Thottal Thodarum

Sep 9, 2013

கொத்து பரோட்டா - 09/09/13

”இன்னைக்கு நான் இந்த நிலையில இருக்கிறேன்னா? அதுக்கு காரணம் என் உழைப்பு. சும்மா வந்திரல.. ” என்று வெற்றிப் பெற்றவுடன் சொல்வது சாதாரணம். ஆனால் வெறும் உழைப்பு மட்டும் ஒருவனின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்வேன்.  திறமை, உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்பைக் கொடுத்து ”நீ செய்.. நல்லா வரும்” என்ற ஆதரவை யாராவது நமக்கு கொடுக்காமல் போனால் வாழ்வின் அடுத்த கட்டம் என்பதேயில்லை. தானே நின்ற தானை தலைவன் என்று யாருமேயில்லை. அப்படி பல பேரின் அன்பினால் வளர்க்கப்பட்டு இதோ “தொட்டால் தொடரும்” படத்தின் மூலம் தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரன் மூலமாய் இயக்குனர் ஆகியிருக்கும் இந்நேரத்தில முதல் குறும்பட வாய்ப்பை அளித்த என் தொழில் முறை நண்பர் குலாமுக்கும், நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் சூதுகவ்வும் சிவகுமாருக்கும், விளம்பர ப்டம்  இயக்குனராக்கி முதல் சினிமா செய்வதற்கான அட்வான்ஸ் கொடுத்த இமயம் நெய் உரிமையாளர், துரைராஜுக்கும், சீரியலில் முதல் திரைக்கதை, வசனம், இயக்கும் வாய்ப்பை அளித்த இயக்குனர் என்.வி.நடராஜனுக்கும், கலகலப்பு மூலமாய் என் சினிமா பாதைக்கு புதிய பாதை அமைத்துக் கொடுத்த  இயக்குனர் பத்ரி அவர்களுக்கும் வசனகர்த்தாவாக்கிய இயக்குனர் சக்திவேலுக்கும் என் நன்றியை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நேரில் சென்று அழைக்கவில்லை, போன் செய்து கூப்பிடவில்லை. வெறும் எஸ்.எம்.எஸ் மூலமும், பேஸ்புக் டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய அன்பு இணையதள நண்பர்களுக்கும், நம்மில் ஒருவன் என்ற நட்புணர்வோடு வந்திருந்து வாழ்த்திய பத்திரிக்கையாள நண்பர்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும், ஆகியோருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றிகள். 
@@@@@@@@@@@@@@@@@@@@


