Thottal Thodarum

May 4, 2011

தமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..

ஜனவரி-2011
சென்ற வருட முடிவில் வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” வியாபாரரீதியாய் பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், விமர்சகர்களால் கவனிக்கப்பட்டு, உலக திரைப்படவிழாக்களில் பங்கேற்றது. பொங்கலுக்கு ஆடுகளம், சிறுத்தை, காவலன், சொல்லித்தரவா மற்றும் இளைஞன் வெளியானது. ஆடுகளம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல பெயரைத் தட்டிச் சென்றது என்றாலும் வசூல் ரீதியாய் சென்னை போன்ற பெரிய நகரங்களைத் தவிர பெரியதாய் கல்லா கட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.ஆட்சியாளர்கள் படத்தை வெளியிட தடை செய்கிறார்கள். அது இதுவென சும்மா சீன் போட்டு படத்துக்கு விளம்பரம் தேடிக் கொண்டு வெளியான படம் காவலன். நிஜத்தில் படத்தை வாங்கிய சக்தி சிதம்பரத்தின் பைனான்ஸியல் பின்னணியே படத்தின் ப்ரச்சனைக்கு காரணம். இந்த படம் வெளியாவதில் ப்ரச்சனையென்றால் தன்னுடய அடுத்த படமான வேலாயுதத்தில் ப்ரச்சனை வரும் என்று ஆஸ்கர் ரவியும், மதுரை அன்புவும் சேர்ந்து படத்திற்கான ப்ரச்சனைகளை சரி செய்து வெளியிட்டார்கள். படம் வழக்கமான விஜய் படம் போலில்லாமல் சாப்ட் ரொமாண்டிக்காக இருக்க, விஜய் ரசிகர்களை விட நார்மல் ஆடியன்ஸிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தாலும் படத்தின் வசூலைப் பொறுத்த வரை சுமாரே.. ஒவ்வொரு ஏரியாவுக்கும் குறைந்தது ஐந்திலிருந்து, பத்து பெரிய நோட்டு அடிபட்டிருக்கும் என்கிறது ட்ரேட் ஸோர்ஸ். பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே சூப்பர் ஹிட் சிறுத்தைதான். யாரும் எதிர்பார்க்காத ஆந்திர கார ஹிட்.  அதற்கு சந்தானத்தின் காமெடியும் ஒரு காரண்ம். 

கலைஞரின் கதை வசனத்தில், பா.விஜய்யின் நடிப்பில் வெளியான பெரிய பட்ஜெட் படமான இளைஞன் படத்திற்கு தியேட்டரில் படு மோசமான ஓப்பனிங் கிடைத்தது. பல தியேட்டர்களில் முதல் நாள் இரவுக் காட்சி கேன்சல் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சொல்லித்தரவா பற்றி ஏதுவும் சொல்லத் தேவையில்லை.  பிறகு அம்மாதம் வெளியான படம் எஸ்.டி.சபாபதி இயக்கத்தில் தாணுவின் வெளியிட்டில் வந்த பதினாறு. பெயரிலும், விளமபர டிசைன்களிலும் கவர்ந்த அளவில் பத்து சதவிகிதம் கூட இல்லாத படமாய் அமைந்தது.
சூப்பர் ஹிட் – சிறுத்தை
ஆவரேஜ் ஹிட்- அடுகளம், காவலன்.
#####################################
பிப்ரவரி 2011
தூங்கா
நகரம், யுத்தம் செய், பயணம், நடுநிசி நாய்கள், சீடன் போன்ற படங்களைத் தவிர சிறிய படங்களும் வந்தன. தூங்காநகரம் அவர்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. நல்ல கருவாய் இருந்தாலும்  மீண்டுமொரு மதுரை படமாய் வந்து திரைக்கதையில் சொதப்பிவிட்டது

யுத்தம் செய் படம் வெளியான நாட்களில் பெரிய அளவிற்கு வரவேற்பில்லாவிட்டாலும், மக்களின் மவுத் டாக் பரவி ஒரு ஆவரேஜ் படமாய் அமைந்தது.  ப்ரகாஷ்ராஜின் பயணம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவு பெற்ற படம் என்ற மட்டில் வெற்றியே. ஆனால் கீழே இறங்கி ஓடவில்லை என்றே சொல்ல வேண்டும். கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளி வந்து பெரும் தோல்வியை சந்தித்த படமாய் அமைந்தது. சீடன் தனுஷ் சிறப்பு தோற்றத்திலிருந்தும் காப்பாற்ற முடியவில்லை.
ஆவரேஜ் – பயணம், யுத்தம் செய். பெரும் பாலும் மல்ட்டிப்ளெக்ஸ் மற்றும், பெரிய ஊர்களில் மட்டும்.
###############################
மார்ச் 2011
நிறைய சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த காலமிது. உலகக் கோப்பை கிரிக்கெட், பரீட்சை என்று பெரிய படங்கள் எல்லாம் கோடை விடுமுறைக்காக காத்துக் கொண்டிருக்க, நிறைய சிறு முதலீட்டு படங்கள் வெளிவர வாய்ப்பு கிடைத்த்து. இருந்தாலும் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போனது பெரும் வருத்தமே. சிங்கம்புலி,  அவர்களும். இவர்களும், முத்துக்கு முத்தாக, குள்ளநரிக் கூட்டம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

ஜீவா நடித்திருந்த சிங்கம்புலி பெரிதாக செல்ப் எடுக்கவில்லை.  குள்ளநரிக்கூட்டம் ஓரளவுக்கு மக்களிடையே தொடர் விளம்பரங்களால் சேர்ந்திருந்தாலும் வசூலில் பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை. யாரும் எதிர்பார்க்காத ஒரு படமான முத்துக்கு முத்தாக..  படம் ஒரு ஆவரேஜ் படமாய் அமைந்ததில் அனைவருக்கும் ஆச்சர்யம். டிவி சீரியலின் சினிமா வடிவமாய் இருந்தாலும் ஆங்காங்கே பாமர மக்களை நெகிழ வைத்ததால் இன்றளவும் கிராமங்களில் இவர்களது முந்தைய படமான மாயாண்டி குடும்பத்தாரைப் போல பெண்களை ரொம்ப நாளைக்கு பிறகு தியேட்டருக்கு கூட்டி வந்தது என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்.
ஆவரேஜ் – முத்துக்கு முத்தாக

Post a Comment

31 comments:

அத்திரி said...

first vadai enakkuthan

Anonymous said...

லத்திகா? ஏன் இந்த ஓர வஞ்சனை?

Unknown said...

Some thing missing in this line : "கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளி வந்து பெரும் தோல்வியை சந்தித்த படமாய் அமைந்தது", name of the movie?

King Viswa said...

தல,

சிறுத்தை படம் செம ஓபனிங் இருந்தாலும் ஐந்து நாட்களுக்கு அப்புறம் வரவேற்பு குறைந்து விட்டதாக தகவல். காவலன் படம் மிகவும் ஸ்லோ ஆக பிக் அப் ஆனாலும் இறுதியில் அதுதான் ஜெயித்ததாக தகவல். பிரச்சினை என்னவெனில் சிறுத்தை படத்திற்கு கிடைத்த விளம்பரங்கள் காவலன் படத்திற்கு இல்லை. காவலன் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்தே விளம்பரங்கள் கொடுத்தனர், அதுவும் மிகவும் குறைந்த அளவிலேயே. அனால் சிறுத்தை படம் மிகவும் பிரமாண்டமான அளவில் விளம்பரப்படுதப்பட்டது. ரிலீஸ் ஆகி இரண்டு வாரம் கழித்தும் படத்தை பூஸ்ட் செய்ய மறுபடியும் ஒரு பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டாவது பட்ஜெட் காவலனின் மொத்த விளம்பர பட்ஜெட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இறுதியில் காவலனே ஜெயித்ததாக தகவல்.


கிங் விஸ்வா

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

Cable சங்கர் said...

இல்லை விஸ்வா.. தவறான தகவல். சிறுத்தை பாய்ந்த பாய்ச்சல் முதல் ஐந்து நாட்கள் மட்டுமல்ல.. தொடர்ந்து ரெண்டு வாரங்களுக்கு செம பாய்ச்சல். சுமார்.35 கே என்று கேள்வி படத்தின் மொத்த வசூல். காவலன்.. மெல்ல பிக்கப்பானாலும், படத்தில் தயாரிப்பு செலவு சுமார்42 கே. அப்படியிருக்க.. படம் பல ஏரியாக்களில் மூன்றாவத் வாரமே டெபிசிட் ஆகிவிட்டது.. இது தான் நிஜம். சென்னை போன்ற நகரங்களில் மல்டிப்ளெக்ஸில் ஓரளவுக்கு வசூலானது.. உள்ளே.. ம்ஹும். நான் சொல்லியிருக்கும் தகவல்.. விநியோகஸ்தர்களின் ரிப்போர்ட்..

