Thottal Thodarum

Aug 2, 2011

Cowboys And Aliens ங்கொய்யால..

cowboys_and_aliens08 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஐயர்ன் மேன் இயக்குனர், ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரேக், ஹாரிஸன் ஃபோர்ட், என்று பெரிய நட்சத்திரங்கள். ஏதோ 2000 கோடி பட்ஜெட், அது இதுவென பெரிய பரபரப்பு ஏற்படுத்திய விளம்பரங்கள் எல்லாம் சேர்ந்து இம்மாதிரியான டெம்ப்ளேட் படங்களையே பார்க்காத என்னை பார்க்க வைத்த படம்.


cowboys_and_aliens09 கவ்பாயும், ஏலியன்களும் என்ற டைட்டிலும் படத்தின் மீதான ஆர்வத்திற்கு காரணம். ரொம்ப நாள் ஆயிற்று கவ்பாய் படம் பார்த்து என்ற ஏக்கமும், ஹாரிசன் போர்டை மீண்டும் வெள்ளித்திரையில் ஆக்‌ஷன் அவதாரத்தில் பார்க்கும் ஆர்வமும் சேர்ந்து கொள்ள, ஆரம்ப கவுபாய் காட்சிகள், சண்டை துப்பாக்கி சுடல் என்று பரப்ரப்பாய்த்தான் இருந்தது. ஆனால் அதன் பின் தான் நாமே உக்கார்ந்து கொண்ட சூனியம் என்று புரிந்தது.
cowboys_and_aliens11 ஜேக் என்கிற ஒருவன் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கிறான். அவன் கையில் ஒரு வித்யாசமான வளையம் ஒன்று மாட்டியிருக்க, அதை உடைக்க முயற்சிக்கிறான் முடியவில்லை. அவனைப் பற்றி யோசித்துப் பார்க்கிறான் ஞாபகத்திற்கு வரவில்லை. தன்னை யார் என்று தெரியாமல் குழம்பியிருக்கும் நேரத்தில் ஒரு கும்பல் அவனை கண்டு கொள்ள, அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்று, வேறு ஒரு ஊருக்கு வருகிறான். வந்த இடத்தில் வழக்கம் போல வில்லனுடய பையன் அட்டகாசம் செய்ய, அவனை எதிர்க்கிறான். வேறென்ன அவனுடய அப்பா ஒரு பெரிய ஆள். அவரு வேற ஆரா இருக்க முடியும் நம்ம ராஜ்கிரன் மாதிரி அங்க ஹாரிசன் போர்டு.  வந்த ஒடனே தன் புள்ளைய அடிச்சவன் யாருடாங்கிறாப் போல அவரு கேட்க, நம்மாளு என்னை பத்தி ஏதுவும் தெரியலைன்னு உண்மைய சொல்றாரு.. பேசிட்டிருக்க சொல்ல, சண்டை வந்திருது. நடுவில என்னாங்கடா.. பேசிட்டேயிருக்கீங்கன்னு யோசிச்சப்போ.. எலிங்க சாரிஏலியன்களை காணோமேன்னு நினைக்கிறப்போ.. திடீர்னு வானத்துலேர்ந்து பூமில இருக்கிற ஆளுங்களையெல்லாம்  ஒரு கொக்கிமாரி போட்டு தூக்கிட்டு போயிருதுங்க.. அப்ப ஜேக் கையில இருக்கிற வளையம் ஒர்க் ஆவுது. ஒடனே சண்ட போட்ட ஜேக்கும் ஆரிசன் போர்டும் ஒட்டுகா போயி எலியனை அழிக்கிறாய்ங்க.. நடுவில வெற்றி விழா கமலுக்கு ஞாவகம் வந்த மாரி.. ஒரு லவ் மேட்டர் ஓடுது அந்த பொண்ணு காட்டுவாசிங்க கிட்ட ஒரு சரக்கை வாங்கி கொடுத்து ஞாவகம் வர வச்சிருது. அப்பால என்னா.. உட்டா கதை முளுசா கேப்பியே.. டவுன்லோட் பண்ணி பாத்துக்க.. அதுக்கு கூட லாயக்கு இல்லை.
cowboys-aliens-20110716030806513_640w ஹாலிவுட் காரர்கள் கூட மொக்கையாய் படமெடுக்கிறார்கள் என்பதை நிருபிக்க வந்த ஒரு வேட்டைக்காரன், சுறா, ஆழ்வார். ஒருத்தராச்சு நடிப்பேனாங்கிறாப்புல அரையிருட்டுல தக்குணூண்டு துப்பாக்கிய வச்சி அம்மாம் பெரிய ஏலியனை சுடுறாய்ங்க.. அதுவும் பொட்டு பொட்டுன்னு விழுந்து சாவுதுங்க. க்ளைமாக்சுல அதுங்க இடத்துல போய் உள்ளார போக முயற்சி செய்ய சொல்ல, அதுங்க வெளிய வந்தா நமக்கு ஆபத்துதான்னு.. அப்போ ஈரோயினி சொல்லுது அதுங்களுக்கு பகல்ல கண்ணு தெரியாதுன்னு. ங்கொய்யால… அது அதுங்கிட்ட பொய் சொல்லிருக்கு போல.. நல்ல கரீட்டா பாய்ஞ்சு பாய்ஞ்சு கழுத்துல வாய் வச்சி ரத்தத்தை குடிக்குது. முக்கியமா சொல்லையில.. படத்தில வர்ற ஈரோயினி ஒரு ஏலியன். தூக்கம் தூக்கமா வர்ற படத்துல திடுதிப்புன்னு தூக்கி வாரிப் போடறாப்புல டக்கரா அ.குவா அம்மிணி வந்திச்சு.. இந்த பாழா போல ஜேம்ஸ்பாண்டு ஒரு போர்வைய போத்திவுட்டுட்டான். இருந்த ஒரு சீனும் போச்சா.. ம்ஹும். இந்த மொக்க படத்துக்கு நாலு பேரு திரைக்கதை எழுதியிருக்கானுவ.. ங்கொய்யால.. 

