகள் இருந்தாலும், தயாரிப்பாளர் என்பதால் செந்தழல் ரவி அவர்கள் பெரும்பாலான காட்சிகளில் அவருடன் பயணிப்பதும், எல்லாவற்றிக்கும் “உம்” கொட்டுவதை தவிர்த்திருக்கலாம். பவா வேட்டை கதை சொல்லும் இடம் அருமை. பார்த்து கேட்டால் மட்டுமே அதன் சுகம் புரியும். நம் வாழ்நாளில் நம்முடன் இருக்கும் கதைசொல்லியை பற்றிய ஆவணப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டுமோ என்ற ஒர் சிறிய ஆதங்கம் தோன்றத்தான் செய்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@
ஒர் ஆவணப்பட வெளியீட்டுக்கு இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மைக்குக்கு பின்னால் கிடைத்த சீட்டில் படம் பார்த்தேன்.  பட ஒளிபரப்புக்கு பின் வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட, இயக்குனர் சேரன், நா.முத்துகுமார் ஆகியோர் அன்புடன் அழைத்து “தொட்டால் தொடரும்” பட வேலைகள் குறித்தும் பேசினார்கள். பார்க்கும் பத்திரிக்கை நண்பர்கள், திரைப்பட நண்பர்கள் அனைவரும் படம் குறித்து விசாரித்தது ஒர் விதத்தில் சந்தோஷமாய் இருந்தாலும் உள்ளூர லேசான நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. வீரம்னா பயமில்லா நடிக்கிறதுன்னு கமல் சொன்னாரில்லை அதை பாலோ பண்ணிட்டிருக்கேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 7, 2013

கலிகாலம்.

நீ எதை விதைக்கிறாயோ அதுதான் முளைக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது என்பதுதான் விதி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது கலிகாலம் நல்லதுக்கு காலமில்லை போல.. 


Nov 5, 2013

ஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.

ஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும் கிடைக்கவில்லை. அன்றைக்கு மட்டும் தமிழ்நாட்டில் 7000 காட்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். கிங் ஆப் ஓப்பனிங் என்பதை மீண்டும் மீண்டும் அஜித் நிருபித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் எஸ்கேப்பில் படம் பார்த்தேன். ஆர்யா - டாப்ஸியின் மொக்கை காதல் கதை படத்தின் ஓட்டத்திற்கு இடையூறு. அங்காங்கே விறுவிறுவென இருந்தாலும்,   ஆன்லைனில் ஒரு லட்சம் ட்ரான்ஸ்பர் செய்தாலும், ஒரு மில்லியன் ட்ரான்ஸ்பர் செய்தாலும் ஒரே நேரம் தான் ஆகும் என்பது கூட தெரியாமல் படமெடுப்பார்களா? போன்ற லாஜிக் கேள்விகளை கேட்காமல் பார்த்தால் நல்லது. அஜித் என்றொரு பிம்பம் மட்டுமில்லையென்றால்.. ஆரம்பம்.. முதலெழுத்து மிஸ் ஆகியிருக்கும்.

Nov 1, 2013

தொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்

ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது. இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. அப்படி இருக்காது என்று  கேட்டு, பார்த்தறிந்திருந்தாலும் அதை நாமே நம் படத்திற்காக செய்யும் போது புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறது.

Oct 14, 2013

கொத்து பரோட்டா - 14/09/13

Gravity
விண்வெளியில் உள்ள சாட்டிலைட்டை ரிப்பேர் செய்ய  போன மூன்று பேர், பூமியைப் போலவே விண்வெளியிலும் நாம்  சாட்டிலைட்விட்டு, போட்டிருக்கும் சாட்டிலைட் கார்பேஜுகளால் ஏற்படும்  புயலில் மாட்டிக் கொண்டு தாய்கலத்திலிருந்து விடுபட்டவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதே கதை.  ஏற்கனவே இது மாதிரி நிறைய கதைகளில், அப்பல்லோ 13 போன்ற படங்களில் வந்த விஷயம் தான் என்றாலும், அதை எடுத்த விதம் வாவ்.. அதுவும் 3டியில்.. மறக்க முடியாத ஒர் அனுபவம். மூன்று நடிகர்கள். அதில் ரெண்டு பேர் பாதி படத்திற்குள் காலி. மிச்சமிருக்கிற சாண்ட்ரா புல்லக்கை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர் மிதந்தால் நாம் மிதந்து, அவர் பல்டி அடித்தால் நாமும் அடித்து, அவருக்கு மூச்சு முட்டினால் நமக்கு முட்டி.. அவர் தீயில் மாட்டிக் கொண்டு வெந்தால் நாம் வெந்து.. வாவ்..வாவ்..  படம் ஆரம்பிக்கும் ஷாட் ஒன்றே போதும் இவர்களின் டெக்னாலஜி பிரில்லியன்ஸை பாராட்ட.. மொத்த தியேட்டரும் பின் ட்ராப் சைலன்ஸில் பார்த்தார்கள். Being there  என்பதற்கு ஒர் சிறந்த உதாரணம் இந்த படம். ஐமேக்ஸில் பார்த்தவர்கள் பாக்யவான்கள். Don't Miss
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 12, 2013

நய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்

நேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழைந்தேன். 7.15க்குத்தான் படமென்றார்கள். 50 ரூபாய் வாங்கவேண்டிய சிங்கிள் ஸ்கீரின் தியேட்டரில் டிக்கெட் விலை 90 என்றார்கள். மூன்று வகை டிக்கெட் விலைகள் இருக்க வேண்டும். தனுஷின் புதிய படம் முதல் நாள் மாலைக் காட்சி கூட்டமேயில்லை என்னையும் சேர்த்து சுமார் இருபது பேர் மட்டுமே இருந்ததை பார்த்த போது படத்தைப் பற்றி ஒப்பினியன் வேண்டாமென்று காத்திருந்து டிக்கெட் எடுத்தேன். இப்போது சுமார் எழுபது பேர் வரை இருந்தார்கள். 

Oct 3, 2013

குட்டிக்கதை -1

வண்டியின் முன் பக்க நம்பர் ப்ளேட்டின் ஸ்க்ரு கழண்டு விழுந்துவிட்டது. சரி அதை டூவீலர் மெக்கானிக்கிடம் பிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று ஒரு மெக்கானிக் கடையை பார்த்து அங்கிருந்த மிடில் ஏஜ் ஆளிடம் “இந்த போர்ட்டு விழுந்திருச்சு. கொஞ்சம் மாட்டிக் கொடுங்க” என்றேன். அவன் வண்டியின் ப்ளேட் இருக்கும் இடத்தைப் பார்த்து “எய்ட் எம்.எம். ஸ்க்ரூ வாங்கிட்டு வாங்க மாட்டிடலாம் என்றார்.

“கடை எங்கிருக்கு?” என்றதும் எதிர் கடையை காட்டினான். நேராக அந்தக் கடைக்குப் போய் ஸ்க்ரூ வாங்கி, அவர்களிடமே ஒரு ஸ்குரூ ட்ரைவரை வாங்கி பிக்ஸ் செய்துவிட்டு கிளம்ப எத்தனித்த போது. “என்ன சார் வாங்கிட்டீங்களா?” என்றார் எதிர்கடை மெக்கானிக். ”வாங்கிட்டேன். ஆனா நானே மாட்டிட்டேன். உன் சோம்பேறித்தனத்துனால எனக்கு இருபது ரூபா லாபம் ரொம்ப நன்றி தம்பி” என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்ப, அவன் முகம் போன போக்குத்தான் பாவமாய் இருந்தது.

கேபிள் சங்கர்

Sep 30, 2013

கொத்து பரோட்டா - 30/09/13

தொட்டால் தொடரும்
பதிவர் சந்திப்பின் போது எனக்கு போன் செய்து நானெல்லாம் வரலாமா? என்றவரிடம் தாராளமா என்றே காலையிலேயே வாயில் பைப் சகிதமாய் வந்துவிட்டார். லஞ்ச் டைமில் “கேபிள் உன் படத்தில நான் நடிக்கணும். ஒரு சான்ஸ் கொடு. சும்மா வாயில பைப் வச்சிட்டு பாஸிங்கில போற மாதிரியிருந்தாக் கூட பரவாயில்லை.. நான் இருக்கணும் உன் படத்துல என்றார். அப்போதைக்கு அவருக்கு என்ன கேரக்டர் கொடுப்பது என்று யோசனையில்லாமல் நிச்சயமா சார்.. என்றேன். ஷூட்டிங்கின் போதுதான் வயதான மிடில் க்ளாஸ் பெண்கள் பத்திரிக்கை ஆசிரியர் கேரக்டருக்கு ஆள் யோசித்த போது சட்டென ஞாபகம் வந்த முகம் பாரதி மணி சாருடய முகம்தான். ஒரே ஒரு காட்சிதான் வரும் எப்படி அவரை அழைப்பது என்ற யோசனையில் அவருக்கு போன் போட்டேன். விஷயத்தை சொன்னேன். பாஸிங்கில வர்றேன்னு சொன்னது சுமமா இல்லை கேபிள் நிஜமாத்தான் என்ற சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார். அவரின் இயல்பான நடிப்பினால் காட்சியின் முடிவு இன்னும் மெருகேறி சிறப்பாக வந்தது. எனக்கு திருப்தி. ஆனால் அவரோ இன்னும் வேற வேற மாடுலேஷன்ல பேசுறேன் நன்னாயிருந்தா எடுத்துக்கோ.. என்றார். நன்றி சார்.. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 29, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய்  வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட்டில் எல்லாம் இம்மாதிரியான படங்கள் வருதே நம்ம ஊருலே வரதேயில்லையே என்று ஆதங்கம் மட்டுமே படும் காலம் விரைவில் குறையுமென்ற நம்பிக்கை வர ஆரம்பித்துவிட்டது. 

