Thottal Thodarum

Sep 16, 2013

கொத்து பரோட்டா -16/09/13

தொட்டால் தொடரும் படப்பிடிப்பு பத்தாம் தேதி முதல் ஆரம்பித்து வருகிற பதினேழாம் தேதியுடன் முதல் ஷெட்டியூல் இந்திய சினிமா நூற்றாண்டு விழா விடுமுறை காரணமாய் முடிந்து, 25ஆம் தேதி முதல் இரண்டாவது ஷெட்டியூல் ஆரம்பமாகிறது. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டியதுதான். ஆனால் அதற்காக ஒரு வார காலம் விடுமுறை என்பது கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் தேதிகள் குழப்படிக்க வாய்ப்பிருக்கிறது. யார் யார் எல்லாம் பங்கேற்க்க போகிறார்களோ அவர்களை தவிர மற்றவர்கள் அவர்கள் வேலையை செய்யலாம் என்று வைத்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@


மூடர் கூடம்
தொட்டால் தொடரும் படப்பிடிப்பும் அதன் சார்ந்த வேலைகள். நடுவே வந்த பொன்மாலை பொழுது, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களை பார்க்க நேரமேயில்லை. இவற்றையெல்லாம் மீறி வந்த சிறந்த விமர்சனங்கள் காரணமாய் மூடர் கூடத்தை பார்த்தே ஆக வேண்டுமென்ற முடிவோடு, சனி இரவு ஷூட்டிங் முடிந்த கையோடு போய் பார்த்தேன். நான்கு முட்டாள்கள் சேர்ந்து வீட்டில் உள்ளவர்களை ஹோஸ்டேஜாய் வைத்து பணத்தை கொள்ளையடிக்க செய்யும் முயற்சிதான் படமென்றாலும், அதை சொன்ன விதத்தில் நம்மை அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் நவீன்.  ஒருவரை ஒருவர் வாரி விடுவதும், கதையே இல்லாமல் பத்து சீனுக்கு ஒரு சீன் என்ற கணக்கில் வரிசையாய் காமெடிகள் வந்து கொண்டிருக்கும் காலத்தில் இப்படியான ப்ளாக் காமெடி படங்கள் தமிழ் சினிமா வளர்ச்சிக்கான நல்ல விஷயம். முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாவது பாதி ஒவ்வொருவருக்குமான ப்ளாஷ்பேக் என நீட்டி முழக்கி கொட்டாவி வர வழைக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஓரளவிற்கு அது நிஜமே. குட்டிக் குட்டியாய் நிறைய விஷயங்களை கவனித்து வைத்திருக்கிறார் இயக்குனர். கஞ்சா வாங்க வரும் வெள்ளைக்காரன் பனியனில் காந்தி தாத்தா படம் என படம் நெடுக குட்டிக் ஹைக்கூக்கள்.  நேரத்தை குறைத்திருக்கலாம் என்று எண்ணி படத்தில் கைவைத்தால் நிச்சயம் கஷ்டம் தான். இதை ஸ்கிரிப்டாய் இருக்கும் நிலையிலேயே கொஞ்சம் எடிட்டியிருந்தால் இன்னும் சிறப்பாய் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. நிச்சயம் கவனிக்கத்தக்க, ஒர் சிறப்பான ப்ளாக் காமெடி. வாழ்த்துகள் நவீன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து 
ஸ்கிரிப்ட் அளவிலேயே எடிட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? But another good Noir comedy #மூடர் கூடம்
 • அதிகாலை மழைக்கு பின் போகும் வாக்கிங்கை ஜாகிங் ஆக்கும் வித்தை சென்னை சாலைகளுக்கு மட்டுமே தெரிந்தது.

