
இந்த படத்தின் விளம்பர டிசைனைப் பார்த்தவுடன் படத்தைப் பற்றிய ஒரு ஆர்வம் உண்டானது. இதன் ஆடியோ ரிலீசின் போது அவர்கள் அந்த இன்விடேஷனில் காட்டிய வித்யாசங்கள் மேலும் ஆர்வத்தை கூட்டின. அவ்வளவு டீடெயிலிங். டி.ஆர் பாடிய “டூடா” என்கிற பாடல் வேறு ஏற்கனவே ஏறியிருந்த எதிர்பார்ப்பை இன்னும் தூக்கி வைத்திருக்க.. அத்துனை எதிர்பார்ப்பையும் திருப்தி செய்ததா டூ?

சிட்டி சப்ஜெக்ட். கிட்டத்தட்ட குஷி பட பாணியில் ஈகோ ப்ரச்சனையால் பிரியும் காதலர்கள் ஒன்று சேர்கிறார்களா? இல்லையா? என்கிற கதை தான். ஆனால் அதை சொல்லிய பாணியில் தான் குஷியும், டூவும் வேறு படுகிறது. இம்மாதிரியான கதைகளில் முதலில் ஆணித்தரமாய் அமைய வேண்டியது கேரக்டரைஷேஷன்கள். ஹீரோ இது மாதிரியான கேரக்டர், ஹீரோயின் இம்மாதிரியான கேரக்டர். இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் எப்படிப்பட்டது? அது எங்கே உடையுமோ? என்ற பதைபதைப்பு நமக்கு ஏற்பட அவரக்ளூடே நாம் பயணப்பட வேண்டும். அதற்கு அக்கேரக்டர்கள் நமக்கு பிடிக்க வேண்டும். சுவாரஸ்யமான காட்சிகளால் நம்மை அசத்த வேண்டும். முக்கியமாய் கதாநாயகி நம்மை கவருகிறவராய் இருக்க வேண்டும். இத்தனை வேண்டும்களோடு நல்ல திரைக்கதையும் அமைந்துவிட்டால் அதிரிபுதிரியாய் ஒரு படம் கிடைத்திருக்கும்.

ஹீரோ வஸந்த் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் கல்யாணம் செய்து வைக்கும் குமாஸ்தா. ஹீரோயினோ சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் பெண். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஸ்கூல் நாட்களில் ஹீரோ ப்ரபோஸ் செய்திருக்க, தான் நன்றாக படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்றும், அதனால் இப்போது தன்னால் காதல் எல்லாம் செய்ய முடியாது என்று மறுத்துவிடுகிறாள். அவ்வளவு தெளிவான பெண். அப்படிப்பட்ட பெண் வெகு வருடங்கள் கழித்து ஒரு பஸ்ஸில் சந்தித்து போன் நம்பர் வாங்கிய அடுத்த நாளே இருவரும் காதல் வயப்படுவதும், ஒரே பாட்டில் ஹீரோயின் “ஐ லவ் யூ” சொல்வதும், அடுத்தடுத்த காட்சிகளில் தொடர்ந்து இருவரும் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பதும் ஒட்டவேயில்லை. அது மட்டுமில்லாமல் இவர்களுடய கேரக்டர்களின் ப்ரச்சனை என்ன என்பதே சரிவர விளக்கப்படவில்லை.