Sep 24, 2013

Lunchbox


நெடு நாளைக்கு முன் அ.முத்துலிங்கம் ஒர் சிறுகதை எழுதியிருந்தார். இலங்கையில் இவருக்கு வழக்கமாய் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரும் சிங்களன் ஒருவன் ஒரு முறை வேறு ஒரு வீட்டின்  சாப்பாட்டை கொண்டு வந்துவிட அது ரெகுலராகி, பின்னால் நடக்கும் விஷயங்களைப் பற்றிய கதை. படு சுவாரஸ்யமாய் இருக்கும். கிட்டத்தட்ட அதே கதைதான் இந்த லஞ்ச் பாக்ஸும்.

Sep 23, 2013

கொத்து பரோட்டா - 23/09/13

நிர்ணையிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு இப்போதுதான் புரிகிறது இத்தனை நாளாய் எப்படி நாம் சுரண்டபப்ட்டிருக்கிறோம் என்று. நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கு போன இடங்களுக்கு எல்லாம் வெறும் எழுபதுக்கும் என்பதுக்கும் சென்று வருவது மகிழ்ச்சியை தராதா என்ன?.  இத்தனைக்கும் காரணம் அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைதான் காரணம்.  இந்த நடவடிக்கைகளினால் தான் அவர்களும் பயந்து மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். பல ஏரியாக்களில் ஸ்டாண்டுகளில் இருக்கும் ஆட்டோக்காரர்கள் இன்னமும் புதிய கட்டணத்திற்கு மாறாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல லோக்கலில் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது அராஜகம் தாங்காமல் மக்கள் ஒரு நாலடி நடந்து வந்து மெயின் ரோட்டில் ஓடும் மீட்டர் போட்ட ஆட்டோக்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள். அரசும் ஊருக்குள்ளேயே ஓடும் ஆட்டோக்களை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சென்னை ஆட்டோக்களில் இருபது சதவிகிதப் ஆட்டோக்கள் தான் புதிய கட்டண அட்டையும், மீட்டரும் பொருத்தியிருப்பதாய் தெரிகிறது. நிஜமாகவே உழைத்து வண்டியோட்டி பிழைக்க நினைக்கும் ஆட்டோக்காரர்கள் நிறைய பேர்  இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாய் இளைஞர்கள். அவர்கள் வாடிக்கையாளர் கேட்காமலேயே மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.  இவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு செய்யும் முனைப்போடு, வாடிக்கையாளர்களாகிய நாமும் தொடர்ந்து மீட்டர் போடும் வண்டிகளை மட்டுமே பயன்படுத்தி, அப்படி பயன்படுத்தாத வண்டிகளின் நம்பரை குறித்துக் கொண்டு புகார் அளிக்க பழக வேண்டும். எதையும் கேட்டே பெற்று வரும் சமூகத்தில் வாழ வேண்டியிருப்பதால். கேளூங்கள் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 21, 2013

6 மெழுகுவர்த்திகள்

ஷாமும், பூனமும் தங்கள் குழந்தையோடு பீச்சுக்கு போகிறார்கள். குழந்தை காணாமல் போகிறது. பெற்றவன் குழந்தையை கண்டுபிடித்தே தீருவேன் என்று அலைந்து திரிந்து தேடுகிறான். அப்படி அவன் தேடிப் போகும் போது நமக்கு தெரிவிக்கப்படும் விஷயங்கள் பிள்ளை பெற்றவர்களின் வயிற்றை கலக்கும்.

Sep 19, 2013

சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணவிலாசம்

நான்கைந்து பேர் போன் செய்துவிட்டார்கள். என்ன இன்னுமா அங்க போய் சாப்பிடலைன்னு. அவ்வளவு நல்லாருக்கான்னு கேட்டதுக்கு இல்லை சொன்னாங்க. நம்மளை லேப் எலி ரேஞ்சுக்கு தான் வச்சிருக்காங்கன்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில அப்படி என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம் ஓரத்தில இருந்திட்டேயிருந்தது.  சரின்னு தொட்டால் தொடரும் ஞாயிறு ஷூட்டிங் ப்ரேக்குல ஒரு நாள் மதியம் போனேன். ஞாயிறுங்கிறதுனால ஹடோஸ் ரோட் காலியா இருந்திச்சு. அவங்க கார் பார்க்கிங் புல். வாலட் பார்க்கிங் எல்லாம் வச்சிருக்கிறதுனால பார்க் பண்ணுற பிரச்சனையில்லை.

Sep 16, 2013

கொத்து பரோட்டா -16/09/13

தொட்டால் தொடரும் படப்பிடிப்பு பத்தாம் தேதி முதல் ஆரம்பித்து வருகிற பதினேழாம் தேதியுடன் முதல் ஷெட்டியூல் இந்திய சினிமா நூற்றாண்டு விழா விடுமுறை காரணமாய் முடிந்து, 25ஆம் தேதி முதல் இரண்டாவது ஷெட்டியூல் ஆரம்பமாகிறது. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டியதுதான். ஆனால் அதற்காக ஒரு வார காலம் விடுமுறை என்பது கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் தேதிகள் குழப்படிக்க வாய்ப்பிருக்கிறது. யார் யார் எல்லாம் பங்கேற்க்க போகிறார்களோ அவர்களை தவிர மற்றவர்கள் அவர்கள் வேலையை செய்யலாம் என்று வைத்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@

Sep 9, 2013

கொத்து பரோட்டா - 09/09/13

”இன்னைக்கு நான் இந்த நிலையில இருக்கிறேன்னா? அதுக்கு காரணம் என் உழைப்பு. சும்மா வந்திரல.. ” என்று வெற்றிப் பெற்றவுடன் சொல்வது சாதாரணம். ஆனால் வெறும் உழைப்பு மட்டும் ஒருவனின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்வேன்.  திறமை, உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்பைக் கொடுத்து ”நீ செய்.. நல்லா வரும்” என்ற ஆதரவை யாராவது நமக்கு கொடுக்காமல் போனால் வாழ்வின் அடுத்த கட்டம் என்பதேயில்லை. தானே நின்ற தானை தலைவன் என்று யாருமேயில்லை. அப்படி பல பேரின் அன்பினால் வளர்க்கப்பட்டு இதோ “தொட்டால் தொடரும்” படத்தின் மூலம் தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரன் மூலமாய் இயக்குனர் ஆகியிருக்கும் இந்நேரத்தில முதல் குறும்பட வாய்ப்பை அளித்த என் தொழில் முறை நண்பர் குலாமுக்கும், நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் சூதுகவ்வும் சிவகுமாருக்கும், விளம்பர ப்டம்  இயக்குனராக்கி முதல் சினிமா செய்வதற்கான அட்வான்ஸ் கொடுத்த இமயம் நெய் உரிமையாளர், துரைராஜுக்கும், சீரியலில் முதல் திரைக்கதை, வசனம், இயக்கும் வாய்ப்பை அளித்த இயக்குனர் என்.வி.நடராஜனுக்கும், கலகலப்பு மூலமாய் என் சினிமா பாதைக்கு புதிய பாதை அமைத்துக் கொடுத்த  இயக்குனர் பத்ரி அவர்களுக்கும் வசனகர்த்தாவாக்கிய இயக்குனர் சக்திவேலுக்கும் என் நன்றியை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நேரில் சென்று அழைக்கவில்லை, போன் செய்து கூப்பிடவில்லை. வெறும் எஸ்.எம்.எஸ் மூலமும், பேஸ்புக் டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய அன்பு இணையதள நண்பர்களுக்கும், நம்மில் ஒருவன் என்ற நட்புணர்வோடு வந்திருந்து வாழ்த்திய பத்திரிக்கையாள நண்பர்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும், ஆகியோருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றிகள். 
@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 8, 2013

உங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டால் தொடரும்..

இன்றைய நாள் என் வாழ்நாளில் ஒர் முக்கியமான நாள். துவார் ஜி. சந்திரசேகரனின் FCS Creations தயாரிப்பில் என் முதல் படமான “தொட்டால் தொடரும்” திரைப்படத்திற்கான ஆரம்ப நாள். நடிப்பு, எழுத்து, வசனம், உதவி இயக்குனர் என்ற பல படிகளைத் தாண்டி இயக்குனர் என்கிற நிலைக்கு என்னை உயர்த்தப் போகும் நாள். இந்த வாய்ப்பை நல்கிய தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரனுக்கு என் நன்றிகள். இந்த இனிய நாளில் என் தந்தையில்லாததை நினைத்து வருத்தமிருந்தாலும், எங்கிருந்தாலும் அவரின் கனவை நினைவாக்கும் எந்தன் முயற்சியை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு, நண்பர்களாகிய உங்கள் அன்பையும், ஆசியையும் வேண்டி.. தொட்டால் தொடரும்...
உங்கள்
கேபிள் சங்கர்

Sep 3, 2013

உக்காந்து யோசிப்பாங்க போல..

ரெண்டொரு நாள் முன் நண்பர் ஒருவர் தன்னுடன் வந்தவரை ஒரு விநியோகஸ்தர் என்று அறிமுகப்படுத்தினார். அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தலுக்கான பார்ட்டி. மரியாதை நிமித்தமாய் வணக்கம் சொல்லிவிட்டு நகர எத்தனித்த போது விநியோக நண்பர் என் கையை பிடித்துக் கொண்டு “எங்க கிளம்பிட்டீங்க?” என்றார். லேசாய் மப்பிலிருந்தார். நான் சகஜமாகி “சொல்லுங்க” என்றேன். சூது கவ்வும் டைரக்டர் உங்க ஃப்ரெண்டா?” 

Aug 31, 2013

தங்க மீன்கள்.


கற்றது தமிழ் ராமின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பு. நெடு நாளாய் ரிலீஸுக்கு டேட் சொல்லி தள்ளிக் கொண்டே போனதன் விளைவு. பார்த்த இயக்குனர்கள் எல்லோரும் அஹா ஓஹோ என்ற பாராட்டு போன்றவைகள் எல்லாம் இன்னும் ஹைப்பை கொடுத்திருக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்தேன்.

