கொத்து பரோட்டா - 01/08/11


நேற்று முந்தினம் என் பிறந்தநாள். முதல் நாள் ராத்திரியிலிருந்தே எஸ்.எம்.எஸ் மூலமாகவும், தொலைபேசியிலும், ஃபேஸ்புக்கிலும், ஜி+லும், பஸ்ஸிலுமாய் திகட்ட, திகட்ட வாழ்த்திய அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என் பிறந்தநாள் அன்றே அண்ணன் அப்துல்லா, பட்டுக்கோட்டைபிரபாகருக்கும் பிறந்த நாள் என்று அறியும் போது மேலும் சந்தோஷமாயிருந்தது. அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
######################################################


செவிக்கினிமை

டி.இமானின் இசையில் வெளிவந்திருக்கும் “நினைவில் நின்றவள்” படத்தில் வரும். “சின்ன பூவே” என்கிற பாடல் கேட்டவுடன் இம்ப்ரஸிவ். பல்ராம், மற்றும் அனுராதா சேகர் பாடியுள்ள இந்த பாடல் கேட்ட மாதிரியே இருந்தாலும். நல்ல மெலடி. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ”கள்வனே என் கள்வனே” என்கிற பாடலும் நல்ல ஃபூயூசன். நிலா அது வானத்து மேலேவையும் ரீமிக்ஸியிருக்கிறார். ஓகே.
###################################################
சட்டம் ஒயுங்கு
அதிமுக பிரமுகர் மீதிருந்த இன்னொரு நில அபகரிப்பு கேஸும் வாபஸாகிவிட்டது. வழக்கு கொடுத்தவரே தனியே செட்டில் செய்து கொள்வதாய் சொல்லி கேஸை வாபஸ் வாங்கிவிட்டாராம். நடு நிலை. சக்ஸேனாவிற்கு மட்டும் ஒரு கேஸ் வாபஸான இன்னொன்னு ஆட் ஆவுது.
########################################################
தமிழ் நாடே எதிர்பார்த்த கலாநிதிமாறன் போலீஸ் விசாரணை நடைபெறாதது ஏமாற்றமாயிருந்தது பல பேருக்கு. முக்கிய குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் இனி அவரிடம் விசாரணை செய்ய தேவையில்லை என்கிறார்கள். அடுத்த மூவ் என்னவாகயிருக்கும் என்று ஆர்வமாயிருக்கிறது.
##########################################################
கடந்த மூன்று மாதமாய் தமிழ் திரைப்படங்களுக்கான வரி விலக்கை அளிக்கும் கமிட்டியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வரிவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கிறது அரசு. சில மாற்றங்களுடன். முக்கியமாய் தமிழில் மட்டுமே பெயர் வைத்தால் பத்தாது. அது “யு’ சர்டிபிகேட் படங்களாய் இருத்தல் வேண்டும் என்றும், தமிழ் கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் படங்களுக்கும் தான் வரி விலக்கென்றும் அறிவித்துள்ளது. தமிழில் பெயர் வைத்ததால் பிட்டு படத்துக்கு கூட வரி விலக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க “யு” சர்டிபிகேட் படங்களுக்கு மட்டும்தான் என்கிற இந்த சட்டம் வழி வகுக்கும் என்றாலும், பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இயக்கும் படங்கள் எல்லாவற்றிக்கும் கட்டிங் கொடுத்தாவது ‘யு” சட்டிபிகேட் வாங்குவார்கள். சில “யு” சர்டிபிகேட் படங்களில் வரும் காட்சிகள் எல்லாம் படு “ஏ”தனமாய் தானிருக்கிறது. இதற்கு பதிலாய் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேண்டுமென்றால் தியேட்டரில் தமிழ் படங்களுக்கு வரி குறைந்த அனுமதி கட்டணம் கொடுத்தால் தான் என்று சட்டம் போட்டிருக்கலாம். தீடீரென தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் மக்களை பிழிந்தெடுக்கும் தியேட்டர் அனுமதி கட்டணம் குறைக்க பாடுபடுவோம் என்று அறிக்கை விட்டிருப்பது காமெடியாய் இருக்கிறது. உள்ள வலிக்குதோ.. என்னவோ..
###########################################################
பழைய எம்.ஜி.ஆர் படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களுக்கு மவுசு உள்ளது போல, சிவாஜி நடித்த பழைய படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் சென்னை சாந்தியில் சிவாஜியின் “கெளரவம்” திரைப்படத்தை போன வாரம் வெளியிட்டார்கள். புதிய படங்களுக்கு கூட முப்பது பேர் நாறபது பேர் தான் வரும் காலத்தில் செம கலக்‌ஷனாம். அதனால் நிறைய பழைய சிவாஜி படங்களை தூசு தட்ட் ஆர்வமாகிவிட்டனர் விநியோகஸ்தர்கள். அதில் முக்கியமானது கர்ணன். ப்ரிண்டை முழுவதும் டிஜிட்டல் இண்ட்ர்மீடியேட் செய்து டி.டி.எஸ் முறையில் ஒலிப்பதிவையும் சரி செய்து முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு அளிக்க தயாராகி வருகிறது கர்ணன். அதற்கு முழு முயற்சியையும் விநியோகஸ்தர் திவ்யா பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. ஓல்ட் இஸ் கோல்ட்
########################################################
சமச்சீர் கல்வியை இன்னமும் செயல்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன் என்றே புரியவில்லை. பொது வாழ்க்கைக்கு என்று வந்த பின்பு இவ்வளவு ஈகோ தேவையா? என்ற கேள்வி ஆதரவு கொடுப்பவர்கள் மனதிலும் எழத்தான் செய்கிறது. கொஞ்சம் யோசியுங்க..
#####################################################
திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கோயம்புத்தூரில் பிரியாணி சகிதமாய் நடந்து முடிந்துவிட்டது. பிரியாணி செய்து சாப்பிட்டதை தவிர சொல்லிக் கொள்கிறார்ப் போல ஏதும் நடக்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடம் ஆரம்பித்து உயர்நிலையில் உள்ளவர்கள் வரை தலைமையில் மாற்றம் தேவை என்று ஃபீல் செய்து கொண்டிருக்கும் வேலையில் அதை செயல் படுத்தாமல் இருப்பது மேலும் வீழ்ச்சிக்கு வித்தாகாது?
#########################################################
ப்ளாஷ்பேக்
பாடல் ஆரம்பித்த அடுத்த கணம் மளுக்கென கண்களில் கண்ணீர் கட்டிக் கொள்ளும். என்னா பாட்டுடா? என்று உருக வைத்திடும். இளையராஜாவின் இசையும், குரலும் நம்மை உருக்கிக் கொண்டிருக்க, மகேந்திரனின் மாண்டேஜுகள் இன்னும் நம்மை உள்ளூக்குள் இழுத்து ஒரு விதமான நெகிழ்வான அனுபவத்தை எந்த காலத்திலும் தரும் “மெட்டி ஒலி” என்கிற இந்த நண்டு படப் பாடல். மொட்டை.. மொட்டைதான். இப்படத்தில் வரும் ஓவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும்.

