Thottal Thodarum

May 5, 2011

Shor In The City

shor-in-the-city-wallpapers-07 ப்ளாக் காமெடி என்பது ஒரு வகையான காமெடி. Guyritche படங்களில், டொரண்டோனோ படங்களில் அதிகம் பார்க்க முடியும்.  அதை தொடர்ந்து பல பேர் ஹிந்தியில் முயற்சித்து வருகிறார்கள். அதில் மிகச் சிலபேரே கொஞ்சம் ரசிக்கும் படியான படங்களை எடுக்கிறார்கள். தமிழில் அதெல்லாம் சான்ஸேயில்லை. இன்றளவில் செவிலில் அறையும் காமெடியே உச்சப்பட்ச காமெடியாய் இருக்கும் போது ப்ளாக் காமெடியெல்லாம்.. நம் எல்லைக்கு உட்பட்டதல்ல என்றாலும் எனக்கு தெரிந்த ஒரு முயற்சி அதுவும் படு தோல்வியில் முடிந்தது. வேண்டுமானால் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு பிறகு அதே படம் வேறு பெயரில் எடுக்கப்பட்டு ஓடலாம். அது மும்பை எக்ஸ்ப்ரஸ்.


shor-in-the-city-wallpaper-03-10x7 மூன்று கதைகள் மும்பை விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஆரம்பிக்கிறது. திலக்,ரமேஷ், மண்டூக் மூவரும் ஸ்மால் டைம் தில்லாலங்கடிகள். இதில் திலக் மட்டும் தன்னை அவர்களிடமிருந்து தனித்து தன்னை ஒரு பப்ளிஷர் என்று சொல்லிக் கொள்பவன். ஆம் அவன் பப்ளிஷர் தான் ஹிட்டான நாவல்களை புத்தகங்களை திருட்டு பேப்பர் பேக் போட்டு விற்பவன். எவ்வளவு நாள் திருட்டுப் புத்தகத்தையே போட்டு விற்பது என்று சேட்டன் பகத் போல பிரபலமாக இருக்கும் இன்னொரு சேட்டன் எழுத்தாளரின் புதிய புத்தகத்தின் மேனுஸ்கிரிப்டை கத்திமுனையில் வாங்குகிறார்கள். தங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிருவதற்காக. இந்த சம்பவத்தில் ஆரம்பிக்கிறது கதை. ஒரு நாள் ரமேஷுக்கும், மண்டூவுக்கு சப்பர்பன் ரயில் ஒரு ”மால்” கிடைக்கிறது. மால் என்றால் பிகர் இல்லை என்பதை அவர்களே சொல்கிறார்கள். ஒரு ஏகே 47/56, நான்கைந்து பிஸ்டல்கள், மற்றும் ஒரு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு. இதை எப்படியாவது விற்று சீக்கிரம் பணம் பார்க்க ஆசைப்பட்டு ஒரு மீடியேட்டரின் மூலம் செயல் படுகிறார்கள்.

இதன் நடுவில் சாவன் எனும் ஒரு இளைஞன் இந்தியன் கிரிக்கெட் ஜூனியர் டீமில் சேருவதற்கு பத்து லட்சம் லஞ்சம் கொடுப்பதற்காக அலைந்துக் கொண்டிருக்கிறான். நடுவில் இவனுக்கு ஒரு பெண்ணிற்குமான காதல், முத்தம், அவளுக்கு வேறொருவனோடு  நிச்சயதார்தம் வேறு.
shor-in-the-city-wallpaper-10-10x7 அபய் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவில் பிஸினெஸ் செய்து செட்டிலாக வருகிறான். அவனிடம் ப்ரொடக்‌ஷன் மணி கேட்டு மிரட்டும் லோக்கல் தாதாக்கள். இந்த மூன்று கதைகளையும் இணைக்கும் ஒரு மீடியேட்டர் கேரக்டர். அந்த கேரக்டருக்கு தெரியாமலேயே நமக்கு ஒரு லிங்க் காட்டுகிறது திரைக்கதை.

ப்ளாக் ஹூயூமர் என்பதற்கு உதாரணமாய் ஒரு காட்சி. மூன்று பேர் கும்பலிடம் கிடைகும் ஆர்.டி.எக்ஸ் பாமை செக் செய்வதற்காக ஊருக்கு வெளியே பொட்டல் காட்டில் ஆன் செய்து விட்டு அது வெடிக்கிறதா? இல்லையா? என்று ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, அது வெடிக்கவில்லை. “டேய்.. கிட்டேப போய் பாரு அது புஸ்ஸாயிருச்சான்னு?” என்று கேட்பதிலிருந்து, மீண்டும் கிட்டே போய் அதை ஆன் செய்துவிட்டு வர, அப்போது அங்கே டயர் ஓட்டிக் கொண்டு வரும் சிறுவன் அதை எடுத்துக் கொண்டு ஓட, என்று நடக்கும் களேபரங்களும். அதன் பையனின் கால்  போய்விட்டதாய் நினைத்து துஷார் பணம் வைத்துவிட்டு போக.. பையன் துஷார் போனதும், மெல்ல போர்வைக்குள்ளிருந்து முழுக்காலை எடுத்து வைக்கும் காட்சியை உதாரணமாய் சொல்லலாம்.
shor-in-the-city-wallpaper-08-10x7 படத்தில் நடித்துள்ள துஷார், மண்டூவாக நடித்தவர், என்.ஆர்.ஐயாக வரும் செந்தில் ராமமூர்த்தி, துஷாரின் இளம் மனைவியாக மிகச் சிறுது நேரமே வரும் அந்த காந்த கண்ணழகி ராதிகா ஆப்தே. ம்ஹும். மீடியேட்டர் அரசியல்வாதி, லோக்கல் கேங்ஸ்டர்ஸ் என்று பார்த்து பார்த்து கேஸ்டிங் செய்திருக்கிறார்கள். அனைவரின் நடிப்பும் மிக இயல்பு.