Aug 30, 2013

நடு நிசிக் கதைகள் -2

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர்

நடு இரவில் மேற்கு மாம்பலத்தில் உள்ள உதவி இயக்குன நண்பரை அவரின் அறையில் விட்டு விட்டுப் போக எண்ணி வழக்கமான ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமான ரோடு என்றால் போலீஸ் செக்கிங் இல்லாத ரூட். வழக்கமாய் இரவு நேரங்களில் லேக் வியூ ரோடு சந்திப்புக்களில் செக்கிங் இருக்கும் அதனால் அதற்கு முன்பே போஸ்டல் காலனியில் புகுந்து ஜூவன் ஸ்டோரின் வழியாய் அவர்களுக்கு முன்னால் உள்ள தெருவில் போய் சேர்ந்துவிடுவோம். இது நாள் வரை எல்லாம் சுகமாகவே போய்க் கொண்டிருந்த வேளையில் விதி விளையாடியது.

Aug 28, 2013

நடு நிசி கதைகள்-1

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர்

நண்பர் ஒருவர் சினிமாக்காரர். செட் வேலை போய்க் கொண்டிருந்தபடியால் ஜாலியாய் பேசிக் கொண்டிருந்தோம். டாஸ்மாக் பற்றியும் சமீபகாலமாய் நடந்து வரும் இரவு நேர டி.டி செக்கிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தெந்த ஏரியாவில் எங்கெங்கு செக்கிங் நிற்பார்கள்? போலீஸ்காரர்கள் பேசும் முறை பற்றியும் காமெடியாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை போத்தீஸ் அருகே காரில் செல்ல, வழக்கமாய் அங்கே செக்கிங்கிற்கு நிற்கும் போலீஸ் எல்லா வண்டியையும் மறித்து, பைக்குகளை ஒரு பக்கமாகவும், கார்களின் கதவுகளை இறக்கச் சொல்லி கிட்டே வந்து “எங்க போறீங்க?:” என்பது போன்ற அபசகுன கேள்விகளை கேட்டு குடித்திருக்கிறார்களா? இல்லையா? என்று செக் செய்வது வழக்கம். அன்றும் அதே ரொட்டீன் தான். நான் வேண்டுமென்றே காரில் சத்தமாய் பாட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்க, கிட்டே வந்த போலீஸ் காரர் கதவை இறக்கச் சொன்னார்.

Aug 26, 2013

கொத்து பரோட்டா -26/08/13

தானே அப்டேட் செய்ய வேண்டிய ஒரு வேலை. மக்களும், பத்திரிக்கைகளும், கோர்ட்டும் தலையிட்டு செய்கிறாயா இல்லையா? என்று செய்ய வைத்திருக்கிறது. ஆட்டோ கட்டணத்தை நிர்ணையிக்கும் விஷயத்தைத்தான் சொல்கிறேன்.முதல் 1.8கிமிட்டருக்கு 25 ரூபாயும் அதிகபட்ச கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் நிர்ணையித்திருக்கிறார்கள். பேரம் பேசியே வருடங்களாய் பழக்கப்பட்டவர்கள் இனி நிர்ணையித்த கட்டணத்தை வாங்க பழக வேண்டும். அப்படி வாங்காத பட்சத்தில் அவர்களின் மீது புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க எல்லாவிதமான உதவிகளையும் பயணிகளுக்கு அரசு அளிக்க வேண்டும். பெட்ரோல் விலையை காரணம் காட்டி விலையேற்றும் ஆட்டோக்கள் பெரும்பாலும் ஆட்டோ கேஸில் தான் போகிறது. எனவே இவர்கள் பெட்ரோல் விலையேற்றத்தை காரணம் காட்டி கொள்ளையடித்தது என்றைக்குமே செல்லாத போது, இனி மீண்டும் அதை காரணம் காட்டி விலையேற்ற சொல்வது போன்ற இம்சைகளை அரசு தடுக்க வேண்டும். பார்ப்போம். நம்ம ஊரு சட்டமும், அதை செயல்படுத்தும் காவல்துறையின் லட்சணங்களை பற்றி தெரிந்து எல்லாம் நல்லா நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய அதீதம் என்பது புரிந்தும் நம்புகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 24, 2013

அனைவரும் வருக.. அகநாழிகை புத்தக கடை

ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அத்தொழிலின் மேல் அதீத ஈடுபாடும், காதலும் வேண்டும். அப்படித்தான் நான் சினிமா மீதான அதீத ஆர்வத்தில், காதலில் இருபது வருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த தொழில் வீடியோ கேசட் பார்லர். இன்ஜினியரிங் படித்துவிட்டு பார்ட்டைமாக டோர் டெலிவரியில் வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விட ஆரம்பித்த தொழில் மெல்ல, வளர்ந்து பார்லாராய் மாறியது. மிக நன்றாக போய்க் கொண்டிருந்த காலத்தில் பார்ட்னர்களிடையே கொஞ்சம் பிரச்சனை வர, மீண்டும் அதே ஏரியாவில் வீடியோ கடையை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அண்ணாமலை ரஜினி கணக்காய் இதே ரோட்டில் கடை ஆரம்பித்து வென்று காட்டுவேன் என்ற சபதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொழில். வெறும் நம்பிக்கை மட்டும் என்ன இந்த சபத்தத்தை போட வைக்கவில்லை. அதற்கான அடிப்படை விஷயங்களிலிருந்து ரசனை வரை என்னை நான் வளர்த்துக் கொண்ட திமிர் என்றும் கூறலாம். என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரு படத்தை எடுக்கும் முன் அதைப் பற்றி சின்னதான் ஒரு சில தகவல்கள், தொடர்ந்து அவர்கள் பார்க்கும் படங்கள் மூலமாய் அவர்களின் ரசனை அறிந்து நான் சிபாரிசு செய்யும் படங்கள்.  அவர்களின் ரசனைக்கேற்ப மாற்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகப்படுத்தும் விஷயம் என எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு நெருங்கிய பந்தம் உருவாகிவிடும் அளவிற்கு ஆகிவிடும். அதற்கு காரணம் நான் அத்துனை படங்களையும் பார்த்துவிடுவேன்.  ஃபோர்ன் வகை படங்கள் உட்பட. என் ரசனையின் மேல் அவர்களது நம்பிக்கை வளர, வளர, நான் என்னை வளர்த்துக் கொண்டேயிருந்ததாலும், என் வியாபாரமும் வளர்ந்தது.

Aug 21, 2013

சாப்பாட்டுக்கடை - கோழி இட்லி

பெயரைக் கேட்டதுமே அட வித்யாசமா இருக்கே என்று தோன்றியது. நண்பர் ஒருவர் சாப்பிட்ட கதையை சொன்னதும் நாமும் ஒரு முறை ட்ரை செய்யலாமே என்று அந்தப்பக்கம் வண்டியை விட்டேன். லாயிட்ஸ் ரோடில் அதிமுக அலுவலகத்தின் முன்னே போகும் தெருவில் இருப்பதாய் சொன்னார்கள். ஏனோ என் கண்ணில் அன்று படவேயில்லை. விடாமல் சென்ற வாரம் இரவில் அந்தப்பக்கம் போகும் போது அவர்கள் வைத்திருந்த வழிகாட்டி மின்சார போர்டு தெரிய கடையை கண்டுபிடித்துவிட்டேன்.

Aug 17, 2013

கேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர்.பியும்.

விலைவாசி உயர்வு ஆகும் போது விலையேற்றும் உணவகங்கள் விலை இறங்கியதும் விலை குறைப்பதில்லை. ஆனால் அந்த அதிசயம் இந்த கலியுகத்தில் நடந்தேறிவிட்டது. அதுவும் சரவணபவனில். ஒரு மாதம் முன்பு காபி கொட்டை விலை இறங்கிவிட்டது என்று காபியில் விலை குறைக்க ஆரம்பித்தார்கள். இப்போது பார்த்தால் 40 ரூபாய் விற்ற மசால் பால் முப்பது ரூபாய்க்கு தருகிறார்கள். அறுபது ரூபாய்க்கு டிபன் பொக்கே.. என சரவண பவன் பாஸ்ட் புட் எல்லாவற்றிலும் எங்கு பார்த்தாலும் அதிரடி விலைக் குறைப்பு என பிரிண்ட் செய்து ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதில் அதிரடியாய் ஆடி விருந்தென்று 95 ரூபாய்க்கு போன மாசம் சாப்பாடு வேறு போட்டார்கள்.  

Aug 15, 2013

ஆதலால் காதல் செய்வீர்

 
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, என்று ஒரு க்ளாஸ், மாஸ் படமாய் எடுத்து ஹிட்டடித்த இயக்குனர் சுசீந்திரன் ஆஃப்பீட்டாய் அழகர் சாமி குதிரையை எடுத்து நேஷனல் அவார்டையும் தட்டியவர். அதே ஸ்பீடில் ராஜபாட்டையும் எடுக்க, ஏனோ என்ன கம்பெல்ஷனோ.. பெரிய வீழ்ச்சி. இதோ அவரது புதிய படம் ஆதலால் காதல் செய்வீர். 

