Thottal Thodarum

Sep 19, 2013

சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணவிலாசம்

நான்கைந்து பேர் போன் செய்துவிட்டார்கள். என்ன இன்னுமா அங்க போய் சாப்பிடலைன்னு. அவ்வளவு நல்லாருக்கான்னு கேட்டதுக்கு இல்லை சொன்னாங்க. நம்மளை லேப் எலி ரேஞ்சுக்கு தான் வச்சிருக்காங்கன்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில அப்படி என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம் ஓரத்தில இருந்திட்டேயிருந்தது.  சரின்னு தொட்டால் தொடரும் ஞாயிறு ஷூட்டிங் ப்ரேக்குல ஒரு நாள் மதியம் போனேன். ஞாயிறுங்கிறதுனால ஹடோஸ் ரோட் காலியா இருந்திச்சு. அவங்க கார் பார்க்கிங் புல். வாலட் பார்க்கிங் எல்லாம் வச்சிருக்கிறதுனால பார்க் பண்ணுற பிரச்சனையில்லை.


மாடியில் இருக்கும் ரெஸ்டாரண்டுக்கு போன போது நிறைய பேர் வெயிட்டிங்கில் இருந்தார்கள். நான் நேரே சென்று சிங்கிள் சீட் என்றதும் வரவேற்பில் இருந்த பெண்ணிடம் மலர்ச்சி. ஐந்து நிமிடம் என்று சொல்லிவிட்டு அடுத்தவரை பார்க்க போனாள். இருந்த பத்து சேர்களில் ஒர் பெண் மூன்று சேர்களில் தன் உடல் முழுவதையும் கிட்டத்தட்ட படுத்த நிலையில் சாப்பாட்டுக்காக காத்திருந்தாள். பக்கத்தில் ஒருவன் நிற்கிறானே அவனுக்கு உட்கார இடம் தருவோம் என்ற எண்ணம் கூட இல்லாமல். ரெண்டு மூன்று நாளாய் சாப்பிடாமல் வந்திருப்பாள் போல மயக்கமாய் இருக்குமென்று நினைத்துக் கொண்டிருந்த மூன்றாவது நிமிடத்தில் வரவேற்பு பெண் சிங்கிள் சீட் கொடுத்தாள்.
ரெஸ்டாரண்ட் முழுவதும் அதிக வெளுப்பான வெளுப்பு இல்லாத வெண்மை பரவியிருந்தது. டேபிளிலிருந்து.. வைக்கும் பீங்கான் தட்டு வரை. நடுவே டார்க் கலர் ப்ளூ என்று நினைக்கிறேன் அந்தக் கலரில் உடையணிந்த பணியாளர்கள். ஓனருக்கு நல்ல கலர் ரசனை என்று நினைத்துக் கொண்டிருந்த போது கல்யாண ஆல்பம் சைசுக்கு ஒரு மெனு கார்டை வைத்தார்கள். அதில் அவர்களைப் பற்றி சின்ன விளக்கம் வேறு கொடுத்திருந்தார்கள். திருநெல்வேலியிருந்து கேரளாவிற்கு மைக்ரேட் ஆன பரம்பரை என்பதால் இரண்டு விதமான கலாச்சார சமையலிலும் சிறந்தவர்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஒரு ரெஸ்ட்ராரண்டுக்கு உரிய அத்துனை அயிட்டங்களும் இருந்தது. வெஜிடேரியனில் எத்தனை அயிட்டங்கள் இருக்குன்னு கேட்பவர்களுக்கு இங்கே வந்தால் இம்பூட்டா என்று வாய் பிளப்பார்கள். மதிய நேரம் என்பதால் அவர்களுடய மீல்ஸ் ஆர்டர் செய்தேன்.  அடுத்து சில பல நிமிடங்களில் சதுர வடிவ பீங்கான் தட்டு ஒன்றும், ஒரு பாஸ்கெட்டில் தேங்காய் எண்ணெயில் பொரித்த இரண்டு அப்பளங்களும்  ஒரு டீ க்ளாஸில் தக்காளி சூப்பும் வந்தது. சூப் வழக்கம் போல நத்திங் ஸ்பெஷல்.வழக்கமாய் அப்பளம் ஏற்கனவே பொரித்து வைத்திருப்பதை தருவார்கள். அப்படியில்லாமல் சூடாய் பொரித்ததாய் இருந்தது. முதல் சுவையில் தேங்காய் எண்ணெய் லேசாய் வித்யாசம் தெரிந்தாலும் அப்பளத்தின் சுவையோடு எண்ணெய் சுவையும் சுவாரஸ்யமாக்க எனக்குள் அவர்களின் சாப்பாட்டுக்கான ஆவல் மேலும் அதிகமானது.