###########################################################
மை கார்னர்
சன் டீவியில் மாபெரும் வெற்றி பெற்ற மலர்கள் சீரியலில் வரும் காட்சி இது. இதன் இயக்குனர் பத்ரி. சின்ன கேரக்டரில் நடித்து கொண்டிருந்த எனக்கு ஆடுகிறான் கண்ணன் என்கிற தொடரில் பெரிய கேரக்டர் கொடுத்து ஆதரவளித்தவர். வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு பட இயக்குனர்.

##########################################################
அடல்ட் கார்னர்
எமதர்மன் ராஜா நரகத்துக்கு வந்தவன் கிட்ட சொன்னாரு பூலோகத்தில இருக்கும் வரை நரகத்தை நம்பல ஆனா இப்ப  நரகத்துக்கு வந்துட்ட. நீ பாவம் செய்ததுக்கு இங்க மூணு தண்டனை ரூம் இருக்கு, உனக்கு எந்த ரூம்ல தண்டனை வேணும்ன்னு நீயா பாத்து தேர்ந்தெடுத்துக்கலாம் " என்று சொல்லி அழைத்து போய் ஒவ்வொரு ரூமா காமிச்சார்.

எமதர்மன், "இது முதல் ரூம், இதுல நிறைய சாப்பாடு இருக்கு, உன் இஷ்டத்துக்கு நீ சாப்பிடலாம்" என்றார்.  மனிதன் முதல் ரூமை வேண்டாம் என்று சொன்னார்..

எமதர்மன், "இது இரண்டாவது ரூம், வித விதமான உடைகள் இங்கே கொட்டி குவிஞ்சி கிடக்கு..உன் இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் எப்போ வேணாலும் போட்டுக்கலாம்" என்றார்.

