சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணவிலாசம்
நான்கைந்து பேர் போன் செய்துவிட்டார்கள். என்ன இன்னுமா அங்க போய் சாப்பிடலைன்னு. அவ்வளவு நல்லாருக்கான்னு கேட்டதுக்கு இல்லை சொன்னாங்க. நம்மளை லேப் எலி ரேஞ்சுக்கு தான் வச்சிருக்காங்கன்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில அப்படி என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம் ஓரத்தில இருந்திட்டேயிருந்தது. சரின்னு தொட்டால் தொடரும் ஞாயிறு ஷூட்டிங் ப்ரேக்குல ஒரு நாள் மதியம் போனேன். ஞாயிறுங்கிறதுனால ஹடோஸ் ரோட் காலியா இருந்திச்சு. அவங்க கார் பார்க்கிங் புல். வாலட் பார்க்கிங் எல்லாம் வச்சிருக்கிறதுனால பார்க் பண்ணுற பிரச்சனையில்லை.