நர்மதன் said...

உங்களூக்கு விஜய் என்றால் பிடிக்காதோ..... சிறுத்தையை விட காவலன் ஹிட என கேள்வி.... அத்துடன் காவலனுக்கு எந்தவித promotion, advertisement எதுவும் பெரிதாக இல்லை......... 100 நாள் கடந்தும் ஓடுகிறது....

இந்த link கை பாருங்க
http://www.tamilvix.com/kaavalan-completes-100-days-of-theatrical-run/

நர்மதன் said...

உண்மையில் பக்கச்சார்பான பதிவே

Cable சங்கர் said...

நர்மதன்.. நீங்கள் கொடுத்திருகும் லிங்கின் தலைப்பே சார்பு செய்தி என்று சொல்கிறதே..

நிச்சயம் சார்பு இல்லை.. நூறு நாட்கள் ஓட்ட்வதற்காக.. கடைசி ஒரு வாரம் மட்டும் அண்ணா தியேட்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாது.

Cable சங்கர் said...

நர்மதன் நீங்க கொடுத்த லிங்க் தகவல் படு காமெடி..படத்தின் பட்ஜெட் 18 கோடியாம்.. விஜய் படம் பதினெட்டு கோடியில் எடுக்க முடிந்தால்.. எல்லா படங்களும் சூப்பர் ஹிட் தான். தெரியுமா? விஜய் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வடிவேலு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அசின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கே அவர்கள் சொன்ன பட்ஜெட்டின் பெரும் பகுதி போய் விடும். கடைசியில் நான் சொன்னதை வேறு தவறான தகவல் மூலம் உறுதி படுத்தியதற்கு நன்றி..

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...
விரிவான அலசல்..
இந்தப் பதிவிற்காக விநியோகித்தவர்களிடம் எல்லாம் கேட்டு எழுதிய உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...
விரிவான அலசல்..
இந்தப் பதிவிற்காக விநியோகித்தவர்களிடம் எல்லாம் கேட்டு எழுதிய உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

Thirumalai Kandasami said...

பயணம் போன்ற நல்ல படங்கள் தோல்வி அடைந்தது துரதிஷ்டவசமானது..

Cable சங்கர் said...

திருமலை.. பயணம் ஒரு தோல்விப்படமல்ல.. ஆவரேஜ் படம். இந்த காலத்தில் ஆவரேஜ் படமென்றாலே பெரிய விஷயம்.

"ராஜா" said...

சிறுத்தையை பற்றிய தங்களின் தகவல் முற்றிலும் உண்மை ... எங்கள் ஊரில் இப்பொழுதும் அந்த படம் போட்டால் கூட்டம் அள்ளுகிறது... b/w எங்கள் ஊரில் இந்த வருடம் வந்த படங்களில் அம்பது நாட்கள் ஓடிய ஒரே படம் சிறுத்தை ...

CS. Mohan Kumar said...

அலோ மார்ச் மாசம் முடிஞ்சு 35 நாளுக்கு மேலாச்சு. இப்போ தான் எழுதுறதா? வர வர பொறுப்பே இல்லாம இருக்கீங்க :))

(ரிப்போர்ட் நல்லாருக்கு. காவலன் & ஆடுகளம் ஹிட் என்பது தான் சாதாரண பார்வையாளன் எண்ணம்)

Cable சங்கர் said...

இவ்வளவு டீடெய்ல் தெரியததினால் தான் அவன் பார்வையாளனாக இருக்கிறான் .. :))

Dhatchana said...

ஆடுகளம் மீண்டுமொரு மதுரை படமாய் வந்து வெற்றி பெற்றது..

eppadi.... sankar

யுவகிருஷ்ணா said...

//நிச்சயம் சார்பு இல்லை.. நூறு நாட்கள் ஓட்ட்வதற்காக.. கடைசி ஒரு வாரம் மட்டும் அண்ணா தியேட்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாது.//

அண்ணா மட்டுமல்ல. உட்லண்ட்ஸ் சிம்பொனியும் எடுத்தார்கள் :-)

‘தூங்கா நகரம்’ இன்னொரு முறை கொஞ்சம் விசாரித்துப் பாருங்களேன். ‘பி’ சென்டர்களில் இப்போது செகண்ட் ரன்னில் கூட நல்ல கலெக்‌ஷன் கொடுப்பதாக கேள்வி (படம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்)

Muthukumara Rajan said...

