ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.
ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல?. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்...