Aug 11, 2013

கொத்து பரோட்டா -12/08/13

கேட்டால் கிடைக்கும்
சிட்டி செண்டரில் வழக்கம் போல ஃபுட்கோர்ட்டில் கார்டுக்கு பணம் வாங்கும் கொள்ளையில்லை என்றாலும், அவரவர்களுக்கு ஏற்ப கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். பிட்ஸா கார்னரில் பிட்சாவுக்கு சாஸ் பாக்கெட் கிடையாதாம். ஏனென்றால் அது வெறும் டெலிவரி செய்யும் இடம் மட்டுமே என்றார் பில் போட்டவர். அதெப்படி அதை நீங்கள் பில் போடும் முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். அல்லது இங்கே போர்டில் எழுதி வைத்திருக்க வேண்டும் அப்படி இல்லாமல் பில் போட்டவுடன் எப்படி நீங்கள் சொல்லலாம். என்று சட்டம் பேசியவுடன் இஞ்சார்ஜ் மேனேஜர் சொன்னது “சார்.. இது டேக் அவே கொடுக்குமிடம் மட்டுமே அதனால் இங்கே டைனிங்கிற்கு கொடுக்கப்படும் சாஸ் கிடையாது என்றார். அப்ப உங்க டோர் டெலிவரியில் பிட்சாவுக்கு சாஸ் கொடுப்பத்தில்லையா? என்று கேட்டதற்கு மழுப்பினார். அப்ப இங்க நான் ஆர்டர் பண்ண பிட்சாவை ஏன் பேப்பர் ப்ளேட்டில் வைத்து சாப்பிட தருகிறீர்கள்? டேக் அவே என்றால் அதற்கான பேக்கேஜ் செய்துதானே தர வேண்டும்? என்று கேட்டதும் மனிதர் உஷாராகி அடுத்து ஆர்டர் கொடுத்தவர்களுக்கு எல்லாம் அட்டைப் பெட்டியில் பிட்சாவை போட்டு கொடுக்க ஆரம்பித்தார். ஏற்கனவே இவர்கள் வாங்கும் விலையில் அட்டைப் பெட்டிக்கான காசும், சாஸேஜுகளூக்கான பணமும் சேர்த்துத்தான் வாங்குகிறார்கள். அதை கொடுக்காமல் இவர்கள் அடிக்கும் கொள்ளையிது. ஒரு சாஸ் பாக்கெட்டி என்ன பெருசா கொள்ளையடிச்சிர போராங்க, பேங்கேஜிங் மெட்டீரியல்ல என்ன வந்திரும்? என்று கேட்பவர்களுக்கு ஒரு ரூபா திருடினாலும் திருட்டு திருட்டுத்தான். ஏன் சாஸ் இல்லை, பாக்கேஜிங் இல்லைன்னு ஒரு பத்து ரூபா குறைத்து வாங்கிக் கொள்ள  வேண்டியதுதானே..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 9, 2013

Chennai Express

இந்திய தொலைக்காட்சிகளில் எங்கும் பார்த்தாலும் ஒரு வாரமாய் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைப் பற்றி தான் ஏதாவது ஒரு நியூஸ் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஷாருக்கானுக்கு பேண்டுக்கு மேல் வேட்டிக் கட்டி விடும் தீபீகாவின் படம் போட்டு அதற்கு கேப்ஷன். ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று இங்கே அறிக்கை விடுவது. படத்தை ப்ரமோட் பண்ண என்னவெல்லாம் செய்யலாம் என்று மணடையை பிய்த்துக் கொண்டு யோசித்தவர்கள் கொஞ்சமாச்சும் கதை, திரைக்கதை, பற்றி யோசித்திருக்கலாம். 

Aug 8, 2013

சாப்பாட்டுக்கடை- ஹோட்டல் காமாட்சி


 எனது படத்தில் நிறைய ஆக்‌ஷன் ப்ளாக்குகள் இருப்பதால் ரோடு பர்மீஷன் போன்றவைகளுக்காக இங்கே அலைவதை விட பாண்டியில் ஈஸியாய் கிடைக்குமென்பதால் பாண்டிக்கு லொக்கேஷன் ஹண்டிங் கிளம்பினோம். காலையில் கிளம்பிய வண்டி மதியம் சரியாய் ரெண்டு மணி வாக்கில் லொக்கேஷன் எல்லாம் பார்த்து முடிந்து பசிக்க ஆரம்பித்தது. உடன் வந்த லொக்கேஷன் மேனேஜர் ரவியிடம் நல்ல சாப்பாட்டுக்கடைக்கு கொண்டு போய் விடச் சொன்னேன். பாண்டிக்கு யார் வந்தாலும் நான் வெஜ் என்றால் அவர்களை இங்கே அழைத்து வந்து சாப்பாடு வாங்கிக் கொடுக்காமல் அனுப்ப மாட்டேன் என்று ஹோட்டல் காமாட்சிக்கு அழைத்துச் சென்றார்.

Aug 7, 2013

Ship Of Theseus


ஒரு சின்னப் படம், ரிலீஸாகி ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருப்பது சாதாரணமில்லை. அதுவும் வெகுஜன படமல்லாமல் கலைப்படமாய் இருக்கும் பட்சத்தில் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. மூன்று தனித் தனி கதைகள். ஆனால் அவையனைத்துக்கும் ஒர் இணைப்பு இருக்கிறது. அது தான் இந்தப் படத்தைப் பற்றி பேச வைக்கிறது.

Aug 6, 2013

The Conjuring

இணையமெங்கும் இப்படத்தைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் உலவிக் கொண்டிருக்கிறது. சொந்த காசுல சூனியம் வச்சிக்க ரெடின்னா போய் பாருங்க என்றும், இன்னொரு பக்கம் சமீபத்தில் பார்த்த சூப்பர் பேய் படமென்று ஒரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எத்தனையோ ஆங்கில படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இவ்வளவு கூச்சல் குழப்பம் அப்படங்களுக்கு இருந்ததில்லை. இந்த வேர்ட் ஆப் மவுத் பப்ளிசிட்டிக்கான காரணம் இதன் ட்ரைலர். ட்ரைலரை பார்த்த போதே படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டு வந்துவிட்டார்கள். 

Aug 4, 2013

Annayum Rasoolum

காதல். அது என்ன மாதிரியான அவஸ்தைகளை கொடுக்கக் கூடியது என்று காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயம். என்ன தான் காதலிப்பவர்களுடன் பயணித்த அனுபவம் இருந்தாலும், சமயங்களில் இவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் செய்யும் எதிர்ப்பார்க்கும் நிறைய விஷயங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்களே.. என்று தோன்றும். இப்படியான காதல் கதைகளை திரைப்படமாய் எடுக்கும் போது எனக்கு தெரிந்து ரெண்டு விதமாய்த்தான் படம் முடியும். ஒன்று சந்தோஷமான ஹேப்பி எண்டிங். இரண்டாவது சோகம்.  அன்னையும் ரசூலும் ரெண்டாவது வகை.

Jul 29, 2013

கொத்து பரோட்டா - 29/07/13

மஞ்சுளா விஜயகுமாரின் இறுதி ஊர்வலத்தை தேசத் தலைவரின் இறுதி ஊர்வலம் போல லைவ் கவரேஜ் எல்லாம் தன் சேனல் மூலம் செய்தும், கடைசியில் “மஞ்சுளா விஜயகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நன்றி” என்று உளறியதால் செய்தததெல்லாம் வீணாய் போயிற்று. நன்றின்னு முடிச்சிட்டு, இரங்கல்கள்னு போட்டுக்கங்க என்று சொல்லி தான் டங்க் சிலிப்பானதை ஒத்துக் கொண்ட பெருந்தன்மையை கூட உணராமல் அவர் விமர்சனத்துக்குள்ளாவதை நினைக்கும் போது ரொம்பப் பாவமாத்தான் இருக்கு. கேப்டன் வாழ்க
@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 27, 2013

சாப்பாட்டுக்கடை - பார்வதி பவன்

ஏற்கனவே சொல்லியிருந்தது போல சாலிகிராமம் ஏரியாவில் நல்ல டீசெண்டான உணவகம்  இல்லை என்பது மட்டுமில்லாமல் கருணாஸ், திருநெல்வேலி கடை போன்றவற்றைத் தவிர  நல்ல சைவ உணவகமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  கருணாஸில் மதியம் சாப்பாடு மட்டுமே. திருநெல்வேலி கடையில் காலையிலும், மாலையிலும் டிபன் மட்டுமே. எனவே  மதிய நேரத்தில் சாப்பாட்டிற்கு பதிலாய் டிபன் அயிட்டங்கள் கொடுக்கும் சைவ உணவகங்கள் மிகக் குறைவு.  அப்படி டிபன் வேண்டுமென்றால் அதுவும் வெறும் பரோட்டா, சப்பாத்தி அயிட்டங்கள் வேண்டுமென்றால் அருகில் உள்ள லோக்கல் ஆனந்த பவனுக்கோ, அல்லது நம்ம வீடு வசந்தபவனுக்கோத்தான் போக வேண்டும். முதலாவது அவ்வளவு சிலாக்கியமில்லை என்றால் இரண்டாவது செம காஸ்ட்லி. கிட்டத்தட்ட சரவணபவன் ரேட் வந்துவிடும். அதிக விலையும் இல்லாமல், நல்ல சுவையுடனான சைவ உணவகமாய் உருவெடுத்திருக்கிறது பார்வதி பவன்.

Jul 23, 2013

மரியான்

ஒரு கடலோர கிராமத்திலிருந்து தன் காதலியின் கடனை அடைப்பதற்காக சூடான் செல்லும் இளைஞன் ஒருவன். அவன் வேலை காண்ட்ராக்ட் முடிந்து தன் காதலியை சந்திக்க வரும் நேரத்தில் சூடான் நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறான். அவன் அங்கிருந்து தப்பித்தானா? காதலியை அடைந்தானா? இல்லையா? எனும் தக்குணூண்டு கதைதான் மரியான்.

