Thottal Thodarum

Sep 30, 2013

கொத்து பரோட்டா - 30/09/13

தொட்டால் தொடரும்
பதிவர் சந்திப்பின் போது எனக்கு போன் செய்து நானெல்லாம் வரலாமா? என்றவரிடம் தாராளமா என்றே காலையிலேயே வாயில் பைப் சகிதமாய் வந்துவிட்டார். லஞ்ச் டைமில் “கேபிள் உன் படத்தில நான் நடிக்கணும். ஒரு சான்ஸ் கொடு. சும்மா வாயில பைப் வச்சிட்டு பாஸிங்கில போற மாதிரியிருந்தாக் கூட பரவாயில்லை.. நான் இருக்கணும் உன் படத்துல என்றார். அப்போதைக்கு அவருக்கு என்ன கேரக்டர் கொடுப்பது என்று யோசனையில்லாமல் நிச்சயமா சார்.. என்றேன். ஷூட்டிங்கின் போதுதான் வயதான மிடில் க்ளாஸ் பெண்கள் பத்திரிக்கை ஆசிரியர் கேரக்டருக்கு ஆள் யோசித்த போது சட்டென ஞாபகம் வந்த முகம் பாரதி மணி சாருடய முகம்தான். ஒரே ஒரு காட்சிதான் வரும் எப்படி அவரை அழைப்பது என்ற யோசனையில் அவருக்கு போன் போட்டேன். விஷயத்தை சொன்னேன். பாஸிங்கில வர்றேன்னு சொன்னது சுமமா இல்லை கேபிள் நிஜமாத்தான் என்ற சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார். அவரின் இயல்பான நடிப்பினால் காட்சியின் முடிவு இன்னும் மெருகேறி சிறப்பாக வந்தது. எனக்கு திருப்தி. ஆனால் அவரோ இன்னும் வேற வேற மாடுலேஷன்ல பேசுறேன் நன்னாயிருந்தா எடுத்துக்கோ.. என்றார். நன்றி சார்.. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@லூசியா
க்ரவுட் பண்டிங் எனும் முறையில் ஹாலிவுட்டில் நிறைய ப்டங்கள் தயாரித்து வெளி வந்திருக்கிறது. ஹிந்தியில் சில படங்கள் வந்து வெளிவந்து ஹிட்டடித்து, அதே கம்பனிகள் கார்பரேட் கம்பனியகாவும் மாறியிருக்கிறது. கன்னடத்தில் லூசியா எனும் திரைப்படம் க்ரவுட் பண்டிங் மூலம் பணம் சேகரிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. எழுதி இயக்கியவர் பவன் குமார். ஷூட்டிங் காரணங்களினால் பார்க்க முடியவில்லை. ஆன்லைனில் பணம் கட்டி  இங்கிலீஷ் சப்டைட்டிலோடு பார்க்க  http://www.hometalkies.com/lucia/ செல்லவும். இம்மாதிரியான படங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு நல்ல சினிமா வர ஏதுவாக அமையும். நானும் படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராஜா ராணி
நிறைய ஹைஃப். இண்ட்ரஸ்டிங்கான ஆர்டிஸ்ட் காம்பினேஷன். வழக்கமான போல்ட் பெண், குழந்தைத்தனமான லூசுப் பெண். அதே போல வைஸ் வர்சாவான  ஆண் கேரக்டர்கள். மெளனராகத்தின் ரீமிக்ஸ்டு வர்ஷனாய் போகிறது படம். அருமையான ஒளிப்பதிவு. சுமாரான பின்னணி மற்றும் பாடல்கள். ரிச்சான வீஷுவல்ஸ், ஆண்ட் ஆர்ட் டைரக்‌ஷன். ஜாலியான முதல் பாதி, ராஜா ராணி ஓக்க்க்க்க்க்க்க்கே
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அசோக்நகரில் வேக்கம்ப்ரஸ் வைத்து ஷூட்டிங். காரின் டிக்கி ஸ்பேசில் நானுன் என் இணை இயக்குனரும் ஒளிந்து படுத்தபடி நடிகர்களுக்கான டயலாக்கை சொல்லிக் கொடுத்தபடியே செல்ல, நான்கு மணி நேரத்திற்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. வேறு ஒரு பொஷிஷனுக்கு கேமராவை மாற்றி வைக்கும் நேரத்தில் நானும் கதாநாயகன் தமனும் பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்களை க்ராஸ் செய்தவர் எங்களின் பேச்சுக்கிடையே வந்து “சாரி.. நீங்க கேபிள் சங்கர் தானே?” என்றார்.  ஆமாம் என்றேன். உங்க தொட்டால் தொடரும் பட ஷூட்டிங்கா? இவர் தானே ஹீரோ தமன்? நான் உங்களின் எழுத்தை தொடர்ந்து படிச்சிட்டிருக்கேன். நல்லா வரும் வாழ்த்துகள். கார்க்கி பவா எங்க? என்று கேட்க, அவன் லொக்கேஷன் பார்க்க போயிருப்பதாய் சொன்னேன். மேலும் உங்களை டிஸ்ட்ரப் பண்ண விரும்பலை என்று பரபரப்பாய் கை கொடுத்துவிட்டு, சிரித்தபடி எங்களிடமிருந்து விலகினார். நன்றி நண்பா.. உன் வாழ்த்துக்கும் அன்புக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
காலை வாக்கிங்கின் போது அப்பா, பெண் இருவர் அடுத்தடுத்து ரெண்டு ஆட்டோக்களை நிறுத்தினார்கள். குனிந்து அவர்கள் போக வேண்டிய இடத்தை சொல்ல, அவர்களுக்குள் பேரம் பேச ஆரம்பித்து, சட்டென ஏறி போனார்கள். அரசு நிர்ணையித்த கட்டணத்தை அமல்படுத்த அரசு ஒரு பக்கம் தீவிரமாய் வேலை செய்து கொண்டிருக்க, பொது மக்களாகிய நாம் தான் அதை நடைமுறை படுத்த உதவ வேண்டும். இன்னமும், பேரம் பேசி ஆட்டோவில் செல்லாமல் எங்கே போனாலும் மீட்டர் போடச் சொல்லுங்க.. ப்ளீஸ்.. கேட்டால் நிச்சயம் கிடைக்கும். கிடைக்கிற காலமிது..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
0% வட்டியில் மாதத் தவணையில் பொருட்களை வாங்க நமக்கு மெயில் மேல் மெயிலாய், விளம்பரங்கள் வாயிலாகவும் கூவிக் கூவி கொடுத்துக் கொண்டிருந்ததை ஆர்.பி.ஐ தடை செய்திருக்கிறது. நம் கண்ணுக்கு தெரியாமல் அப்பணத்துக்கான வட்டியை முன்னரே ப்ராசசிங் பீஸ் என்று பிடுங்கிக் கொண்டுதான் நமக்கு கடன் அளிக்கிறார்கள். பேங்குகளே இப்படி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கும் வேலையை செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றியிருப்பது வரவேற்க தக்க ஒன்றே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Dad, what does a vagina look like before sex? A pink rose with lovely details. And after sex? Boy, ever seen a bulldog eating mayonnaise?
கேபிள் சங்கர்


Post a Comment

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கொத்துப்பரோட்டா அருமை.

படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா....