Posts

Showing posts with the label ghoul

GHOUL - Web series

Ghoul ஒரு காலத்தில் தமிழில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஒரே டைரக்டரின் படங்க ளி ல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பார். அந்த படம் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நடித்துக் கொடுப்பார். அதே போல ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தனின் படங்களில் நடித்திருப்பார். அது போல ராதிகா ஆப்தே, அனுராக் கஷ்யப்பின் படங்களில் நடிப்பது. குறிப்பாய் நெட்ப்ளிக்ஸில் இவர்கள் படங்கள் வெளியாக ஆரம்பித்தபிறகு மீம்ஸ் போடுமளவுக்கு ராதிகா ஆப்தேவின் ஆக்ரமிப்பு. சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் நடிப்பு மட்டுமில்லாமல் , கதை வசனத்திலும் இவரது பங்களீப்பு இருந்தது. ஒரு புதிய நெட்ப்ளிக்ஸ் படத்தில் ராதிகா ஆப்தேவே எல்லா கேரக்டர்களிலும் நடிப்பது போன்ற ஒரு விளம்பரத்தை ராதிகாவே வெளியிட்டிருந்தார். அது கிண்டலுக்காக வெளியிடப்பட்டது என்று நினைத்தால் நிஜமாகவே அப்படி ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொல்கிறார் விக்ரமாதித்ய மோத்வானி. இத்தனை களேபரங்கள், விமர்சனங்களுக்கு நடுவில் ராதிகா ஆப்தே ஒன்றும் திறமையில்லாதவர் இல்லை ஒவ்வொரு  ப்ராஜெக்டிலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டேதானிருக்கிறார். ஒரு சில இயக்குனர்...