முந்தினம் பார்த்தேனே பட ஹீரோ சஞ்செய்க்கு அடுத்த படம். நடிப்பில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் குழப்படியான கேரக்டரால் எதுவும் பெரியதாய் இம்பரஸ் ஆகவில்லை. அதே போல் சுமித்ராவின் சின்ன மகள் நட்சத்திரா, தாவாங்கட்டைக்கு மேல் சின்ன சுமித்ராவாக இருக்கிறார். ஆனால் இந்த கேரக்டருக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை. மற்றவர்களுக்காக தானும் மாறமாட்டேன் அவர்களும் மாற வேண்டாம் என்கிற உறுதியுள்ள கேரக்டரைஷேஷன் இண்ட்ரஸ்டிங்காக இருந்தாலும் கன்வின்சிங்கான காட்சிகள் இல்லை என்பதால் ஏறவில்லை. அதிலும் சஞ்சய் கோபித்துக் கொள்ளும் காட்சியெல்லாம் குழந்தைத்தனமாய் இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சங்கீதாவின் நடிப்பு ஓகே. ஆனால் சில சமயம் ரொம்ப மெச்சூர்டாகவும், சஞ்செய்யின் காதலியா? அல்லது தோழியா? என்ற குழப்பம் படம் பார்க்கிற நமக்கு இருக்கிறார் போல கதையிலும் இருப்பதால் பெரிய ட்விஸ்ட் வரப் போகிறது என்று எதிர்பார்க்க முடியவில்லை. நண்டு ஜெகன், ஜீவா என்று நான்கு நண்பர்கள் பட்டாளத்துடன் இரண்டு சீனுக்கு ஒரு முறை காமெடி என்கிற பெயரில் தண்ணியடிப்பதும் எதையாவது பேசிக் கொண்டிருப்பதும் எரிச்சலாய் இருக்கிறது. ஜெகனின் வசனங்கள் மட்டும் ஆங்காங்கே பளிச்..பளிச். ஊர்வசி, ராஜேஷ் ஆகியோரும் படத்தில் உள்ளார்கள்.

ஒளிப்பதிவு மாறன். உருத்தாத ஒளிப்பதிவு. இசை அபிஷேக், லாரன்ஸ் இரட்டையர்கள். இவர்களின் இசையில் ராஜேந்தர் பாடிய பாடல் கேட்கும் போது இருந்த பெப் படத்தில் இல்லை. சண்டைக் காட்சிகளில் இவர்களது பின்னணியிசை இரைச்சல். சண்டைக்காட்சிகளில் இரைச்சலின் உச்சம்.
எழுதி இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். லட்டு மாதிரியான கதை களன். நல்ல திரைக்கதை இருந்திருந்தால் அடிச்சு ஆட வேண்டிய பிட்ச். ஆனால் தவறான கேரக்டரைசேஷனாலும், திரைக்கதையாலும் சோடை போயிருக்கிறது. ஒரு காதலன் காதலி இருவருக்கும் ப்ரசச்னை வந்து அவரவர்களுக்கு கொடுத்த பரிசுப் பொருட்களை மாற்றிக் கொள்ளும் போது படம் பார்பவர்களுக்கு ஒரு வலி வர வேண்டாம்? அது திரையிலிருப்பவர்களுக்கும் வரவில்லை. நமக்கும் வரவில்லை. நிறைய காட்சிகளில் நாடகத்தன்மை அதிகம். முதல் பாதி ரொம்ப நேரம் போவது போல ஓர் உணர்வு வந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் சுத்தமாய் அந்த பெப் குறைந்து போய் இவர்கள் எப்படியும் சேரத்தான் போகிறார்கள் என்று தெரிந்து விடுவதால் பொசுக்கென போய்விடுகிறது.
பாஸிட்டிவான விஷயஙக்ள் என்றால் நீட்டான, டீஸெண்டான படத்தை அளித்திருப்பதும், ஆங்காங்கெ பளிச்சிடும் வசனங்களும், சின்ன பட்ஜெட்டில் சிறப்பாக தயாரித்த த்யாரிப்பளர்களும் தான்.
டூ- டுட்டுடூ
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
20 comments:
முதல் மழை....
che vadai miss ayidichi,
irandaavathu mazhai!!!
