ரெளத்திரம்

rowthiram-01 ரொம்ப நாளாக தயாரிப்பில் இருந்த படம். கோவின் வெற்றியால் பரபரப்பாக வெளியீடு நடந்திருக்கிறது. இந்த வாரம் வந்த திரைப்படங்களில் கொஞ்சமேனும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்திய படம் என்றால் இது ஒன்றுதான். மற்றதெல்லாம் எந்தெந்த தியேட்டரில் எத்தனைக் காட்சி என்று கூட தெரியவில்லை.


சிவா ஒரு கோபக்கார இளைஞன். அவனுக்கு ரெளத்திரம் பழக சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார் அவனுடய தாத்தா. ஆனால் அந்த புலிக்கு பிறந்த பூனையாய் இருக்கிறார் சிவாவின் அப்பா. தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோ கதை இலக்கணப்படி, சிவா அநியாயத்தைக் கண்டு பொங்கும் போது ஒரு பெரிய வில்லனின் அல்லக்கையை அடித்துவிடுகிறான். அவர்கள் சென்னையின் மிகப் பெரிய ரவுடி கெளரி சங்கரின் ஆட்கள். கெளரி சங்கர் ஜெயிலில் இருக்கிறான். கமிஷனர் ஏசியெல்லாம் அவன் பாக்கெட்டில். ஏசி அவனைப் பார்த்து பயப்படுகிறார். கிட்டு கெளரியின் எதிர் கோஷ்டி. கிட்டு தன் அண்ணனை கொன்ற கெளரியை கொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆளாளுக்கு சிவாவை கொல்ல முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை அவன் எப்படி ஜெயித்தான் என்பதுதான் கதை.

படத்தின் ஹீரோ அனல் அரசு. அருமையாய் கொரியோகிராப் செய்யப்பட்ட சண்டைக்காட்சிகள். நிஜமாகவே இன்னவோட்டிவ் அண்ட்  இண்ட்ரஸ்டிங். சண்டைக் காட்சிகளை எக்ஸிக்யூட் செய்த விதத்தில் அசத்தல். அதற்கு பிறகுதான் எல்லோரும். குறையாய் சொல்லப் போனால் சில இடங்களில் அந்த ஸ்லோ மோஷன் ஆக்‌ஷன் சீன்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆரம்பக் காட்சியில் ஐந்து நிமிடமே வரும் ப்ரகாஷ் ராஜ் எபிசோட் அட்டகாசம்.அதற்கு காரணம் ப்ரகாஷ்ராஜின் பாடி லேங்குவேஜும், அதை படமாக்கிய விதமும் நம்ப வைக்கிறது.
Rowthiram-Stills-121 ஜீவாவிற்கு சத்யா போல ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்கு அப்புறம் ஒரு கீறல் கூட படாமல் தொடர்ந்து எல்லாரையும் பந்தாடிக் கொண்டேயிருப்பதை நம்ப முடியவில்லை. அதற்கான பாடி லேங்குவேஜும், நடிப்பும் குறையே. வழக்கமாய் ஜீவாவை கலகலவென பேசியே பார்த்த நமக்கு கொஞ்சம் பேசாத ஜீவா போரடிக்கவே செய்கிறார். தொடர்ந்து இவரை கொல்ல முயல்வதே ஒரு கதையாய் போனவுடன் ஆரம்பித்த சுறுசுறுப்பு சுர்ரென இறங்கிவிடுகிறது.
shriya-apr01 ஸ்ரேயாவுக்கு கொடுத்த காசுக்கு உருப்படியான கேரக்டர். வழக்கமாய் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர் போலில்லாம கொஞ்சம் யோசிக்கும்படியான கேரக்டரை கொடுத்ததற்கு இயக்குனருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்ளுங்கல் ஸ்ரேயா. வழக்கம் போல் ஸ்ரேயா முகத்துக்கு கீழே நன்றாக நடித்திருக்கிறார். ம்ஹும். ஜெயபிரகாஷின் நடிப்பு படத்துக்கு படம் ஏறிக் கொண்டே போகிறது. கச்சிதமான நடிப்பு.  சத்யன் படத்தின் சீரியஸ்தனத்தை குறைக்க உதவுகிறார். கிட்டு வாக வரும் அந்த மகாகுண்டு கணேஷ் ஆச்சார்யா, கவுன்சிலர், கெளரியின் அல்லக்கை, இன்னொரு லோக்கல் அல்லக்கை ரவுடியாக வரும் இயக்குனர் கோகுல், பக்கா லோக்கல் பாஷை பேசும் எம்.எல்.ஏ என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லா கேரக்டர்களும் வரும் போது பெரிய பில்டப்போடு தான் வருகிறார்கள் முடியும் போது பொசுக், பொசுக்கென வீழ்ந்துவிடுகிறார்கள்.