என் ட்வீட்டிலிருந்து
சமீப காலமாய் மொக்கை காமெடி என்று விமர்சிக்கப்பட்ட படங்கள் தான் வசூலில் பின்னியெடுக்கிறது. #அவதானிப்பூ
சகோதரிகளோடு நடந்து பழக்கப்பட்டவனுக்குத்தான் தெரியும் எதிரில் வரும் ஜோடிகள் எல்லாம் காதல் ஜோடியில்லையென்று.# அவதானிப்பூ
அடாது மழையில் நனைந்து கொண்டு போனால் பவர் கட்.. வெளங்குனாப்போலத்தான்
பெட்ரோல் பதுக்கல் அதிகமாகத்தான் இவர்கள் ஐடியா உதவும்
கல்யாணத்த நிறுத்துறதுக்கு சீப்பை எடுத்து ஒளிச்சு வைக்க ஐடியா மாதிரி தான் இவனுங்க பெட்ரோல் பங்கை 8-8 நடத்துற ஐடியா.#ங்கொய்யால..
பத்து பைசா வருமானம் வராத பதவிகளுக்கு எதுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து பார்ட்டி என்று தெரியவில்லை. #என்னவோ இருக்கு
பொறுமை என்பது சிரித்துக் கொண்டே கோபத்தை அடக்கிக் கொள்வது #அவதானிப்பூ
பெரும்பாலான ஆண்களின் முதல் காதல் டீச்சராகத்தானிருக்கும் என்பது என் அவதானிப்பூ
ஏனோ தெரியவில்லை ரேவதி டீச்சர் நியாபகம் வந்து கொண்டேயிருக்கிறது. நான் பத்தாவது படிக்கும் போது 12 பயாலஜி டீச்சர்.:)
நல்லால்லைன்னு சொன்னா நம்மளை ஒதுக்கிருவாங்கன்னு பயப்படுறவங்க தினமிது.#சாக்குரதை
மனம் திரும்புங்கள். பரலோகம் சமீபத்திருக்கிறது. நல்லதா கெட்டதா? #வாக்கிங் அவதானிப்பூ
வாழ்வின் பிரதிபலிப்பாய் இல்லாமல் தனக்குமட்டுமேயான உலகத்தை நிஜமென வெளிப்படுத்தும் படைப்புகள் சோபிப்பதில்லை.
வாழைப்பழமோ? வாழ்க்கையோ தொலைச்சவங்களோட உணர்வுன்னு வரும் போது முக்யத்துவம் ரெண்டுத்தும் ஒண்ணுதான். பிலாசபி.:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு வழியாய் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது. இம்முறை கே.ஆர். தலைமையிலான டீம் க்ளீன் ஸ்வீப் அடித்திருக்கிறது. வெறும் எட்டு நூற்றுச் சொச்ச ஓட்டுகள் இருக்கும் தேர்தலுக்கு இவ்வளவு பில்டப், போலீஸ் பாதுகாப்பு எல்லாம் . பணமாய் பத்து பைசா கூட லாபமில்லாத இந்த பதவிகளுக்கு எத்தனை பார்ட்டிகள். கேன்வாஸ்கள். எது எப்படியோ இம்முறை தலைவராக வந்திருக்கும் கே.ஆர் தலையிலான அணி தயாரிப்பாளர்களுக்கு நலம் சேர்க்கும் விஷயங்களை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருடன் வெற்றி பெற்ற பெரும்பாலர்கள் தற்போது படமெடுத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே தயாரிப்பாளர்களாய் இவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள நிச்சயம் ஒன்று சேர்ந்து உழைப்பார்கள் என்ற நம்பிக்கை தான் கே.ஆர். தலைமை மீது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இலவச வேட்டி சேலை, மருத்துவம், வீடு கட்ட இடம் என்பதை தாண்டி, சாட்டிலைட் ரைட்ஸ், பாடல்கள், க்ளிப்பிங்க்ஸ் உரிமை, ஆடியோ ரைட்ஸ் ப்ரச்சனை, கேபிள் டிவி, மற்றும் இண்டர்நெட் ரைட்ஸ், என தயாரிப்பாளர்களுக்கு நிறைய விஷயங்களில் தியேட்டர் மூலமாய் வரும் பணம் மட்டுமேயல்லாமல் வழியிருக்கிறது. அவையெல்லாவற்றையும் சரி செய்தாலே தயாரிப்பாளர்கள் நலிந்து போகாமல் வாழ்வார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாளையிலிருந்து தொட்டால் தொடரும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. ரெண்டொரு மாதத்திற்காகவாவது எழுத முடியாது என்று தோன்றுகிறது. அவ்வவ்போது வருகிறேன். அதுவரை உங்கள் அன்பும் ஆசியோடு.. @@@@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லோரும் எதிர்பார்த்த கோச்சடையான் டீசர் வெளி வந்துவிட்டது. ரஜினி கடைசியில் ஹை ஸ்பீடில் சிரித்தபடி நடந்துவருமிடம் அழகு. பட் ஓவராலாய் பார்க்கும் போது டீசரில் இருக்கும் அனிமேஷன் கொஞ்சம் மொக்கைத்தனமாய்த்தான் தெரிகிறது. லெட்ஸ் சீ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராஜேஷின் ட்ரேட் மார்க் தம்மு, தண்ணி, காம்பினேஷன் டீசர். சூப்பராய் ஒர்க்கவுட் ஆகியிருக்க வேண்டும். ஜஸ்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று நீயா நானாவில் காதல் திருமணத்தை தடுக்கும் பெற்றோர்கள். எதிர்த்து கல்யாணம் செய்த பிள்ளைகள் நிகழ்ச்சி. செம சுவாரஸ்யமாய் இருந்தது. கல்யாணம் பண்ணி ஜெயிச்சவங்க ஒரு பக்கம் பாத்தியா? நாங்க எப்படி இருக்கோம்னு சொல்ல, இன்னொரு பக்கம் நாங்க ஒண்ணும் தப்பா சொல்லலை. காத்திட்டிருந்து கல்யாணம் பண்ணியிருக்கலாம் என்று சினிமா வில்லத்தனம் எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு செண்டிமெண்ட் பேசிய அம்மாக்களையும் கிடைத்த கேப்பில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார் கோபிநாத். யார் வீட்டுலயோ, எங்கயோதானே.. நமக்கு வராத வரைக்கும் அது வெறும் நியூஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Johnny noticed that Jimmy was wearing a brand new, shiny watch. “Did you get that for your birthday?” – asked Johnny.
“Nope.” – replied Jimmy. “Well, did you get it for Christmas then?”
Again Jimmy said “Nope.” “You didn’t steal it, did you?” – asked Johnny.
“No,” said Jimmy. “I went into Mom and Dad’s bedroom the other night when they were ‘doing the nasty’. Dad gave me his watch to get rid of me.”
Johnny was extremely impressed with this idea, and extremely jealous of Jimmy’s new watch. He vowed to get one for himself. That night, he waited outside his parents’ bedroom until he heard the unmistakable noises of lovemaking.
Just then, he swung the door wide open and boldly strode into the bedroom. His father, caught in mid stroke, turned and said angrily. “What do you want now?” “I wanna watch,” Johnny replied.
Without missing a stroke, his father said, “Fine. Stand in the corner and watch, but keep quiet.”
கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஆதரவை யாராவது நமக்கு கொடுக்காமல் போனால் வாழ்வின் அடுத்த கட்டம் என்பதேயில்லை...///