Jul 22, 2013

கொத்து பரோட்டா

ஹைதராபாத் முன்பு போல இல்லை.ஹைதை வந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலிருக்குமென நினைக்கிறேன். வழவழவென இருக்கும் ரோடுகள் இல்லை. மெயின் ரோடுகளில் கூட மேடும் பள்ளமுமாய் இருக்கிறது. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்காரர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய் மீட்டர் போடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எல்லோரும் பொத்தாம் பொதுவாய் முப்பது, ஐம்பது, என்பது, நூறு ரூபாய், என பிக்ஸட் அமெளண்டாக கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மீட்டர் போடக் கேட்டால்  ஊருக்கு புதுசா என்கிறார்கள். எலலாம் காங்கிரஸ் ஆட்சி செய்த கோலம். நம்மூரைப் போல மனசாட்சியில்லாத ஆட்டோக்காரர்களாய் மாறவில்லை. எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பத்திலிருந்து பன்னிரெண்டு ரூபாய் கணக்கில் தான் கேட்கிறார்கள். கோயம்பேட்டிலிருந்து சாலிகிராமத்திற்கு கூசாமல் 120 ரூபாய் கேட்கிறான். நான் பார்த்த வரையில் உயிரை மயிராய் மதித்து வண்டி ஓட்டுமிடம் ஆந்திராவாகத் தான் இருக்கும். ரெண்டு லாரிக்கிடையே ஒரு ஆட்டோவும், டிவிஎஸ் 50யும் போகிறார்கள். டெரர் ரைட் என்றால் என்ன என்பதை இங்கே கண் கூடாக பார்க்க முடியும். நண்பர் ஒருவரை பார்க்க ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். மெட்ரோ ரயில் வேலைக்காக போட்டிருந்த மறைப்பிற்கு நடுவே வண்டி நின்றுவிட்டது. பின்னால் போய் ஏதோ நோண்டியவன் வண்டியின் ஸ்டார்டிங் லீவரை உட்கார்ந்த வாக்கில் ஸ்டைலாய் காலில் தூக்கி, இடது கையில் பிடித்திழுத்து ஸ்டார்ட் செய்தவன் வண்டியை பர்ஸ்ட் கியர் போட்டு தூக்கினான். பின் பக்க டயர் ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி அப்படியே குடை சாய, நான் அலறி அடித்துக் கொண்டி தூக்கிய பக்கம் என் வெயிட் முழுவதையும் போட்டு உட்கார, வண்டி சமநிலைக்கு வந்தது. “ஏண்டய்யா.. சூசி ஸ்டார்ட் செய்யகூடதா?’ என்று கேட்டவனை வண்டியோட்டியபடி “மீக்கு ஏம் காலேது காதா?” என்ற கேட்க நீ ரோட்ட பார்த்து ஓட்டுறா சாமி என்று நினைத்த போதே, ராங் ரூட்டில் ஒரு பஸ், மூணு லாரி ஒரு ஸ்கூட்டர் காரனுக்கு நடுவில் புகுந்து எதிர் ரோட்டிற்கு சென்றான். முடியலை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 21, 2013

Bhaag Milka Bhaag

படத்தின் ட்ரைலரும், பர்ஹான் அக்தரின் உழைப்பும், ராகேஷின் முந்திய படமான ரங்தே பசந்தி கொடுத்த இம்பாக்டும் வேறு சேர்ந்து கொள்ள,  எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிருந்தது. 

Jul 17, 2013

Shutter (Malayalam)

 
கத்தியின்றி, ரத்தமின்றி சீட்டு நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லரை சமீப காலத்தில் பார்த்ததாய் நினைவில்லை. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. தேடிப் பிடித்து டவுன்லோடிட்டு உடனடியாய் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சமீப கால மலையாள படங்கள் எல்லாம் கதை களங்களில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாப்பட்ட ஒரு கதைதான் இந்த ஷட்டர்.

Jul 15, 2013

கொத்து பரோட்டா -15/07/13

  • ஃபேம் தியேட்டரில் படமே பார்க்கக் கூடாது என்று நினைத்தால் வேறு வழியேயில்லாமல் என் பட வேலைகள் முடித்துவிட்டு போக அது ஒன்றே ஆப்ஷனாக இருப்பதால் போய் தொலைக்க வேண்டியிருக்கிறது. எப்போது சென்றாலும் ஏதாவது ஒரு மோசமான அனுபவம் கிடைத்துக் கொண்டேயிருக்கும் திரையரங்கம் அது. சென்ற் வாரம் இம்சை. லூட்டேரே படம் பார்க்க டிக்கெட் வாங்க  கவுண்டரில் இருக்கும் ஆளிடம் லூட்டேரே மூன்று டிக்கெட் என்றேன். அவன் என்ன என்பது போல திரும்ப கேட்டான். நான் மீண்டும் இந்திப் படம் லூட்டேரே இரவுக் காட்சி என்று சொன்னேன். அவனும் அதையே திரும்பச் சொல்லி இந்திப் படம் லூட்டேரே மூன்று டிக்கெட் என்று கன்பர்ம் செய்து டிக்கெட் கொடுத்தார். ஸ்கீரின் நம்பர் 3க்கு போய் உட்கார்ந்தால், இங்கிலீஷ் படம் ஓடிக் கொண்டிருந்தது. டிக்கெட்டை பார்த்தால் அதில் லோன் உல்ஃப் என்று போட்டிருந்தது. தப்பு என் பேரில் தான் ஒழுங்காய் டிக்கெட்டை சரி பார்த்திருக்க வேண்டும். வெளியே வந்து ஹால் இன்சார்ஜிடம் சொன்னேன். நீங்க பார்த்திருக்கணும் என்றார். எனக்கு கோபம் வந்து கத்த ஆரம்பித்தேன். ஒண்ணுத்துக்கு பத்து வாட்டி ஹிந்தி படம் லூட்டரே என்று சொல்லி, கேட்டு வாங்கினேன் இப்ப என் சைட் குறையை மட்டும் சொல்லுறீங்களே..? என்றவுடன் வேறு ஒரு இன்சார்ஜ் மேனேஜரிடம் சென்று எங்களை லூட்டரே உள்ள அரங்கில் அனுமதித்து உட்கார சொல்லிவிட்டு “ இன்னைக்கு டிக்கெட் இருந்திச்சு கொடுத்துட்டோம் இல்லைன்னா என்ன பண்றது? எங்க சைட் தப்புத்தான் இருந்தாலும் நீங்களும் ஒரு வாட்டி செக் பண்ணிக்கங்க என்றார். அவனுங்க கொடுக்குற டிக்கெட்டை பூதக்கண்ணாடி வச்சில்ல படிக்கணும்?
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

Jul 14, 2013

Sahasam

இந்தப் படத்தை மிக ஆர்வமாய் பார்க்கக் காரணம் இதன் இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டிதான். இன்ஸ்பிரேஷனில் தான் படமெடுப்பார் என்றாலும், மிக சுவாரஸ்யமான லைன், வித்யாசமான கதைக் களன் என ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை படமெடுப்பவர். இவரின் முதல் படமான அய்தே சுமார் ஒன்னரை கோடியில் எடுக்கப்பட்டு, ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்த படம். இதை பிரகாஷ்ராஜ் நடிக்க தமிழில் கூட எடுத்தார்கள். ஓடவில்லை. அதே போல அனகோகுண்டா ஒக்க ரோஜு, ஒக்கடுன்னாடு, ப்ராயாணம், இதோ இப்போது இந்த சாகஸம். இதற்கு முந்தைய படங்கள் ஆந்திராவில் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் ஓகேயான படங்கள். எல்லா படங்களும் ஓரிரு நந்தி அவார்டுகளை தட்டிச் சென்றவை. நம்மூர் கலைமாமணி போல அல்ல நந்தி அவார்ட். இப்படியாப்பட்ட இயக்குனரிடமிருந்து ஒரு பேண்டஸி படமென்றால் ஆர்வம் வரத்தானே செய்யும்?. 

Jul 12, 2013

Lootera

 
காதல் என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவம். அந்த அனுபவத்தை ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பது என் திடமான எண்ணம். ஆனால் காதல் கொடுக்கும் கிளர்ச்சியும், சோகமும், சந்தோஷமும் நிச்சயம் காதலை உணர்ந்த எல்லோருக்குமே பொதுவானது என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதைதான் இந்த லூட்டேரா. 

Jul 10, 2013

DJANGO UNCHAINED

அடிமைத் தளையிலிருந்து பவுண்டி ஹண்டரால் விடுவிக்கபட்ட ஜாங்கோ அவரின் உதவியுடன் வேறு ஊரில் மிக கொடூரமான மனம் கொண்ட டிகாப்ரியோவிடம் அடிமையாய் இருக்கும் அவனின் மனைவி ப்ரூமில்டாவை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை. ஒரு பக்கா மசாலா கதை லைனுக்குள் இருக்கும் டீடெயிலிங். மேக்கிங், நடிப்பு என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து பண்ணியிருக்கும் விதம் என வரும் போதுதான் தலைவன் குவாண்டின் நிற்கிறார்.

Jul 6, 2013

சிங்கம்-2

ஏகப்பட்ட எதிர்பார்பு. அதை விட ஏகப்பட்ட விளம்பரமென்று அமர்களத்தோடு வெளியாகியிருக்கிற படம். போன பார்ட்டில் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாய் உட்டாலக்கடி செய்து, ஸ்பெஷல் டூட்டியில் ரகசியமாய் ஜாயின் செய்து என்.சி.சி ஆபீஸாராய் வலம் வரும்  இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  என்.சி.சி அதிகாரியாய் இருந்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கள்ளக்கடத்தலை கண்காணித்து வருகிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு முக்கியமான நிலையை சமாளிக்க, மீண்டும் போலீசாய் வந்து எல்லாரையும் மூன்றடி எகிறி பாய்ந்தடித்து எப்படி வெற்றி கொள்கிறார் எனபது தான் கதை.

Jul 4, 2013

தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் -2013

முதல் மூன்று மாதங்களில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் வரிசை படுத்தினால் கண்ணா லட்டு தின்ன ஆசையா?, விஸ்வரூபம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்த மூன்று மாதங்களைப் பார்ப்போம்.