ஆட்சியாளர்கள் படத்தை வெளியிட தடை செய்கிறார்கள். அது இதுவென சும்மா சீன் போட்டு படத்துக்கு விளம்பரம் தேடிக் கொண்டு வெளியான படம் காவலன். நிஜத்தில் படத்தை வாங்கிய சக்தி சிதம்பரத்தின் பைனான்ஸியல் பின்னணியே படத்தின் ப்ரச்சனைக்கு காரணம்


seems to be one side view

அருண் said...

சூப்பர் ரிபோர்ட்.
அப்போ இந்த காலத்துல ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்கணும்னா அது எப்படிப்பட்ட படமாயிருக்கணும்?
-அருண்-

குரங்குபெடல் said...

"இவ்வளவு டீடெய்ல் தெரியததினால் தான் அவன் பார்வையாளனாக இருக்கிறான் .. "

ஆமாஆமா ... எல்லாரும் சங்கர் நாராயன்
மாதிரி இந்தியன் குரோசாவா ஆகமுடியுமா ?

Thanks

shortfilmindia.com said...

உதவி இயக்கம்.. பார்வையாளன் ஏன் குரசோவா ? ஆக வேண்டும். டவுட்டு..

shortfilmindia.com said...

நான் நிச்சயம் குரசேவா ஆக மாட்டேன். அதற்கு காரணம் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் குரசேவா படங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் உத்வி இயக்கம்.:)

கேபிள் சங்கர்

Cable சங்கர் said...

//அப்போ இந்த காலத்துல ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்கணும்னா அது எப்படிப்பட்ட படமாயிருக்கணும்?
-அருண்-//

அது தெரிஞ்சா எல்லோரும் சூப்பர் ஹிட் படம் கொடுக்க மாட்டாங்களா?

sokka said...

ITS very true in front of my house only mathi theatre was there were aadukalam was released,third day of the release (sunday ) evening there was not a big crowd in the theatre as was before in the previous days ;I went to see siruthai in Guru theatre I never expected it was house full and jam packed .next day I went to kavalan (monday) in mappilai vinayagar and the crowd gathered was only average .

Anonymous said...

காவலன் பற்றிய புள்ளி விவரங்கள் ஆச்சர்யம்..சிறுத்தை பட்ஜெட் குறைவு..லாபம் அதிகம்..ம்..இனி சிறுத்தை பின்னால் ஓடுவார்கள்..சிறுத்தையும் பட்ஜெட்டை அதிகப்படுத்திவிடும்

நர்மதன் said...

நண்பரே....... நீங்கள் எழுதிய பதில் கமெண்ட்க்கு நன்றி அப்படி என்றால் கிழே உள்ள லிங்கை பாருங்க

http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-11-01/vijay-kavalan-05-05-11.html

நர்மதன் said...

see this

http://thatstamil.oneindia.in/movies/specials/2011/05/05-kavalan-at-shanghai-film-festival-aid0136.html

புது மனிதன் said...

சிறுத்தை சூப்பர் ஹிட் என்பது சினிமாவின் நுணுக்கம் தெரிந்தவரின் கூற்று ,,
இன்றளவும் B மற்றும் c சென்டரில் collection கொடுத்த படம் என்றால் அது சிறுத்தை மட்டுமே .

blogpaandi said...

50 நாட்கள் கடந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் in லத்திகா படத்தை காலாண்டு அறிக்கையில் சேர்க்காமல் விட்ட கேபிளாரை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனந்த தொல்லை படம் அடுத்த காலாண்டு அறிக்கையில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

உரிமையுடன்,
இவண்
அகில உலக பவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் ரசிகர் மன்றம்

Unknown said...

நண்பர்களே ஷன்காய் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது உங்க சிறுத்தை எந்த விழாவில் ஆவது கலந்து கொள்கிறதா சிறுத்தை சுமாராக தான் ஓடியது காவலன் எந்த வித விளம்பரமும் இல்ல மல் 100 ஓடி ஷன்காய் வரை சென்றுள்ளது இது தான் உண்மையான வெற்றி behindwoods .com இல் பார்க்கவும் படம் திரை பட விழாவில் கலந்து கொண்டதை