Posts

Showing posts with the label ஜீவா

கொத்து பரோட்டா - 29/09/14

85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர் டெல்லி ஜூவில் புலிக்கு இறையான சிறுவனைப் பற்றிய செய்தியையும், வீடியோவையும் பார்த்த மாத்திரத்தில் அரை மணி நேரம் சே.. ஏண்டா பார்த்தோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில், ஜு அதிகாரிகளைப் பற்றியும், இதை வீடியோ எடுத்தவர்கள் மனநிலை பற்றியும், கீழ இருக்கிற மண்ணை எடுத்து புலி கண்ணுல தூவியிருக்கலாம், புலியின் இரண்டுகண்கள் மிக அருகில் தான் இருந்திருக்க, கைகளால் அதை குறி பார்த்து குத்தியிருக்கலாம் என்றெல்லாம் ஆளாளுக்கு புலியிடமிருந்து தப்பிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்கள் போல படமெல்லாம் போட்டு விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து ரெண்டு அடி ரோட்டுல நாய் துரத்துனா என்ன பண்றதுன்னு தெரியாம பின்னங்கால் பிடறி பட ஓடி வர்றவங்க. புலிகிட்டேயிருந்து தப்பிக்க என்ன பண்ணனுங்கிறது எனக்கு தெரியாது. ஆனால் நாய் கிட்டேயிருந்து தப்பிப்பது எப்படின்னு தெரியும். துரத்துற நாய் பார்த்து ஒரு செகண்ட் அப்படியே வண்டி ஓட்டிக் கொண்டி...

டேவிட்

Image
 நாளைய இயக்குனரின் ஒரிஜினலான விஜய் அமிர்தராஜ் சோனி பிக்ஸில் நடத்திய குறும்பட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார். அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு ஹாலிவுட் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விஷயம் அறிவிப்போடு நின்றுவிட, வெற்றி பெற்ற இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராய் சேர்ந்து பணி புரிந்து விட்டு, சைத்தான் என்கிற ஒரு படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படம் எனும் போது எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. ஆனால் ஒரு விஷயம். முன்னமே சொல்லி விடுகிறேன். இது செமி தமிழ் படம். பாதி படத்துக்கு மேல் டப்பிங் தான். நிச்சயம் இப்படம் தமிழ் சமூகத்திற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கதைக்களன் எனவே தயவு செய்து தமிழில் பார்க்காமல் இந்தியில் பார்த்தீர்களானால் நல்ல அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .

நீ தானே என் பொன்வசந்தம்.

Image
  விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. பாடல்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இன்றும் இசை ரசிகர்களிடையே இப்பட பாடல்களைப் பற்றி சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரெளத்திரம்

Image
ரொம்ப நாளாக தயாரிப்பில் இருந்த படம். கோவின் வெற்றியால் பரபரப்பாக வெளியீடு நடந்திருக்கிறது. இந்த வாரம் வந்த திரைப்படங்களில் கொஞ்சமேனும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்திய படம் என்றால் இது ஒன்றுதான். மற்றதெல்லாம் எந்தெந்த தியேட்டரில் எத்தனைக் காட்சி என்று கூட தெரியவில்லை.

Tollywoodல் ஜீவா

Image
தமிழ் கோ தெலுங்கில் ரங்கமாகி வெற்றி நடை போடுகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் சமீபத்தில் வெளியான தெலுங்கு பிக் பட்ஜெட் படங்களான, சக்தி, பத்ரிநாத், என்று எல்லா படமும் ஊத்தி மூடிக் கொள்ள, 50வது நாளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது கோ என்கிற ரங்கம். இதில் விஷேஷம் என்னவென்றால்.. ரூரல் ஆந்திராவில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட புதிய தியேட்டர்களில் ரங்கம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் இனி வரும் ஜீவாவின் படங்களுக்கு தெலுங்கில் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது என்கிறது டோலிவுட் வட்டாரம். கே.வி.ஆனந்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது டோலிவுட்டில். எஸ்.கே