Jul 2, 2013

Mad Money

ஒரு கருப்பினப் பெண் கட்டுக்கட்டாய் பணத்தை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு  தம்பதியினர் அவர்களது கக்கூஸ் கம்மோட்டில் பேப்பர் ஷெட்ட்ரை வைத்து பணத்தை தூள் தூளாக வெட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருத்தியோ, அவளின் காதல் கணவனின் உதவியோடு, மொபைல் கேரவன் வீட்டில் பணத்தை Rube goldberg machine ஐடியாவை வைத்து  வெடி வைத்து தகர்த்து எரிக்கிறாள். இவர்களின் வயதான தம்பதியினரில் பெண்ணைத் தவிர மற்றவர்களை போலீஸ் கைது செய்கிறது. ஏன்? எதற்கு? என்பது தான் கதை.

Jul 1, 2013

கொத்து பரோட்டா -01/07/13

சமீபத்தில் நண்பர் ஒருவருடய மகனுக்கு கவுன்சிலிங்கில் ராஜலஷ்மி இன்ஜினியரிங் காலேஜில் மெக்கானிக்கல் செலக்ட் செய்திருக்கிறார். ஸ்ரீபெரும்பதூரில் இருக்கும் அந்த காலேஜுக்கு , மெயின் ரோடிலிருந்து காலேஜ் உள்ளே போக காரெல்லாம் வைத்து பெற்றோர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காலேஜுக்கு அழைத்து போனவர்கள். அவர்கள் காலேஜில் உள்ள அத்துனை வசதிகளையும் பெற்றோர்களை கூட்டிக் கொண்டு போய் காட்டியிருக்கிறார்கள். அங்கேயிருக்கும் காண்டீனில் மாணவர்களுக்கு சலுகை விலையில் சாப்பாடு போடுகிறோம். லேப் வசதி, மற்றும் பிற வசதிகளை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். கடைசியாய் பீஸ் கட்டும் வைபவம் வந்த போது  83 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கவுன்சிலிங்கில் வெறும் 43 ஆயிரம் தானே பீஸ் என்று கேள்வி கேட்க, வெறும் 43 ஆயிரத்தில் எப்படி நாங்கள் இவ்வளவு வசதிகளை மாணவர்களுக்கு செய்ய முடியும்? அரசுக்கு இதைச் சொன்னால் புரியாது. அத்தோடு நீங்கள் கூட கவுன்சிலிங்கில் இதே ஸ்ரீ பெரும்பதூரில் வேறு காலேஜ் இருந்தும் அங்கே போகாமல் ஏன் எங்கள் காலேஜை செலக்ட் செய்திருக்கிறீர்கள். நல்ல ரிசல்ட், மற்றும் வசதிகள் இருக்கின்றது என்பதால் தானே? எனவே 83 ஆயிரம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று ப்ரெஷர் போட்டிருக்கிறார். நண்பரிடமோ வெறும் ஐம்பதாயிரம்தான் இருக்கிறது. முன்பே இது போல சொல்லியிருந்தால் நாங்கள் தயாராக வந்திருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் கேட்ட தொகையை கொடுத்தால் பில் தருவீர்களா? என்று கேட்க, அதெல்லாம் தர மாட்டோம். வெறும் 43 ஆயிரத்துக்குத்தான் தருவோமென்று சொல்லியிருக்கிறார்கள்.கையில் காசில்லாமல், அதிக பணம் கட்ட மனசுமில்லாமல் நண்பர் மிச்ச பணத்தை கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே போல என் நண்பர் நடிகர் அவரின் பெண்ணிற்கு நல்ல பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்திருக்கிறது. அரசு நிர்ணையித்த தொகை தான் என்றாலும், அந்த பீசு, இந்த பீஸு என்று கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருகிறது என்று சொல்கிறார். அரசு நிர்ணையித்த தொகைவிட அதிகமாய் வாங்கக் கூடாது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் இன்னொரு பக்கம் கட்டிங்காய் பணம் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்து புகார் கொடுங்களேன் என்று சொன்னால் அப்புறம் புள்ளை படிப்பையில்லை கெடுத்திருவாங்க என்று பயப்படுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@

Jun 29, 2013

Balupu

 ரவி தேஜா ஒரு பேங்க கலெக்டிங் ஏஜெண்ட், அவரது அப்பா, ப்ரகாஷ்ராஜுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ப்ரம்மானந்தமும், ஸ்ருதியும் பணக்கார வீட்டு ஆட்கள், பொழுது போக்கிற்கு இளவயது பையன்களை காதலிப்பதாய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பறித்து அழ விடுவதுதான் இவர்களது வாடிக்கை. இவர்களின் ஆட்டம் தெரிந்த ரவிதேஜா ஸ்ருதிக்கு பாடம் புகட்ட நினைத்து பழக, அவர்களுக்குள் காதல் உண்டாகிறது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் வில்லன் கும்பல் ஸ்ருதியை கடத்துகிறது. அவர்கள் தேடி வந்த ஷங்கரும், நானாஜியும், வந்தால்தால் தான் ஸ்ருதியை விடுவோம் என்று சொல்ல, பின்பு என்னவாகிறது என்பதுதான் கதை.

Jun 25, 2013

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா

 
வெஜ் உணவு என்றால் சென்னையை பொருத்தவரையில் பதினோரு மணிக்குள் தேடினால் தான் கிடைக்கும். அதற்கு மேல் நல்ல சுவையான குவாலிட்டியான வெஜ் உணவு என்றால் நிச்சயம் ரோடு ரோடாய் அலைய வேண்டியதுதான். அந்த வகையில் 11.30 வரை அசோக் நகர் சரவண பவன் தான் கை கொடுக்கும். 3ஸ்டார் ஓட்டல் விலையென்றாலும், நல்ல சுவையான வயிற்றைக் கெடுக்காத உணவு நிச்சயம் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இரவில் சரவணபவனே தஞ்சம். சாப்பிட்டதற்கான பில் கொடுத்த அடுத்த நிமிடம் எடத்தை காலி பண்ணு என்று வெளியே துறத்தும் உணவகங்கள் இருக்குமிடத்தில், அதுவும் மூடுகிற நேரத்தில் நின்று நிதானித்து வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டு விட்டு கல்லாவை மூடும் பண்பிற்காகவே இங்கே சாப்பிட போகலாம். அசோக்நகரில் இவர்களுக்கு பதிலாய் இன்னொரு சைவ ஓட்டல் திறக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அசோக்நகர் கிட்டத்தட்ட சரவணபவன் ரிப்ளிக்காவில் ஒரு பாஸ்ட் புட் உணவகத்தை 7வது அவின்யூவில் திறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே ஓப்பன் கிச்சன். நின்று கொண்டும், உட்கார்ந்து சாப்பிடும் வசதியென்று. மங்களாம்பிகா என்ற பெயரில் இவர்கள் ஏற்கனவே கல்யாண கேட்டரிங் செய்து பிரபலமானவர்கள். இவர்களின் முதல் உணவகம் இது.

Jun 24, 2013

கொத்து பரோட்டா-24/06/13

விலையில்லா பொருட்களில் ஆரம்பித்து, மலிவு விலையில் உணவகம் தந்த வெற்றி, மேலும் அம்மாவை அம்மா வாட்டர், அம்மா காய்கறிக்கடை என்று ஆரம்பிக்க வைத்திருக்கிறது. வெளியே விற்கும் பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்படும் மக்களை காப்பாற்றவே இந்த முயற்சி என்று உட்டாலக்கடி அடித்தாலும், அரசின் இயலாமையைத்தான் காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் விலைவாசி உயர்கிறது என்றால் அதை கட்டுக்குள் கொண்டு வர அந்த மாநில ஆட்சியாளர்கள் தான் செய்ய முடியும். ஆனால் அதை விடுத்து, அரசே அதற்கு மானியம் கொடுத்து மானிய விலையில் கடை விரிக்கிறேன் என்று ஆரம்பிப்பது சரியான வழியாய் தெரியவில்லை. பத்து ரூபாய்க்கு  தண்ணீர் பாட்டில் என்று இன்றைக்கு அறிவித்தாலும், பிற்காலத்தில் அதே தண்ணீரை பிரிட்ஜில் வைத்து மேலு ஐந்து ரூபாய் வாங்கத்தான் போகிறார்கள் அதை நாமும் கேட்காமல் வாங்கிக் கொண்டுதான் வருவோம். நிச்சயம் மற்ற வாட்டர் கம்பெனிக்காரர்களின் லாபியிங்கை அரசு தடுக்க முடியாது. அல்லது முயற்சிக்காது. ஒரு வேளை பஸ் ஸ்டாண்டுகளில் அரசு அம்மா தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் விற்ககூடாது என்கிற மோனோபாலி விஷயத்தை அமல்படுத்தினால் ஓகே ஆகலாம். இது வரை அம்மா உணவகம் நல்ல படியாய் நடந்து கொண்டிருந்தாலும் அதனால் சுற்றியுள்ள கடைகளில் விலை குறைந்த பாடில்லை. அதே நிலைதான் காய்கறி கடைகளுக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. அரசு நினைத்தால் இம்மாதிரியான விஷயங்களில் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமான இடைதரகர்களை ஒழித்து, எம்.ஆர்.பியில் விற்கும் முறையை தயவு தாட்சண்யம் பாராமல் அமல் படுத்தினால் நிச்சயம் நடக்கும். ம்ம்ம்.. எங்கே.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்குவதையே தடுக்க முடியவில்லை. போகிற போக்கில் பார்த்தால் தமிழ்படத்தில் வருவது போல, அம்மா.. ஹாஸ்பிட்டல், ஓட்டல், பார், தண்ணீர், ஏர்போர்ட் என்று லைனாக ஆரம்பித்துவிடுவார்கள் போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 22, 2013

Raanjhanna

சில படங்களை ட்ரைலர் பார்த்த மாத்திரல் பிடிக்க ஆரம்பித்துவிடும். சிலதை நாலு பேர் சொல்லி அப்புறம் பார்க்க விரும்பம் ஏற்படும். இந்தப் படம் முதல் வகை. அதற்கு காரணம் முதல் முறையாய் தனுஷ் ஹிந்தியில். அடுத்தது ஏற்கனவே ஹிட்டடித்த தனு வெட்ஸ் மனுவின் இயக்குனர் இயக்கியது. மூன்றாவது காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.

