செங்காத்து பூமியிலே..
மண்ணுக்குள் வைரம், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தமிழ்செல்வன் முலமாய் கதை வசனகர்தாவாக அறியப்பட்ட ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். நடுவில் எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மீன் போன்ற பல ஹீரோயின்களை வைத்து தாணுவிற்கு ஒரு படம் இயக்கியதாய் ஞாபகம். இளையராஜா இந்தப்படத்தை பார்த்துவிட்டு பெரிதாய் பாராட்டியதாகவும், அவரே வெளியிட முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்ட படம். அதுவே ஒரு டெரரை கொடுத்தது. ஏனென்றால் ராஜா சிலாகித்து பாராட்டினால் அப்படங்கள் பெரிதாய் வெளங்கியதில்லை என்பது ட்ராக் ரெக்கார்ட்.