Thottal Thodarum

Aug 30, 2011

புலி வேஷம்

முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
puli_vesham_movie_pictures_05 ஆர்.கே நடித்து வெளிவரும் நான்காவது படம் என்று நினைக்கிறேன். பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். தொடர்ந்து பத்து மாதங்கள் வாசுவை தொந்தரவு செய்து தன்னை இயக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுக்கப்பட்ட படமாம். அப்படி என்னதான் எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஆர்.கே ஒரு படிக்காத அனாதை சிறுவன். ஒரு ஆஸ்பத்திரியில் தாமரை என்கிறவருக்காக கட்டுக் கட்டாய் பணம் கொடுக்கிறான். பின்னர் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து ஸ்டைலிஷ் லுக்கோடு பஜுரோவில் வருகிறார். யார் இவர்? எப்படி இப்படி மாறினார்? யார் அந்த தாமரை?. அவர் ஏன் ஒரு பழைய வீட்டில் பனையோலை மறைத்த வீட்டில் வசிக்க வேண்டும்?. கார்த்திக் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர். உடனிருக்கும் ஆபிசர் செய்த துரோகத்தினால் தன் உயிர் நண்பனை இழந்துவிடுகிறார். அந்த கோபத்தில் துரோகம் செய்த போலீஸ்காரர்களை சட்டத்தை ஏமாற்றி கொல்கிறார். ஆனாலும் சஸ்பெண்ட் ஆகிறார். அதற்கு நன்றி சொல்லிவிட்டு, நேரே ஆர்.கேயிடம் வந்து ஊரில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் காசு கொடுத்து கொல்லச் சொல்கிறார். ஏன்? இப்படி பல ட்டுவிஸ்டுகளை அடக்கிய படம் தான் என்றாலும் முடிச்சவிழ்க்கும் போது வீச்சம் அடிக்கத்தான் செய்கிறது.
puli_vesham_working_stills_04 கொஞ்சம் காக்கை சிறகினிலே, கொஞ்சம் கிழக்கு கரை, கொஞ்சம் தன்னுடய் பழைய படங்களின் காட்சிகள். என்று கலந்து கட்டி ஒரு படத்தை நேரடியாய் சொல்லாமல் முதல் பாதியில் கொஞ்சம் திரைக்கதையில் நான் லீனியராய் சொல்ல முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு வரும் ப்ளாஷ்பேக் எல்லாம் படு சொதப்பல். ஒரு சின்னத்தம்பி தாலின்னா என்னான்னு தெரியாதுன்னு சொன்னதை நம்பி படத்தை ஓட்டினவங்க தன்னுடய எலலா படத்தையும் ஓட்டிடுவாங்கனு நினைச்சார்னா வாசு சார் பாவம். ப்ளாஷ் பேக் எபிசோட் படு மொக்கையாய் இருக்கத்தான் செய்கிறது.
rk_tamil_actor_puli_vesham_movie_stills_01 ஆர்.கே கிரமத்தானாக இருக்கும் போது இருக்கும் ஒரு ஸ்பார்க், அல்ட்ரா மாடர்னாய் ஜீரோ கட் மீசை, தாடி வைத்து ஹேர் ஸ்ட்ரெயிட்டினிங் செய்து வரும் போது செம காமெடியாய் இருக்கிறது அவரது பாடி லேங்குவேஜ். நடிப்பில் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியிருக்கிறது இவருக்கு.

கார்த்திக் தான் படத்தின் ஹீரோ போல படத்தின் ஆரம்பம் முதல் வருகிறார். ஏதோ ஹாலிவுட் பட ஹீரோ போல கொழ் கொழவென இங்கீலீஷ் பேசுகிறார். எதோ செய்யப் போகிறார் என்று நினைதால் கான்ஸ்டபிள் கூட கொஞ்சம் நன்றாக யோசிப்பான் போலிருக்கு. சதா நிஜமாகவே சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். நடுவில் ஒரு பாட்டில் அடிப் பாடுவதோடு சரி. அவர் அண்டர் கவர் ஏஜெண்டாம். அதுவும் நான்கு மாதத்தில் ரௌடி ஆனவருக்கு. கொடுமைடா சாமி. கஞ்சா கருப்பு, ஜீவா, மயில்சாமியெல்லாம் இருந்தும் சிரிப்பு ஒண்ணும் விளங்கலை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. ஒளிப்பதிவு எல்லாம் ஓகே. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ஓகே.
புலி வேஷம்.-  வெறும் வேஷம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

முஹம்மது யூசுப் said...