டெக்னிக்கலா சொல்லணுமின்னா மீசிக் ஆரம்பத்தில நல்லாருக்கு அப்பால எதுவும் சொல்லிக்கிறா மாரி இல்லை. பாருங்க நான் இத்த எழுத ஆரம்மிச்சப்ப எப்படி எளுதினேன். இப்ப எப்டி எளுதறேன்ணு.. உனிக்கும் இது மாரி ஆவணுமா? இனிமே எவனாச்சு இங்கிலீசு படம் எப்டி எடுக்கிறான் பாருன்னு சொன்னீங்க.. சும்மா அப்படியே எகிறி உட்டேன்னா.. தாராந்திருவே..
Cowboys & Aliens – Marana Mokkai.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

20 comments:

Ramachandranwrites said...

யப்பா, எப்படிங்க இப்படி படம் பாக்கறேங்க ? கண்ணை கட்டுதடா சாமி

தமிழன் said...

இன்னாபா இது ஒரே கோராமையா கீது, நம்ம கேபிள் அன்னாத்தையவே மேர்சலாகிட்டாங்கலேப்பா இந்த ஆலிவுட்டு காரங்க!

moe said...

Nallavan , Kettavan maadhiri kuppai cinemavum ella orrilum iruku..

just that the ratio varies.

உண்மை said...

//டவுன்லோட் பண்ணி பாத்துக்க.. அதுக்கு கூட லாயக்கு இல்லை. //

இது ரொம்ப தப்புங்க சார். நீங்களும் ஒரு படம் இயக்க போகறீர்கள். உங்களுக்கு வேண்டதாவன் இதே வார்த்தையை உபயோக படுத்த வாய்ப்புள்ளது. சினிமா துறை சம்பந்த உள்ள நீங்களே இதை எழுதலாமா ?

Cable சங்கர் said...

உண்மையண்ணே. ஒருதாட்டி படம் பார்த்துட்டு சொல்லுன்ணே..

Raj... said...