ஒளிப்பதிவும் , பின்னணியிசையும் பாராட்டப்பட வேண்டிய அம்சங்களாகும். இரட்டை இயக்குனர்கள் ராஜ் நிதிமோரோவும், கிருஷ்ணா டிகே வும் ஏற்கனவே இம்மாதிரியான ப்ளாக் ஹூயூமர் கலந்த 99 என்கிற படத்தை இயக்கியவர்கள் தான். இம்முறை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். படத்தின் ப்ள்ஸ் எப்படி ப்ளாக்ஹூயூமர் என்கிறோமோ அதே அளவுக்கு மைனஸாகவும் அமைகிறது. அதன் நம்பகத்தன்மையின்மையால். ஆர்டிஎக்ஸ்சை வெடிக்க வைக்கும் காட்சி வரை ஓக்கே ஆனால் அதன் பிறகு இருக்கும் எக்ஸ்டென்ஷன் கான்செப்டை மாற்றி விடுகிறது. பேங்க் கொள்ளையிலும் அப்படியே. அதன்  முடிவு நம்பும்படியாக இல்லை. என்ன தான் இப்படத்தின் சம்பவங்கள் தினசரி பேப்பர்களில் கிடைத்ததை வைத்து எடுக்கப்பட்டது என்று சொன்னாலும் எங்கோ இடறுகிறது என்பதை மறுக்க முடியாது.
Shor In The City-  Interesting to Sum  Extent
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

King Viswa said...

ரொம்ப நாள் கழிச்சு நான் பார்க்காத ஒரு படத்தோட விமர்சனம். இந்த படத்தை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை மிஸ் செய்துள்ளேன் (டிக்கெட் இருந்தும் வேறு கமிட்மெண்டுகளால் போக முடியவில்லை). படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

நாளைக்கு விக்ரம் பட் இயக்கிய படம் ரிலீஸ். ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.


கிங் விஸ்வா

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

Cable சங்கர் said...

appa.. இன்னொரு படம் இருக்கு..

Unknown said...

ஆமா பாஸ்! பிளாக் காமெடி குவென்டின் டொராண்டினோ படங்களில் தான் நான் ரசித்தது! மும்பை எக்ஸ்பிரெஸ்ல அருமையா கையாண்டிருப்பார் கமல்! ஆனா.. :-(

Anonymous said...

going this saturday night. Please read sify.com review.

''பிங்க்'' தமிழன் said...

@ King Viswa

தமிழ் படங்களை தவிர மற்ற எல்லா மொழி படங்களும் உங்களுக்கு பிடிக்கும் போல ..

King Viswa said...

//''பிங்க்'' தமிழன் said...
@ King Viswa

தமிழ் படங்களை தவிர மற்ற எல்லா மொழி படங்களும் உங்களுக்கு பிடிக்கும் போல .//

யார் சொன்னது? பொன்னர் ஷங்கர் படம் கூட எனக்கு பிடித்த ஒன்றுதான். அதனைப்பற்றிய சிறப்பு பதிவு ஒன்றை நாளை இடுகிறேன், பாருங்கள்.

எங்களுடைய மொக்கை மூவி கிளப்பில் தமிழ், தெலுகு, ஹிந்தி, ஆங்கிலம் என்று மொழி பாகுபாடின்றி அணைத்து மொக்கை படங்களையும் பார்த்து பாராட்டுவோம். இவ்வளவு ஏன், நேற்றுகூட பூவா? தலையா? (போட்டுப்பார்) படத்தை முழுவதுமாக பார்த்தேன்.

நமக்கு எல்லா மொழிப்படங்களும் ஓக்கேதான். இந்த பிரபஞ்ச சினிமா, அண்டவெளி சினிமா, செவ்வாய் கிரகத்து சினிமா போன்ற உலக சினிமாக்கள் தான் அலர்ஜி.

வணங்காமுடி...! said...

உங்களிடம் தொலைபேசியில் பேசியது மிக்க மகிழ்ச்சியளித்தது. என் நண்பர்கள் அனைவர்க்கும் சொல்லி மகிழ்ந்தேன்.

நன்றி...

சுந்தர்
ருவாண்டா

அறிவில்லாதவன் said...

ஏங்க நம்ம பாலா படங்களில் வருவதெல்லாம் ப்ளாக் ஹுயுமர் இல்லாம வேற எந்த ரகம் ? ஏன் அவை வெற்றி பெறவில்லையா..

பிதாமகன், நான் கடவுள் படத்தில் வரும் ப்ளாக் ஹுயுமர் போல ஹிந்தியில் எந்த படம் வந்திருக்கிறது என்று கேபிள் சொல்லவேண்டும்.

Prabhu said...

பஞ்சதந்திரம் ப்ளாக் ஹூமரில் வராதா? லைட்ட அப்படி தோணுச்சு!

மதுரை சரவணன் said...

good review... thanks for sharing.

அன்பேசிவம் said...

ம்க்கும் எனக்கென்னவோ இந்த இரண்டு படங்களையுமே ராதிகாவிற்காக பார்த்தமாதிரியே தெரியுதே?

hitherto said...

mumbai express is heavily inspired by guy ritchie's LOck stock and two smoking barrels..man you should see that movie..
quentin tarantino movies are highly overrated.e.g reservoir dogs,pulp fiction.Mr.cable sankar,tamil movie does not have black comedy,what about naan kadavul,imsai arasan pulikesi

hitherto said...

pancha thantram's original very bad things as black humor..even azhagar samyin kuthirai has a lot of suble black humour