Posts

Showing posts with the label காலாண்டு ரிசல்ட்

தமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013

ஜனவரி  ஸ்டியோ க்ரீனின் வெளியீட்டில், லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் வருடக் கடைசியில் வெளிவந்து, ஹிட்டடித்த கும்கியோடு சென்ற வருடம் நிறைவுற்றது. ஆனால் அதே நிறுவனத்திடமிருந்து வெளியான படம் அலெக்ஸ் பாண்டியன். இவர்களின் விநியோக ஸ்டாடர்ஜி நன்றாக இருக்கும் படம் வெளிவருவதற்கு பத்து நாட்கள் முன்னமே ப்ரோமோவில் ஆரம்பித்து தியேட்டருக்கு செல்லும் வரை ஒரு முறையையும், படம் வீழ்ந்தாலும் ஜெயித்தாலும் ஒரே விதமான விளம்பரம் ஹைஃபை கொடுக்கும் முறையையும் பாலோ செய்வார்கள். இது சன் டிவியின் டெக்னிக். எல்லா படத்தையும் ரிலீசாகும் முதல் நாள் இரவே சூப்பர் ஹிட் விளம்பரப்படுத்தும் முறை. ஆனால் அதே போன்ற விளம்பரங்கள் எல்லாம் இருந்தும் அலெக்ஸ் பாண்டியன் பெரும் வீழ்ச்சியடைந்தது. அதே பொங்கலுக்கு வெளியான சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, புத்தகம், சமர் ஆகிய படங்களில் சந்தானம், ராமநாராயணன் மட்டும் நிஜமாகவே ரெண்டாவது, மூணாவது லட்டு எல்லாம் தின்றார்கள். கிட்டத்தட்ட முப்பது கோடிக்கு மேல் வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நான்கிலிருந்து ஐந்து கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் க.ல.தி.ஆசையா?. ச...

தமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..

ஜனவரி-2011 சென்ற வருட முடிவில் வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” வியாபாரரீதியாய் பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், விமர்சகர்களால் கவனிக்கப்பட்டு, உலக திரைப்படவிழாக்களில் பங்கேற்றது. பொங்கலுக்கு ஆடுகளம், சிறுத்தை, காவலன், சொல்லித்தரவா மற்றும் இளைஞன் வெளியானது. ஆடுகளம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல பெயரைத் தட்டிச் சென்றது என்றாலும் வசூல் ரீதியாய் சென்னை போன்ற பெரிய நகரங்களைத் தவிர பெரியதாய் கல்லா கட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.