Cable அண்ணே... Daniel Craig & Harrison Ford, இந்த இரண்டு பேர் இருந்தும் படம் பத்து பைசா புண்ணியமில்லை...

Anonymous said...

கெளபாய் கதையை மட்டும் சொல்லியிருந்தால் படம் ஓடியிருக்குமோ என்னவோ..சென்னை பாசையில் விமர்சனம் நல்லாருக்கு

Anonymous said...

சினிமா துறை சம்பந்த உள்ள நீங்களே இதை எழுதலாமா ?//அவர் படம் இயக்கும்போது மட்டும் நாணயமா விகடன் மாதிரி விமர்சனம் எழுதாம விட்ருவாரு..! விடுங்கப்பா..

உலக சினிமா ரசிகன் said...

கருந்தேள் அவர் பிளாக்ல இப்படத்தை துவைச்சு காயப்போட்டாரு..நீங்க கொத்துக்கறியே போட்டுட்டீங்க!

sarav said...

enna thaleeva,
naanum intha padathai kandukkalam pothu nee intha mathiri eluthitiye akkahang....
ennnada ithu starmovies hbo ithula ellam sathathaya kaanum namma oru tvla mattum ore trailer potrangalae nnu paathen appala wikipedia poi paatha muthal varam collexion $36.4 million
hollywood bala thaleevar than velakkam sollonum..

apparum inga vanthu itha elutharaiye bejaaraidatheenga hollywood bala ippo ellam onniyum ezhutharathilaya ? blog illa appadinnguthu

seri varuttuma vathyarae

முரளிகண்ணன் said...

same blood

'பரிவை' சே.குமார் said...

நம்ம கேபிள் அன்னாத்தையவே மேர்சலாகிட்டாங்கலேப்பா....

சென்னை பாசையில் விமர்சனம் நல்லாருக்கு.

Selva said...

ங்கொய்யால...இந்த ஒற்றை வார்த்தையே இப்படத்தின் தன்மையை ஆரம்பத்திலேயே விமர்சனமாய் வெளிப்படுத்துகிறது.

Ravikumar Tirupur said...

தெய்வமே! விமர்சனத்தை நேற்றே போட்டிருக்ககூடாதா?! இருக்கற வேலைக்கு இடைல இப்பதான் காலைக்காட்ச்சி பார்த்துட்டுவரேன். கொன்னுட்டானுக...!
விமர்சனத்தை படிக்க,படிக்க சிரிப்ப அடக்க முடியல.
மெட்ராஸ் பாஷை சூப்பர் continue it.
அசால்டா படத்தை தொவச்சு தொங்கப்போட்டீங்க போங்க!
//ஹாலிவுட் சுறா.ஆள்வார்//

ARK.SARAVAN said...

ayyo amma...

nanum tirupur raviyum than kalai katchiku pona kadanalikal..

ama nammmmstepek vayasayirucha... kathaya keatutha panam kuduthara?

ஜெட்லி... said...

romba romba nandri... harrison ford padathai parthae aaganumnu ninaichaen...

inimae pilot pakkam 5 naal thalai vachi padukka mattaen

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

thala.... perfect vimarsanam!! appadiye rendu mani neram kothi eduthutainga!!!

உண்மை said...

// உண்மையண்ணே. ஒருதாட்டி படம் பார்த்துட்டு சொல்லுன்ணே.. //

படம் மொக்கையவே இருக்கட்டும், நான் உங்கள் விமர்சனத்த பத்தி ஒன்னும் சொல்லவில்லை. ஆனால் "டவுன்லோட்" மட்டும் encourage செய்யாதீர்கள். அதை தான் வலியுறுத்தினேன்.

ஒரு வாசகன் said...
This comment has been removed by the author.
புஷ்பராஜ் said...

ஹாலிவுட் படம்னாலே அது மொக்க படமா இருந்தாலும் நம்ம ஆளுங்களுக்கு ஒரு மரியாதை வந்துடுது,அத உடைக்கிற மாதிரி விமர்சனம் எழுதினதுக்கு நன்றி