Jun 21, 2013

Inglorious Basterds


குவாண்டின் இவரது பாதிப்பில்லாத இளைய தலைமுறை இயக்குனர்கள் இருப்பார்களா என்று சந்தேகமே. இவரின் படங்களை விரும்ப ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட போதைக்கு அடிமையானவர்களைப் போல. அவரிடமிருந்து விடுபட முடியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். பஃல்ப் பிக்‌ஷனை இன்றைக்கு ரிப்ரெஷ் செய்து கொள்ள பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதியதாய் ஒரு விஷயம் புலப்படும்.  

Jun 20, 2013

சினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.

ஆமாம் இன்னொரு ஆபத்துதான். ஏற்கனவே டிக்கெட் விலையேற்றத்தாலும், பைரஸியினாலும், நொந்து நூலாகிப் போய் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாளே மூன்று வாரங்கள் தான் என்று வந்துவிட்ட நிலையில் இருக்கிற தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு ப்ரச்சனை உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி இப்போதே திரைத் துறையினர் யோசித்து முடிவெடுக்க முடியவில்லையென்றால் இன்றைய நிலையில் வருமானம் வந்து கொண்டிருக்கும் மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸையும் நாம் இழந்துவிடுவோம்.

Jun 19, 2013

Man Of Steel

சமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி அவனும் ஒர் சாதாரணன். அவனுக்கு உணர்விருக்கிறது, காதல் இருக்கிறது என்று பழைய எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் தூசு தட்டி படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் நோலன் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவை ஏசு ரேஞ்சுக்கெல்லாம் தூக்கிப்பிடிப்பதை பார்க்கும் போது இனி ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்பேனா என்று சந்தேகமே.

Jun 18, 2013

Ankur Arora Murder Case

அங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய்  ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்டு ஆபரேஷன் நடக்கிறது. ஆபரேஷனுக்கு முன் வாய் மூலமாய் ஏதும் சாப்பிடக் கூடாது என்ற விதியை சிறுவன் மீறி விடுகிறான். ஆனால் அதை ஆபரேஷனுக்கு முன் சொல்லியும் விடுகிறான். ஆனால் அதை கண்டு கொள்ளாத சீப் டாக்டர் கே.கே.மேனன் ஆபரேஷன் செய்துவிடுகிறார். வெற்றிகரமாய் முடிக்கப்பட்ட ஆபரேஷனுக்கு பின் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிறுவன் கோமாவுக்கு போய் இறந்துவிடுகிறான். ஆஸ்பிட்டலில் இருக்கும் நேர்மையான ட்ரையினி டாக்டர் ஒருவரால் அது டாக்டரின் கவனமின்மை காரணமாய் ஏற்பட்டது என்று தெரிய கோர்டுக்கு வருகிறது கேஸ். பின்பு என்ன ஆனது என்பது தான் கதை.

Jun 17, 2013

கொத்து பரோட்டா -17/06/13

நேற்று கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எக்மோர் சென்றிருந்தேன். அமிர்தம் சூர்யா, வளர்மதி, லதா சரவணன், எஸ்.சங்கர நாராயணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தி புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை சொன்னார்கள். எனக்கு அமிர்தம் சூர்யாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவரை அவர் கலந்து கொண்டு பேச வேண்டிய புத்தகத்தைப் பற்றி படிக்காமல் வந்து பேசியதேயில்லை. முழுக்க படித்து, அப்புத்தகத்தைப் பற்றிய மிக இயல்பான விமர்சனத்தோடு சுவாரஸ்யமான பேச்சை பேசுவார். நேற்றும் அப்படித்தான் ஒரிரு கவிதைகளை படித்துக் காட்டியவர் அக்கவிதைகளை வரி பிரித்து சொல்லும் போது நிறைய அர்த்தங்கள் புரிபட ஆரம்பித்தது. கவிதைகளை எப்படி படிக்க வேண்டும் என்று புரிய ஆரம்பித்தது. கவிதைக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்று நினைப்பில் கவனமில்லாம இருந்த என்னைப் போன்றவர்களுக்கு அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு இன்ஞ் முன்னேறியிருக்கிறது  என தோன்றியது. நன்றி அமிர்தம் சூர்யா.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 16, 2013

Yeh Jawaani Hai Deewani

 நூறு கோடி வசூல். சூப்பர் ஹிட் என்றெல்லாம் செய்தி வந்தாலும் எப்படி இம்மாம் பெரிய படம் ஹிட்டானது என்று குழப்பமாகவே இருக்கிறது. வழக்கமான டெம்ப்ளேட் காதல் கதை. அதிலும் கரன் ஜோகர் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ஓடுகிறது.

Jun 15, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு!!

காதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட  குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது.  அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.

Jun 14, 2013

தில்லு முல்லு


ஹிந்தியில் கோல்மாலாய் வந்து பெரும் வெற்றி பெற்ற படம். பின்பு அதே படத்தை தமிழில் ரஜினி, பாலசந்தர் காம்பினேஷனில் வெளிவந்து, தமிழ் சினிமாவின் க்ளாஸிக்காய் இருந்து வரும் படம் தில்லு முல்லு. அந்த படத்தை மீண்டும் ரீமேக்கி வெளிவந்திருக்கும் படம். இத்திரைப்படத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன். நேற்றைக்கு பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யோக காட்சி திரையிட்டார்கள். மொத்த தியேட்டரும் குலுங்கி, குலுங்கி சிரித்ததை பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது. ரசிகர்களுக்கும் அதே மகிழ்ச்சியும் சந்தோஷமும்  தொடரும் என்ற நம்பிக்கையோடு.. 
கேபிள் சங்கர்

Jun 10, 2013

கொத்து பரோட்டா-10/06/13

மாலை நேரங்களில் சாலிக்கிராமத்திலிருந்து வடபழனி பஸ்ஸ்டாண்ட் வருவதற்கு தாவூ தீர்ந்து விடுகிறது. சரி அங்கே வந்த பிறகாவது வடபழனி வரை ஈஸியாய் போய்விட முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. முக்கியமாய் அருணாசலம் சாலையிலிருந்து கே.கே.சாலைக்கு திரும்பும் வண்டிகள், அம்பிகா எம்பயரிலிருந்து ப்ரசாத் லேப் பின் பக்கம் இருக்கும் ஏரியாவிலிருந்து வரும் வண்டிகள், எதிர்புறம் வரும் வண்டிகள் என்று பாட்டில் நெக் இடமாய் அமைந்துவிட்டது. மாலை நேரங்களில் அங்கே போலீஸாரை போட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தலாம். நேற்று ஆறரை மணிக்கு காரெடுத்து கிளம்பவன் அடுத்த நூறு மீட்டர் போவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆனது. அதுவும் நான் போக வேண்டிய ரோட்டுக்கு போக முடியாமல் மேலும் அரை மணி நேரம் காத்திருந்தும் பிரயோஜனமில்லாமல் கிலோ மீட்டர் சுற்றி போய் அங்கேயும் கொஞ்சம் நேரம் ட்ராபிக்கில் மாட்டி மெயின் ரோடை பிடித்தேன். ஏற்கனவே ஒரு கொத்து பரோட்டாவில் சொல்லியிருந்தது போல, வடபழனியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாலில் உள்ள தியேட்டர்கள் திறந்தவுடன் தான் தெரிய போவுது வடபழனியின் லட்சணம். கொஞ்சம் கவனிங்க போலீஸ் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@

Jun 7, 2013

கேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி

கேட்டால் கிடைக்கும் இந்தக்குழுவை முகப்புத்தகத்தில் ஆரம்பித்த போது நிறைய கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர, வளர, குழுவிலிருப்பவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். சமுதாயத்தில் ஒவ்வொரு சாதாரணனுக்கும் மறுக்கப்படும் அவனது உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய நிலையை குறைக்க வேண்டுமென்பதே அக்குழுவின் இலக்கு. அப்படி கேட்டுப் பெற்ற வெற்றிகளும், தோல்விகளும் நிறைய என்றாலும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட போராட்டம் ஒன்று தான் மால்களின் புட் கோர்ட்டுகளில் நடக்கும் கொள்ளை.  

Jun 6, 2013

Hang Over -3

உலகெங்கும் பாஸ்ட் அண்ட் புயூரியஸ் 6 வசூலில் கலக்கிக் கொண்டிருக்க, இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும், விமர்சகர்களிடையேயும், பாக்ஸ் ஆபீஸிலும் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட் தான் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ரீலீஸான நாள் முதல் ஹவுஸ்புல்லாத்தான் போகிறது.

Jun 4, 2013

சாப்பாட்டுக்கடை -Door No.27 Bada Kana Buffet

நன்றாக சாப்பிடவேண்டும் அதுலேயும் விதவிதமாய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிருக்கிறவர்களுக்கு சிறந்தது ப்ஃபேதான். கல்யாணங்களில் கூட இப்போதெல்லாம் 500 பேருக்கு மேல் என்றால் பஃபே சிஸ்டம்தான் வசதியாயிருக்கிறது வைத்து விடுகிறார்கள். டோர் நெ. 27 பற்றி சில மாதங்களுக்கு முன் தான் எழுதியிருந்தேன். முக்கியமாய் அவர்களுடய பிரியாணியையும் எண்ணெய் கத்திரிக்காயையும் சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போதே சொன்னார்கள் விரைவில் பஃபே சர்வீஸ் ஆரம்பிக்கப் போவதாய். அதுவும் வார இறுதி நாட்களில் மட்டும். அவர்கள் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்றிருந்தேன். 450 ரூபாய் என்றதும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. 50 அயிட்டங்களின் லிஸ்டைப் பார்த்ததும் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்தேன். நான் போயிருந்தது மதிய லஞ்சுக்கு.