உண்மை... வாழ்த்துக்கள்...

ivpkpm said...

கேபிள் சார் நேத்து உங்க பிளாக்க நான் பாக்குல இன்னைக்குத்தான் பார்த்தேன்.ரொம்ப சந்தோஷம் போன வருஷம் கலகலப்பு டைம்ல உங்க கிட்ட பேசும்போது நான் சொன்ன உங்களுக்கு நியாபகம் இருக்கா ? அடுத்த வருஷம் நீங்க டைரக்டர் ஆகிருவீங்கன்னு அதுதான் என்னோட வேண்டுதல்னு சொன்னேன்.அது நடந்துருச்சி கடவுள் எப்போதும் உங்க துணை நிற்பார்.

Indian said...

உங்களின் படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்!

அடல்ட் கார்னர்... good one after a long while.

ஒரு வாசகன் said...


ஏன் ஸார் படப்பிடிப்பில் ரொம்ப பிசியோ..... போன முறை அடல்ட் கார்னர் இந்த முறையும்

http://www.cablesankaronline.com/2013/08/260813.html

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...

ஆராவாரமாய்த் தொடங்குங்கள்...
வாழ்த்துக்கள்....

புதுகை.அப்துல்லா said...

// இந்நேரத்தில முதல் குறும்பட வாய்ப்பை அளித்த என் தொழில் முறை நண்பர் குலாமுக்கும்,//

அது இன்னாய்யா ஒன்னைய சுத்தி பெரும்பாலும் பாய்ங்களா இருக்காங்க? அப்படி இன்னா அட்டாஸ்மென்டு? :))

குரங்குபெடல் said...

புதுகை.அப்துல்லா said...
// இந்நேரத்தில முதல் குறும்பட வாய்ப்பை அளித்த என் தொழில் முறை நண்பர் குலாமுக்கும்,//

அது இன்னாய்யா ஒன்னைய சுத்தி பெரும்பாலும் பாய்ங்களா இருக்காங்க? அப்படி இன்னா அட்டாஸ்மென்டு? :))


Due To MUTTON BIRIYANI ?

துபாய் ராஜா said...

http://cinema.dinamalar.com/tamil-news/14480/cinema/Kollywood/Thaman---Arundhathi-in-Cable-Sankar-Movie.htm

//கேபிள் சங்கர் படத்தில் தமன், அருந்ததி!!

இணையதள சினிமா விமர்சகர் கேபிள் சங்கர் டைரக்ட் செய்யும் படம் தொட்டால் தொடரும். துவாரகி.சந்திரசேகர் தயாரிக்கிறார். ஏற்கனவே பாடலாசிரியர் ஏகாதசி இயக்கிய கொஞ்சம் கொஞ்சம் மழை படத்தை தயாரித்தவர். அமலாபாலை வீரசேகரன் படத்தில் அறிமுகப்படுத்தியவர். தற்போது கேபிள் சங்கரின் படத்தை தயாரிக்கிறார். ஹீரோவாக சட்டம் ஒரு இருட்ரை ரீமேக், சும்மா நச்சுனு இருக்கு படங்களில் நடித்த தமன் குமார். ஹீரோயின் வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வரும் அருந்ததி.

"இது காமெடி திரில்லர் மூவி. ஏற்கனவே பல படங்களின் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். பட படங்களை நேர்மையாக விமர்சித்திருக்கிறேன். அந்த அனுபவங்களின் அடிப்படையில் இதை டைரக்ட் செய்கிறேன். திட்டமிட்டபடி, திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க இருக்கிறேன்" என்கிறார் சங்கர்.//


வாழ்த்துக்கள் தலைவரே...