சண்முகசுந்திரத்தின் ஒளிப்பதிவு சண்டைககாட்சிகளில் நன்றாகவே படம்பிடித்திருக்கிறது. புதிய இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி பெரிதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை. ஒரு உதித்நாராயண் பாட்டு மட்டுமே தேறுகிறது. அதுவும் இருக்கிறதில். பின்னணியிசை ராஜா என்றிருந்தார்கள். கார்த்திக் ராஜாவா? சுமார்.
 routhiram1 எழுதி இயக்கியிருப்பவர் கோகுல். முதல் படத்திற்கு நல்ல அவுட்புட்தான் என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் அப்படியே தொங்கிப் போய் சரிடா இப்ப அவனை கொல்லப் போறீங்களா? இலலியான்னு புலம்ப வைத்துவிடுகிற அளவுக்கு டிராகிங்காக போனது தான் பெரிய மைனஸ். குடும்ப சம்மந்தப்பட்ட காட்சிகளில் கிடைக்கும் சுவாரஸ்யம் பின் பாதியில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் இல்லாம போய்விடுகிறது. கெளரி.. கெளரி என்று ஆளாளுக்கு சொல்லும் போது  நடு முதுகில் சில்லென ஏற வேண்டும் என்கிற அளவுக்கு முதல் பாதியில் பில்டப் செய்தவர்கள். அதற்கான கரெக்டான காஸ்டிங்கை செய்திருந்தால் இன்னும் ஏறியிருக்கும் சூடு. ஆனால் கெளரி என்கிற கேரக்டரை காட்டியதும் தியேட்டரில் ரசிகர்கள் எப்போது சிரித்தார்களோ அப்பவே படம் வீழ்ந்துவிடுகிறது. நிஜத்தில் மாபெரும் தாதாக்கள் எல்லாம் கெளரியாக வரும் சென்ராய் போலத்தான் இருப்பார்கள் என்றாலும் அந்த இடத்தில் வேறு ஒரு ஆளை நிறுத்தியிருந்தால் கிடைத்திருக்கும் இம்பாக்டை இழந்துவிட்டார்கள். அதற்கேற்றார் போல கெளரியும் பெரியதாய் ஏதும் மெனக்கெடவில்லை. ஒரே ஒரு முயற்சியை தவிர, அருமையாய் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி.  குட்டி குட்டியாய் நிறைய வேலைகளை இயக்குனர் செய்திருக்கிறார். கெளரியின் ஆட்கள், அந்த கவுன்சிலர், எம்.எல்.ஏ, எதிர் கோஷ்டி கிட்டு, அவனது ஆட்கள், இவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் எல்லாம் படு நேச்சுரல். படம் ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட வில்லன்களை காட்டியதில் எவனோடு தான் ஜீவாவுக்கு ப்ரச்சனை என்று மழுங்கி போகும் அளவிற்கு ஒரே வில்லன் கோஷ்டியாய் இருப்பது ஒரு மைனஸே.

ஒரு சாதாரணன் இவ்வளவு பெரிய கோஷ்டியை எதிர்த்தான் என்றால் அவனுக்கான க்ளைமாக்ஸ் இதுவென ஒத்துக் கொள்ளலாம். ஒரு அடிகூட படாமல் துவம்சம் செய்யும் ஜீவாவின் கேரக்டருக்கான க்ளைமாக்ஸாக இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
ரெளத்திரம்- இன்னும் பழகணும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

சுடு சோறா ?
ஃஃஃஃஃசிவா ஒரு கோபக்கார இளைஞன். அவனுக்கு ரெளத்திரம் பழக சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார் அவனுடய தாத்தா. ஃஃஃஃ

அப்ப படம் சூடு கிளப்பும் போல தான் இருக்குங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.
Sivakumar said…
// "சிவா" அநியாயத்தைக் கண்டு பொங்கும் போது ஒரு பெரிய வில்லனின் அல்லக்கையை அடித்துவிடுகிறான் //

என்னப்பத்தி பப்ளிக்குட்டி பண்ணாதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா......
Sivakumar said…
அசந்தா ஊழல் பண்றது அரசியல்வாதி பாலிசி. எப்பேர்பட்ட படமா இருந்தாலும்அசராம பாக்குறது கேபிள் பாலிசி.
Anonymous said…
ரெளத்திரம் ரொம்ப அறுத்திரும்னு நினைக்கிறேன் :)
சில படங்கள் உங்க விமரிசனம் படித்த்
பிறகுதான் பாக்கலாம் போலவே தோனுது. வரும் எல்லா படங்களிலுமே சேம் ஸ்டோரி, அடிதடி, பாட்டு டான்ஸ் என்று ஒரே சொதப்பல்தான்.
Enna thalaiva ippadi solliteenga? "Senganthal" is an amazing song. Haricharan's voice and composition is very good.
மணி said…
சண்டைக்காட்சிகள் வடிவமைப்பில் அமர்க்களப்படுத்திட்டாங்க. ஒரு ஆக்சன் படத்துக்கு இவ்வளவு நீளமான திரைக்கதை மைனஸ். புதுமுக இயக்குநர் என்பதால் சில குறைகளை மறந்து பார்க்கலாம். சண்டைக்காட்சிகள் தவிர்த்து சத்யனின் காமெடியும் கொஞ்சம் ப்ளஸ்.

அந்த கவுன்சிலரின் அறிமுக காட்சி அவரது சென்னைத்தமிழ் அட்டகாசம், கௌரி ஒரு மொக்கை பீஸா காண்பித்ததில் இயக்குநர் சினிமா தனத்திற்கு மாறியிருக்கலாம். கணேஷ் ஆச்சார்ய்யாவுக்கு இதுல பெருசா வேலை இல்லை பேசாம டான்ஸை கவனிக்கலாம்.
படம் ஹிட் ஆகுமா ?
ஆகாதா ?
இந்த படத்தில் எனக்கு Maalai Mangum Neram பாடல் ரொம்ப பிடிக்கும். இதை கார் ஓட்டிக்கொண்டே கேட்டு பாருங்கள்.
sweet said…
yes ur review is good...

i have seen this movie

maha mokkai, kandippa flop thaan

poyum poyum jeeva padam-nu nambi poyee kaluttthu arupattadhu thaan micham

waste
aotspr said…
நல்ல விமர்சனம்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
Today i saw this movie because of this title...
paadhi padam jeeva character maathiri poguthu...

Meethi paadhi thangachi maapillai character maathiri poguthu...

I think solla vantha karuththa sollitaanga...
your post is copied here..

http://tamilkadalanposts.blogspot.com/2011/08/blog-post_15.html