உக்காந்து யோசிப்பாங்க போல..
ரெண்டொரு நாள் முன் நண்பர் ஒருவர் தன்னுடன் வந்தவரை ஒரு விநியோகஸ்தர் என்று அறிமுகப்படுத்தினார். அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தலுக்கான பார்ட்டி. மரியாதை நிமித்தமாய் வணக்கம் சொல்லிவிட்டு நகர எத்தனித்த போது விநியோக நண்பர் என் கையை பிடித்துக் கொண்டு “எங்க கிளம்பிட்டீங்க?” என்றார். லேசாய் மப்பிலிருந்தார். நான் சகஜமாகி “சொல்லுங்க” என்றேன். சூது கவ்வும் டைரக்டர் உங்க ஃப்ரெண்டா?”
“ஆமாங்க”
“நான் சமீபத்துல பார்த்த பெஸ்ட் படம். எம்.ஜி.ஆர் படத்துக்கு அப்புறம் வாழ்க்கையோட தத்துவத்தை சரியா சொன்ன டைரக்டர் அவருதான். அவரை பார்த்தீங்கன்னா நான் சொன்னேன்னு சொல்லுங்க” என்றார்.
சூது கவ்வுமில் வாழ்க்கையின் தத்துவமா? என்று புரியாமல் நான் விழிக்க, என் விழிப்பை பார்த்த நண்பர் “புரியலை இல்லை” என்று சந்தோஷமாய் சிரித்து,
”படத்துல அஞ்சு ரூல் இருக்குல்ல அதுல அஞ்சாவது ரூல் என்ன?”
எனக்கு சட்டென ஞாபகம் வரவில்லை. கொஞ்சம் யோசிக்க, ‘ அதிகாரத்தில் கை வைக்காதே என்னா ஒரு தத்துவம் என்னா ஒரு தத்துவம்” என்று சொல்லிவிட்டு தானே சிரித்தபடி “பாருங்க... அதிகாரத்துக்கு வரணும்னு ஆசைப்பட்டு டைம் டூ லீட்னு பெயர் போட்டு அதிகாரத்துல கை வச்சாங்க. ஆப்பாயிருச்சு இல்லை. இதை விட வேறென்ன சொல்லணும்.” என்றார். உக்காந்து யோசிப்பாய்ங்க போல...
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Small Correction
கக்கூஸ்ல உக்காந்து யோசிப்பாய்ங்க போல...
if you want i will show your own article about 'freedom of expression' during viswaroopam.
you didnt write a single post about thalaivaa politics or about the movie.
no matter how worst thalaivaa is doesnt vijay has the right to express his thoughts?