Posts

Showing posts with the label dasavatharam

சிவாஜி, தசாவதாரம், தாம்தூம், ராமன் தேடிய சீதை.....

Image
ஓரு விஷயம் மட்டும் புரியமாட்டேன் என்கிறது.. எவ்வள்வோ படங்களை பார்த்து நாம் விமர்சிக்கிறோம். ஆனால் நாம் நல்ல படம் என்று நினக்கிற படங்கள் விமர்சனங்களில் வேண்டுமானால் நல்ல வரவேற்பை பெறுகிறதே தவிர.. வசூலில் பெரிதாககூட சாதிப்பதில்லை. உதாரணத்திற்கு நமது விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி சாதித்த படங்கள், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களே..இவை தவிர நமது விமர்சகர்களால் பிய்த்து, கடித்து குதறப்பட்ட சிவாஜி, தசாவதாரம், தாம் தூம், போன்ற படங்கள் நமது விமர்சனங்களை மீறி வெற்றி படங்களாய் வலம் வருகிறது. மிக நல்ல படம் என்று பலராலும் பாராட்ட படுகிற அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், போன்ற படங்கள் எல்லாம் டீவியிலும், டிவிடியிலும் பார்த்து நன்றாகயிருக்கிறது என்று இன்ன்மும் சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியில் மிகப் பெரிய சரிவை சந்தித்த ப்டங்கள். தற்போது சமீபத்தில் ரிலீசான ராமன் தேடிய சீதை படம் விமர்சகர்களால் மிகவும் பாராட்ட பட்டு, மிக நல்ல படம் என்று படம் பார்த்த மக்கள் சொன்னாலும் கூட, வசூலில் மிக மிக பின் தங்கிய் நிலையிலேயே உள்ளது. ஆனால் சரோஜா, போன்ற இளைஞர்களுக்கான படங்கள்...