Jun 1, 2013

Iddarammayilatho


இரண்டு பெண்களுடன் அதுவும் அல்லு அர்ஜுனோடு எனும் போது ஏற்படும் எதிர்பார்ப்பு ஒரு புறம் என்றால் பூரி ஜெகன்னாத்தின் இயக்கம் வேறு, டீசர்கள் வேறு பெரும் பில்டைப்பை கொடுத்திருக்க சென்னையிலேயே செம ஓப்பனிங். 

May 31, 2013

குட்டிப்புலி

 பக்கத்தூர்காரைங்க மேட்டு தெரு பொம்பளைகிட்ட வம்பு பண்ணான்னு சசிகுமார் அப்பாரு ஊடு பூகுந்து அவனை வெட்டுறாரு. வெட்டிட்டு தப்பிக்கையில மாட்டிகிறாரு. மாட்டினா முவம் தெரிஞ்சிரும்னு கூட வந்தவுக கிட்ட சொல்லி தலைய வெட்டி கொல்ல சொல்லி சாமியா ஊருக்குள்ள இருக்காரு. அப்பாரு மாரியே புள்ளையும் வளரக்கூடாதுன்னு வழக்கமா இந்த மேரி வேஷத்துக்குன்னே பொறப்பெடுத்திருக்கிற என்னைப் பெத்த தாயி சரண்யா நினைக்குது. பொறவு என்ன ஆவும்? அதும் மதுரை பக்கப் படம். வெட்டிக்கு சரக்கடிச்சிட்டு, லந்து பண்ணிட்டு திரிஞ்சிட்டு, ரவுடித்தனம் பண்ணாம அப்புறம் என்ன மதுரைப்படம். அதையேத்தேன் செய்யுறாரு நம்ம சசிகுமாரு. என்னதேன் ரெளடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சாலும் அவர் எம்.சி.ஆர் மாதிரி, நல்லதுக்குத்தேன் திருடுவாரு, பொம்பளைப்புள்ளைங்கள ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு. நியாயத்துக்குத்தான் அடிப்பாரு. அவருக்கு ஒரு கண்ணாலத்தை செஞ்சி பாத்திரமுன்னு ஆத்தாகாரி தலையால தண்ணி குடிக்கிறா மவன் வேணாங்குறான். என்னடான்னா.. நான் தெனம் ரவுடித்தனம் செஞ்சிட்டு திரியறவன் நாளை பின்ன எனக்கெதாவது ஒண்ணுன்னா என் ஆத்தாகாரி மாதிரி என் பொண்டாட்டி அழுவக் கூடாதுங்கிற நல்லெண்ணம்தேனு சொல்லுறான். பொறவு என்ன நடந்திச்சுங்கிறதுதான் கதைன்னு நினைக்கேன்.

May 30, 2013

இதுதான்டா க்ளைமாக்ஸ் -1

Horrifying Warning: 

Dear Gentle ladies and Gentlemen,

The below post is highly recommended for the adults whose mental capacuty is absolutely equivalent to 14 years or less aged children. It is going to be a mind and stomach teasing journey. Hence you are depanetly requested to keep one andaa full of chilled drinks. Gulp it at regular intervals in order to avoid smoke bursting out of your ears/stomach etc. Here we go.....


                                                                       

அதிர்ஷ்ட ரேகையின் அனைத்து கோடுகளும் நடுமுதுகில் ஆழமாய்ப்பதிந்த  சுபயோக தினமது. அம்மகோன்னத நாளின் நள்ளிரவில் சன் டி.வி.யில் துர்கா க்ளைமாக்ஸ். பராசக்தி, முள்ளும் மலரும், மௌனராகம் போன்ற ரசனையற்ற படங்களால் அக்மார்க் தமிழ் சினிமா ரசிகர்களை சீரழித்த ராகுகால யுகமொன்றில் இவ்வனைத்தையும் புறந்தள்ளி வந்தாரொரு மகராசன். அதன்பின் துர்கா மூலம் பட்டி தொட்டியெங்கும் நமது செல்லக்குட்டி ராமநாராயணனின் கும்தலக்கா சீசன். முழுப்படத்தை பற்றி சிலாகித்து எழுதினால் கலைஞர் வயதாகும் வரை தொடரலாம். Lets dip ourselves into the divine க்ளைமாக்ஸ் முமென்ட்ஸ் அலோன்!!

May 29, 2013

Aurangazeb

அர்ஜுன் கபூர் இஷ்குஜாதேவின் வெற்றிக்கு பிறகு வரும் படம். அதிலும் ரெட்டை வேடப் படம். அண்ணனுக்கு பதிலாய் தம்பியை அனுப்பி அப்பாவை வீழ்த்த ப்ளான் போடும் போலீஸ். அப்பாவுடனேயே இருந்து கொண்டு ஆட்டையை கலைக்கப் பார்க்கும் அம்ரிதாசிங்.  தன் சாம்ராஜ்யத்தை காக்க பிரயத்தனப்படும் அப்பா ஜாக்கி ஷெராப். ஜாக்கி ஷெராப்பின் சாம்ராஜ்யத்தை ஆள் மாறாட்டம் செய்து அவரை கைது செய்யாமல் அவரின் தொழிலை ஆக்கிரமிக்க நினைக்கும் போலீஸ் கமிஷனர் ரிஷிகபூர். அவரின் உறவினரான நடுநிலை போலீஸ் பிரிதிவிராஜ்.  அர்ஜுன் கபூரின் அம்மாவிற்கு ஒர் குழப்பமான கதை. அவருக்கும் பிரிதிவிராஜின் அப்பா அனுபம் கெருக்குமான உறவு என ஏகப்பட்ட சப் ப்ளாட்டுகளை ஒருங்கிணைத்த திரைக்கதை தான் ஓளரங்கசிப்.

May 28, 2013

The Great Gatsby

 டிகாப்ரியோ, டோபி மெக்குயர், கேரி முல்லிகன், அமிதாப்பச்சன், பஸ் லுஹுர்மேனின் இயக்கம், 3டியில் படமாக்கப்பட்டது என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். F. Scott Fitzgerald 1925ஆம் ஆண்டில் இதே பெயரில் எழுதிய நாவல்தான் இப்படம். ஏற்கனவே பல முறை ப்ராட்வே நாடகங்களாகவும், 1926ல் மெளன படமாகவும், 1949, 74, 2000 என மூன்று முறை  திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வந்த கதைதான். நம்மூர் அம்பிகாபதி, அமராவதி, வசந்த மாளிகை, தேவதாஸ் போல திரும்பத் திரும்ப சொன்னாலும் உருக வைக்கும் காதல் கதை.

May 27, 2013

கொத்து பரோட்டா -27/05/13

சமீபகாலமாய் திரையுலக செய்திகளும், சில பல சிறு விமர்சனங்களும் எஸ்.கே என்கிற பெயரில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். என்ன கேபிள் சங்கர் சினிமா ரிப்போர்ட்டர் ஆகிவிட்டாரா? என்று கூட சில பேர் கேள்வி கேட்டார்கள். இனி வரும் காலங்களில் நான் எழுதும் விஷயங்கள் மட்டுமில்லாமல் நம் தளத்தின் கண்டெண்டுக்காக ஒரு குழுவும் பயணிக்க இருக்கிறது. எனவே அவர்களுடய செய்திகள், கட்டுரைகளும்  பெயர்களுடன் இடம் பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@

May 25, 2013

Kamal hassan's Next with Lingusamy

Producer and director Lingusamy has confirmed that he will be producing Kamal Haasan’s next film. Kamal is currently shooting for Vishwaroopam 2 in Thailand. The film is going to be directed by kamal hassan.
SK

நடிகையின் டைரி

சில்க் ஸ்மிதாவின் நிஜமான வாழ்கையின் பின்னணியை,  டர்ட்டி பிக்சரில் சொன்னது எல்லாம் ஜுஜுபி.. நாங்க தான் ஒரிஜினலாக சொல்கிறோம் என்றார்கள். சனாகான் வேறு ரெண்டு நாளைக்கு ஒரு முறை நான் அப்படி பீல் பண்ணேன் இப்படி பீல் பண்ணேன். என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். இவ்வளவு பில்டப்புக்கும் இது தகுமா? எனற கேள்வியோடுதான் படம் பார்த்தோம்.
சனாகானை வைத்து ஒரு பிட்டு படமாகவும் இல்லாமல், சில்க் ஸ்மிதாவின் கதையாகவும் இல்லாமல், நடிகையின் கதையாகவும் இல்லாமல், மொக்கையானது தான் மிச்சம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஒரு தாடிக்காரர் இருந்தார் என்றதை வைத்துக் கொண்டு குறுந்தாடி வைத்த ஒருவரிடம் தன்னை கொடுத்து அவருடனே லிவிங் டூகெதராய் இருந்தார் என்றும், ஸ்மிதாவின் பணத்தை எல்லாம் அவர் தான் சுவாஹா செய்தார் என்றும், தாடிக்காரரின் வயது வந்த மகன் ஸ்மிதாவின் மேல் காதல் கொண்டதால் தான் சில்க் ஸ்மிதா தாடிக்காரரால் கொலை செய்யப்பட்டார் என்று கதை சொல்கிறார்கள்.
எஸ்.கே

May 24, 2013

செவிக்கினிமைகள்


மூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்..
அச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி.
கேபிள் சங்கர்

May 21, 2013

நேரம்


70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்
வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர், தங்கையின் கல்யாணத்துக்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் வேறு வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி ப்ரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி அஜாக்கிரதையா இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்திருக்க, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.