தமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011
செப்டம்பர் மாதம் வெளியான படங்களில் பெரும் வெற்றிப் பெற்ற படமாய் அமைந்தது ஏ.ஆர்.முருகதாஸின் “எங்கேயும் எப்போதும்” திரைப்படம் மட்டுமே. விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருமித்த பாராட்டை சமீபத்தில் பெற்ற படமென்றால் இது ஒன்று தான். வசூல் ரீதியாய் ஆரம்பித்த ரெண்டொரு நாள் தடுமாறினாலும் மக்களின் மவுத் பப்ளிசிட்டியினாலும், மீடியா ப்ரோமஷனக்ளினாலும் பெரிய அளவிற்கு ரீச்சானது என்றே சொல்ல வேண்டும். சிட்டி மட்டுமில்லாது தமிழகமெங்கும் பெரும் வெற்றியை பெற்றது இப்படம். திரையிட்ட சில நாட்களிலேயே ஒரு தியேட்டரில் வெளியாகியிருந்த படத்தை இன்னொரு தியேட்டரிலும் போடப்பட்ட அரிதான படங்களில் இதுவும் ஒன்று. வசூல் ரீதியாக சுமார் பதினெட்டிலிருந்து, இருபது கோடியை தொடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐம்பது நாளை கடந்திருக்கும் இம்மாதிரியான ஆவரேஜ் பட்ஜெட் படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் புத்துணர்ச்சியான சுவாசம் என்றே சொல்ல வேண்டும்.