///// கிட்டத்தட்ட குஷி பட பாணியில் ஈகோ ப்ரச்சனையால் பிரியும் காதலர்கள் ஒன்று சேர்கிறார்களா? இல்லையா? என்கிற கதை தான்./////
படம் பார்க்கல கொஞ்சமாச்சும் வெரைட்டி இருக்கும் போ இருக்கே.. பார்ப்போம் பார்ப்போம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
டுட்டுடூ...
//டுட்டுடூ//
அப்ப விட்டுடூ ன்னு சொல்றீங்களா,கேபிள்ஜி?
உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணைத்துள்ளேன்.
//ஏற்கனவே ஏறியிருந்த எதிர்பார்ப்பை இன்னும் தூக்கி வைத்திருக்க.. அத்துனை எதிர்பார்ப்பையும் திருப்தி செய்ததா டூ? //
யார் எதிர்ப்பார்த்தார்கள்? எப்போது எதிர்ப்பார்த்தார்கள்? இதென்ன புதுக்கதை?
இப்படியொரு படம் ரிலீஸ் ஆகியிருப்பதே உங்கள் விமர்சனத்தின் மூலமாகதான் தமிழர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
//ஏற்கனவே ஏறியிருந்த எதிர்பார்ப்பை இன்னும் தூக்கி வைத்திருக்க.. அத்துனை எதிர்பார்ப்பையும் திருப்தி செய்ததா டூ? //
யார் எதிர்ப்பார்த்தார்கள்? எப்போது எதிர்ப்பார்த்தார்கள்? இதென்ன புதுக்கதை?
இப்படியொரு படம் ரிலீஸ் ஆகியிருப்பதே உங்கள் விமர்சனத்தின் மூலமாகதான் தமிழர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
டுட்டுடூ...
டுட்டுடூ...
டுட்டுடூ...
டுட்டுடூ...
டுட்டுடூ...
டுட்டுடூ...
yuva.. நீங்கள் ஒருவர்தான் தமிழரா..? :))
ஷங்கர் ஜி, நீங்க ஹிந்தி, தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் படங்களைப் பத்தின விமர்சனம் எழுதுறீங்க...ஆனா மலையாளம் படங்களைப் பத்தி எழுதுவதில்லையே..ஏன்? மலையாளம் புரியுறது கூட கஷ்டம இல்லையே..
கிட்டத்தட்ட எல்லா படத்துலயும் ஒளிப்பதிவு நல்லா இருக்குன்னு போடறீங்க...நமக்கு வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் அவ்வளவு திறமைசாலிகளா? சும்மா கேட்டேன்.
விளம்பர டிசைனை பாத்து படம் போகணும்னா ஆல்மோஸ்ட் எல்லா படத்துக்கும் போகணும். அதெல்லாம் நல்லாத்தான் செய்யறாங்க. வாட் எ மூவின்னு சொல்லுறா மாதிரி படம் வர்றது ரொம்ப கம்மியா இருக்கே சார்! Tomorrow I am going to 'I am Kalam'. I saw Rise of the Planet today. Mass Entertainer!!
மலையாள படங்களையும் எழுதுகிறேன். புதிய படங்கள் பார்க்க வாய்பதில்லை. அவ்வளவுதான். சமீபத்தில் கூட நீலத்தாமரா, பாஸஞ்சர் போன்ற படங்களை பற்றி எழுதினேன்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் புதியவர். இவரின் முதல் படத்திற்கு நல்ல ரிசல்ட் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை அதனால் ஓகே நல்ல ஒளிபபதிவு என்று சொல்லியிருக்கிறேன்.
Pori padathula ungala patha mathiri gnyabagam.. romba nalla performance :P
pori padathula.. oru pori kuda naan theriya mateen
:)
//yuva.. நீங்கள் ஒருவர்தான் தமிழரா..? :))//
அப்போன்னா இந்தப் படத்தை பத்தி தமிழ்நாடு முழுக்க எந்திரன் லெவலுக்கு தமிழர்கள் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தாருன்னு சொல்றீங்களா கேபிள்? :-)
Post a Comment