  • எல்லோருக்குள்ளேயும் ஒர் நடிகனிருப்பது அவரவர் டிபியில் தெரிகிறது.
   @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
   ஓட்டல்களில் விலைவாசியை குறைக்க முடியவில்லையா?  உடன் அரசே அம்மா உணவகங்களை ஆரம்பித்தது. காய்கறி விலையை குறைக்க முடியவில்லையா?  காய்கறி கடை ஆரம்பி, தண்ணீர் பாட்டில் விலையை குறைக்க முடியவில்லையா? தண்ணீர் பாட்டில் கம்பெனி ஆரம்பி.. இப்படி தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போகும் விஷயங்களை அரசு தன் கட்டுக்குள் கொண்டு வர முடியாத கையாலாகத்தனத்தை என்ன  சொல்வது?. விரைவில் அரசு பெட்ரோல், சமையல் எண்ணெய் என்று ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்.
   @@@@@@@@@@@@@@@@@@@@@@@
   நூற்றாண்டு விழாவில் நான்கு மாநில மொழியின் சிறந்த படங்களை சத்யம், உட்லண்ட்ஸ் போன்ற திரையரங்குகளில் போடுகிறார்கள். தமிழின் சிறந்த படங்களாய் அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், சிரித்து வாழ வேண்டும் என்ரு பெரிய எம்.ஜி.ஆர். பட லிஸ்ட்டும், சிவாஜி படங்களும் இருக்கிறது. இத்தனை வருடங்களில் சிறந்த க்ளாஸிக் வரிசையில் எம்.ஜி.ஆர். சினிமாவைத் தவிர வேறேதும் படங்களே வரவில்லையா? இந்த லிஸ்டில் வரும் புதிய படங்களின் பெயரைக் கேட்டால் நொந்து போய்விடுவீர்கள்.
   @@@@@@@@@@@@@@@@@@@
   சமீபத்தில் வந்த காதல் பற்றிய பெயரோடு வந்த திரைப்படம் சென்னை மற்றும் பெருநகரங்களைத்தவிர பெரிய வரவேற்ப்பில்லாமல் போய்விட்டது என்று விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தும் ஏன் ஓடவில்லை என்று ஒரு அனாலிஸிஸ் செய்த போது கண்டு கொண்ட விஷயங்கள்
   1) முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இந்தப் படம் பிடித்திருக்கிறது.

   2) அப்பர் மிடில் க்ளாஸ், அப்பர் கிளாஸ் தவிர ப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது கொஞ்சம் பெரும் கனவே. அதை மீறி லட்டு லட்டான பிகர்களை ஆளாளுக்கு மகாபலிபுரம் சென்று மேட்டர் முடிப்பது சாத்தியமில்லாதது என்று பெரும்பாலான மிடில் க்ளாஸ் ஆண்/ பெண்களின் ஒர் முயற்சி.

   3)குடும்பத்தோடு, குத்துப் பாட்டை பார்க்கும் மக்களுக்கு கொஞ்சம் செக்ஸ் பற்றியோ, அல்லது அது கொடுக்கும் ஆர்வம் எங்கு கொண்டு போய் விடும் என்பதைப் பற்றியோ படத்தில் காட்டினால் நெளிகிறார்கள்.

   4) எந்த ஒரு பையனும் தன் கேர்ள் ப்ரெண்டோட இந்த படத்துக்கு போக மாட்டான் ஏன்னா.. நாளை பின்ன கொஞ்சம் கரக்ட் பண்ணி பிக்கப் பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்த நேரத்தில இதைப் பார்த்து அவ வர மாட்டேன்னு சொல்லிட்டான்னா என்ன ஆகும் என்கிற எண்ணமும் ஒர் காரணம். உட்கார்ந்து யோசிக்கிறோமோ?
   @@@@@@@@@@@@@@@@@@@
   அடல்ட் கார்னர்
   What's the difference between your job and your wife?Your job still sucks after five years!

Post a Comment

2 comments:

Unknown said...

டைட்டில் பிரச்சினை ,இப்போ ஒரு வார விடுமுறை பிரச்சினை ..இப்படி தொட்டால் தொடரும் சோதனைகளை வென்று சாதனை படைக்க வாழ்த்துகள் சங்கர் ஜி !

Raj said...

Innum 1000 padangal neengal enuthalum MGR padandalodu oppida mudiyathu!