Bad Girl
நான் ஏன் எல்லாரையும் போல இல்லை. பதினைஞ்சு வயசுல லவ் பண்ணா தப்பா? எனக்கு ஏன் சுதந்தரமே இல்ல?. எனக்கு பிடிச்ச வாழ்க்கைய ஏன் வாழ விட மாட்டேன்ங்குறாங்க? என் இஷ்டத்துக்கு லவ் பண்ணி ப்ரேக்கப் பண்ணி என் சந்தோஷத்தை துக்கத்தை தெரிந்தெடுக்க ஏன் விட மாட்டேன்குறாங்க?.
அம்மா சொல்லுற படி நல்லா படிச்சு, வெளிநாட்டுக்கு போயி செட்டிலாகி, அப்புறம் பைனான்ஸியல் சுதந்திரம் கிடைச்சு, சுதந்திரமா வாழ்ந்திருக்கலாமோ?
என்ன மயிறு பைனான்ஸியல் சுதந்திரம்?. ஏன் இத்தனை குழப்புறேன்? குழப்புறேன்?. என் ப்ரெண்ட்ஸு எல்லாரும் ஈஸியா எவனையோ ஒருத்தனை லவ் பண்ணிட்டு, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெத்துட்டு சுதந்திரமா இருக்க நான் மட்டும் ஏன் இப்படி?. இல்லை நான் சுதந்திரமா என் இஷ்டத்துக்கு இருக்கேன். எனக்கு பிடிச்சா மாதிரி இருக்கேன். ஐயம் ஹேப்பி.
நீயில்லைன்னா நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன்?. என் கை விரல் மொத்த சைஸு தான் உன் குழந்தை எத்தனை க்யூட்?. நானும் அம்மா ஆகணுமே?. பூனை வளர்போமா?. பூனையை சுதந்திரமா விடாம கதவை பூட்டி வைச்சு வளர்போம். அப்பத்தான் அது வெளியே போகாது.
அய்யோ நான் ஏன் சந்தோஷமா இல்ல? ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? நானும் அவளை போல செட்டில் ஆகியிருக்கலாமோ? ஒரு வேளை அம்மா பேச்ச கேட்டிருந்தா நல்லா இருந்திருக்குமோ? இந்த ஆம்பளை, ரிலேஷன்ஷிப் எல்லாமே போலி.. என் பூனைக்குட்டிதான் நிஜம். எதுக்காகவாவது அழணுமே? பூனை காணாம போனதுக்கு அழலாம். கதவ தொறந்து விட்டா அது இஷ்டத்துக்கு போயிட்டு திரும்ப எப்ப வரணும்னு தோணுதோ அப்ப வந்து நிக்குற மேடம் போல வாழுற வாழ்க்கை தானே சுதந்திரம்?.
கட்டுப்பெட்டியான குடும்பத்திலேர்ந்து கதவை திறந்துவிட்டா ஓடிப் போயிரும்னு பூட்டி வச்சிருக்குற வாழ்க்கையிலேர்ந்து கிடைச்ச கேப்புல சுத்தி திரிஞ்சு, நொந்து நூடுல்ஸாகி, வாழ்க்கையை உணர்ந்து கசந்து , சுதந்திரத்தை விடுதலைய..ஃபீல் பண்ணி, எதுவுமே நிரந்தரம் இல்லைன்னு மேடம் பூனைப் போல திரும்ப வந்து வீட்டு வாசல்ல விழுந்திருவோமா? அதானே.. அப்படி வாழறது தான் சரி. அது தானே அடுத்த ஜெனரேஷன் பெண்களை வெளிக் கொண்டு வரும்? .பெண்களே.!!. நான் சொல்லுறது சரிதானே?.
நான் ஏன் இப்படி இருக்கேன்?
(திரும்பவும் முதல்லேர்ந்து படிங்க) .
I Love @varsha bharath interpretation and Anjali sivaraman acting
பெண் எனும் முடிவிலா குழப்பி.. !!
Comments