Bad Girl
நான் ஏன் எல்லாரையும் போல இல்லை. பதினைஞ்சு வயசுல லவ் பண்ணா தப்பா? எனக்கு ஏன் சுதந்தரமே இல்ல?. எனக்கு பிடிச்ச வாழ்க்கைய ஏன் வாழ விட மாட்டேன்ங்குறாங்க? என் இஷ்டத்துக்கு லவ் பண்ணி ப்ரேக்கப் பண்ணி என் சந்தோஷத்தை துக்கத்தை தெரிந்தெடுக்க ஏன் விட மாட்டேன்குறாங்க?. அம்மா சொல்லுற படி நல்லா படிச்சு, வெளிநாட்டுக்கு போயி செட்டிலாகி, அப்புறம் பைனான்ஸியல் சுதந்திரம் கிடைச்சு, சுதந்திரமா வாழ்ந்திருக்கலாமோ? என்ன மயிறு பைனான்ஸியல் சுதந்திரம்?. ஏன் இத்தனை குழப்புறேன்? குழப்புறேன்?. என் ப்ரெண்ட்ஸு எல்லாரும் ஈஸியா எவனையோ ஒருத்தனை லவ் பண்ணிட்டு, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெத்துட்டு சுதந்திரமா இருக்க நான் மட்டும் ஏன் இப்படி?. இல்லை நான் சுதந்திரமா என் இஷ்டத்துக்கு இருக்கேன். எனக்கு பிடிச்சா மாதிரி இருக்கேன். ஐயம் ஹேப்பி. நீயில்லைன்னா நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன்?. என் கை விரல் மொத்த சைஸு தான் உன் குழந்தை எத்தனை க்யூட்?. நானும் அம்மா ஆகணுமே?. பூனை வளர்போமா?. பூனையை சுதந்திரமா விடாம கதவை பூட்டி வைச்சு வளர்போம். அப்பத்தான் அது வெளியே போகாது. அய்யோ நான் ஏன் சந்தோஷமா இல்ல? ஏன் எனக்கு மட்ட...