Posts

Showing posts with the label expendables3

கொத்து பரோட்டா - 25/08/14

Image
சேனல் எங்கும் யாராவது கோட்டு மாட்டிக் கொண்டோ, கொள்ளாமலோ பேசிக் கொண்டேத்தான் இருக்கிறார்கள். Donahue show தான் மெல்ல ஹிந்திக்கு போய் அரட்டை அரங்கம் ஆனது. பின்பு அதுவே நீயா நானா அது இது என ஏகப்பட்ட டாக்‌ஷோக்கள். இந்திய ஆங்கில சேனல்களில் அமீர்கான், சிமி, கரன் ஜோஹர் என பிரபலங்கள் எல்லாம் டாக் ஷோ நடத்தி வரும் வேளையில் சமீபத்தில் zcafe சேனலில் நிரஞ்சன் அய்யங்கார் என்பவரின் டாக் ஷோ பார்த்தேன். அந்த வாரம் அவர் காஜோலுடன் அளவளாவினார். அவர்கள் பேசியது மட்டுமில்லாமல். அதை படமாக்கிய விதமும் அட்டகாசமாய் இருந்தது. இரண்டு மூன்று கேமராக்கள், அதீத க்ளோசப்கள், வெவேறு லொக்கேஷன்கள் என விஷுவலாகவும் நன்றாக இருந்தது. மிக சுவாரஸ்யமான இரண்டு நண்பர்களிடையே நடைபெறும் பேச்சாய் அமைந்திருந்தது. நிரஞ்சன் அய்யங்கார் ஒர் “கே” வாம்.  கரன் ஜோகரின் நெருங்கிய நண்பர் என்ற சுவாரஸ்யமான பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். எனக்கு பிடித்த அந்நிகழ்ச்சியின் ஒர் எபிசோட் இங்கே.. @@@@@@@@@@@@@@@@@@@@@