 மனிதன் இரண்டாவது ரூமையும் வேண்டாம் என்று சொன்னார்.

எமதர்மன் மூன்றாவது ரூம் கதவை திறந்தார்.

அங்கே ஒரு சூப்பர் பிகர் ஓரு ஆணின் லுல்லாவை மவுதிங் செய்து கொண்டிருந்தாள்.

எமதர்மன் கேட்பதற்கு முன்னதாகவே மனிதன் மூன்றாவது ரூம் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டார். எமதர்மன் சரி என்று சொன்னார்.

  மனிதன் எமதர்மனிடம், "நீங்க எதோ தண்டனை ரூம் என்று சொன்னீங்க, ஆனா பாத்தா அப்படி தெரியலையே..மூணாவது ரூம் ரொம்ப சூப்பர்" என்றபடியே மூணாவது ரூமுக்குள்ள நுழைந்தார்.

 அப்போது எமதர்மன், "அம்மா உன் தண்டனை முடிந்தது. நீ எழுந்து இந்த நரனுக்கு இடம் கொடு" என்றார்
##############################################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

சுடக் சுட ஒரு கொத்து புரோட்டா பார்சல்
காலப் ப்ரியாவிற்கும் அதே நாள் தான் பிறந்தநாள்.இன்று ஒரு தகவல்
shan said…
birthday wishes....Kothu arumai.....Cinima, arasial, sambavam,nattu nadappu, classic, adult...kalakkal koyhu!
sugi said…
This metti oli song is one of my favourites.. evergreen... whenever i hear this song,It evokes my memories..
Lovely kothu Parotta.
Thx.
Anonymous said…
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
“மெட்டி ஒலி” என்கிற இந்த நண்டு படப் பாடல்

Correct pls.. Film name is "Metti"
KANA VARO said…
வழமை போல ரசித்தேன்
ஐயையோ பிறந்த நாள தவற விட்டிட்டனே பிந்திய வாழ்த்துக்கள் அண்ணாச்சி...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
Anna...
Happy Birthday.
Koththu arumai...
Sinnappoovey padal my favourite. Arumaiyana padal.
R.Gopi said…
Belated Birthday wishes to you Shankar ji, Abdulla ji & Pattukottai Prabhakar ji...
sarav said…
Belated Birthday wishes to Cable Shankar ji. Also convey wishes to Mr Abdulla and Pattukottai prabhakar
Bala said…
Belated birthday wishes to you Mr.shankar.
Regards
Bala
Ba La said…
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Belated Birthday Wishes SIR.

Regards
S.Sakul Hameed
Anonymous said…
http://specialdoseofsadness.blogspot.com/


add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...

add tis movie blog too in ur google reader

http://cliched-monologues.blogspot.com/
R. Jagannathan said…
You don't know me. So what? I know you - by your blogs! Happy Birth Day! - R.J.
Anonymous said…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே
dear cable !

this is the link for the movie that what i mention when i was in cochin 3 days before!

http://search.utorrent.com/search.php?q=salt%20n%20pepper&e=http%3a//www.bittorrent.com/search%3fclient%3dutorrent3000%26search%3d&u=1&source=tb

regards
sharfudeen
Lusty Leo said…
Belated wishes Cableji...
Sen22 said…
Belated B'day wishes Cable Ji...
Gobs said…
Belated bday wishes ..cableji..I m happy you also born in the same birth month of mine ;)
Unknown said…
தல, மன்னிச்சுக்கங்க.. வாழ்த்து சொல்ல முடியல..

Belated B'day wishes!!!
அருண் said…
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல,வழக்கம் போல கொத்து பரோட்டா அருமை.
-அருண்-
BalHanuman said…
Belated B'day wishes...
Anonymous said…
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே..

கதை 'நச்'
Anonymous said…
உங்கள் பிறந்த நாளென்று இப்போதுதான் தெரிந்தது, வாழ்த்த தவறிவிட்டேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேற்றைக்கும் அடுத்த பிறந்த நாளுக்கும் சேர்த்து...
// இதற்கு பதிலாய் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேண்டுமென்றால் தியேட்டரில் தமிழ் படங்களுக்கு வரி குறைந்த அனுமதி கட்டணம் கொடுத்தால் தான் என்று சட்டம் போட்டிருக்கலாம்.//

athu....!