வித்யாசமான கப்புகளில் சக்கபிரதமன், கேரட் பீன்ஸ் தேங்காய் போட்ட பொரியல். ஒரு கூட்டு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, நெய் பருப்பு.  எல்லாவற்றையும் வரிசையாய் வைத்தார்கள். ஒரு சப்பை மூக்குக்காரன் அவசர அவசரமாய் சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு போக, ஏதாவது பொடி வகைகள் இருக்குமோ என்று வெயிட் செய்து கொண்டிருந்தேன். யாரும் என்னை சட்டை செய்வதாய் இல்லை. ரிஷப்ஷன் பெண் யாருக்கோ இடம் பார்க்க வர, அவளை கூப்பிட்டு கம்ப்ளெயிண்ட் செய்ததால் ஆளொருவன் வந்தான். பொடியெல்லாம் கிடையாது கொடுத்த அயிட்டங்கள் மட்டுமே.. வேண்டுமென்றால் ஊறுகாய் தருவோம் என்றான். சரியென்று தலையாட்டி விட்டு, சாதத்தில் நெய் பருப்பை போட்டுக் கொண்டு பிசைந்து சாப்பிட்டேன். சரியான விகிதத்தில் பருப்போடு நெய்யும், சரியான அளவு உப்பும் இருந்ததால் உடன் சாம்பாரை போட்டு பிசைத்து கொண்டு சாப்பிட்டேன். வாவ்.. நிஜமாகவே நன்றாக இருந்தது.  கூடவே அவர்கள் கொடுத்த காரக் குழம்பு போன்ற் அயிட்டத்தை போட்டுக் கொண்டதும் இன்னும் ஒரு முறை பருப்பு சாதம் உள்ளே போனது. அதை வெறும் காரக் குழம்பு என்று சொல்லி விட முடியாது. நன்றாக அரைத்துவிடப்பட்ட சற்றே கெட்டியான கிரேவி. நல்லெண்ணெயில் நன்றாக தாளிக்கப்பட்டதன் காரணமாய் கப்பிலிருந்து பேஸ்ட் உதறாமல் வழுக்கிக் கொண்டு தட்டில் விழுந்தது. நன்றாக வறுக்கப்பட்ட பருப்பு மற்றும் தேங்காய், கார மிளகாய் எல்லாம் போட்டு அரைத்து, திருநெல்வேலி ஸ்டைலில் இருந்தது. அதன் பிறகு சாப்பிட்ட சாம்பார் கொஞ்சம் ஓகே. ரசம் அவ்வளவு சிலாக்கியமாய் இல்லை. தயிர் புளிக்காமல் இருந்தது சந்தோஷம்.  எல்லாம் முடிந்து பில் வந்தது. டேக்ஸ் எல்லாம் சேர்த்து 252 ரூபாய். காரக்குழம்பைப் போல கொஞ்சம் வித்யாசமான குழம்பைத் தவிர இவ்வளவுக்கு ஒர்த் இல்லாத வைரைட்டி இல்லாத சாப்பாடு. இவ்வளவு காசு வாங்குகிறவர்கள் கீரை, வேறு சில அயிட்டங்களை சேர்த்து கொடுக்கலாம். ஆப்ஷன் இல்லாத டெம்ப்ளேட் சாப்பாடு. இதை விட திருவல்லிக்கேணி பாரதி மெஸ் சாப்பாடு  சுவை க்ளாஸ். சல்லீசான அம்பது ரூபாய்க்கு ஒரு பொரியல், கூட்டு, வடை, அப்பளம், காரக்குழம்பு, சாம்பார், ரசம், மோர், மோர் மிளகாய், ஊறுகாய், அளவு சாப்பாடு சல்லீசான ஐம்பது ரூபாய்தான். ஆனால் வொர்த் அதிகம். ஏசி போட்ட ரெஸ்டாரண்ட் என்ற வகையில் கம்பேர் செய்தால் சரவண பவன் போடும் சாப்பாட்டுக்கும் கீழே தான். வழக்கமான வெஜ் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு நாக்கு செத்தவர்களுக்கு இது நன்றாக இருப்பதாய் தெரியும். பட்.. சாப்பாட்டுக்கடை ஆட்களுக்கு ஒர் சிறிய அனுபவம் மட்டுமே. சர்வீஸ் படு மோசம்.  சாப்பாட்டை பொறுத்தவரை... காரக்குழம்பும், சக்கப்ரதமனுக்காக என்றால் ஒரு முறை செல்லலாம். This Restaurent is Over Rated and Priced ONe.
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

gbalaji said...

Location enga sir?

”தளிர் சுரேஷ்” said...

முதலில் நிறைகளை கூறி பின்னர் குறைகளை அடுக்கிவிட்டீர்கள்! நமக்கு இந்த அளவு கட்டுபடியாகாதுதான்!

Dwarak R said...

yes cableji, pretty average in terms of taste and service.
I have been here once for dinner.
Appam rubber mathiri irunthutu, tomato ottampam enn ponnu ketta,enapa tomato ketta.
Bharti mess munnadi pichai than edukkanum

building strong basement very weak.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் வீட்டு சாப்பாட்டைப் பற்றியும் ஒரு முறை எழுதுங்களேன்.