ஆர்கே மாடர்ன் லுக்ல வரப்ப கிலி அடையாம பாக்கலாமா? :)

Anonymous said...

சற்று பெண்மை கலந்த குரலில் ஆர்.கே பேசுவது மைனஸ். பெரிய ஹீரோக்களுக்கான ஓப்பனிங் இப்படத்தின் மூலம் எனக்கும் கிடைத்துள்ளது என்று கலைஞர் டி.வி.யில் பேசினார். நிஜமாகவே அப்படி ஒரு ஓப்பனிங் கிடைத்திருக்கிறதா?

Chitra said...

ஆர்.கே கிரமத்தானாக இருக்கும் போது இருக்கும் ஒரு ஸ்பார்க், அல்ட்ரா மாடர்னாய் ஜீரோ கட் மீசை, தாடி வைத்து ஹேர் ஸ்ட்ரெயிட்டினிங் செய்து வரும் போது செம காமெடியாய் இருக்கிறது அவரது பாடி லேங்குவேஜ்.


..... கிலி வேஷம்? ஹா,ஹா,...

kobiraj said...

''ஒரு சின்னத்தம்பி தாலின்னா என்னான்னு தெரியாதுன்னு சொன்னதை நம்பி படத்தை ஓட்டினவங்க தன்னுடய எலலா படத்தையும் ஓட்டிடுவாங்கனு நினைச்சார்னா வாசு சார் பாவம். ப்ளாஷ் பேக் எபிசோட் படு மொக்கையாய் இருக்கத்தான் செய்கிறது. ''

Unknown said...

RK படங்களை பாக்க தனி தில் வேணும் தலை.... அது உங்ககிட்ட நிறையவே இருக்கு போலிருக்கு...

சி. முருகேஷ் பாபு said...

/எதோ செய்யப் போகிறார் என்று நினைதால் கான்ஸ்டபிள் கூட கொஞ்சம் நன்றாக யோசிப்பான் போலிருக்கு./

அது ஏன் சார்... கான்ஸ்டபிள் என்று சொல்லும்போதே யோசிப்பான் என்ற ன் விகுதியும் வந்துவிடுகிறது.

உங்கள் கட்டுரைகளில் நிறைய இடங்களில் எனக்கு நெருடும் குறைபாடு இது. பதவியை வைத்து ஆளை எடைபோடுவது சரியா கேபிள்ஜி?!

shortfilmindia.com said...

rombathan யோசிக்கிறீங்க.. முருகேஷ்பாபு..

சசிமோஹன்.. said...

RK vin Hair style konjam kuda pidikavey illa apram antha udit naryan song VAREN VAREN song Engeyo ketta madhiri irunthalum Nalla iruku, apram srikandh deva Yen antha BATSHA music ah Backround panninarunu theriyala

சசிமோஹன்.. said...

shankar ji itha neenga antha BGM music ketkalaya

N.H. Narasimma Prasad said...

சங்கர் அண்ணா, நீங்க எந்த படத்தை 'ரொம்ப நல்லா இருக்கு'ன்னு எழுதப் போறீங்க?

shortfilmindia.com said...

பிரசாத். அப்ப நீங்க என் பதிவுகளை தொடர்ந்த் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

சேகர் said...

எப்டி தான் நீங்க எல்லா புது படத்தையும் பாக்குறீங்க சார். எனக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க....

ஒரு வாசகன் said...

//ஆர்.கே நடித்து வெளிவரும் நான்காவது படம் என்று நினைக்கிறேன்// ஒன்று "எல்லாம் அவன் செயல்" மற்ற இரண்டும் யாதுங்க?
நாளை 'மங்காத்தா" விமர்சனம் எதிர்பார்க்கின்றேன். டிக்கட் எல்லாம் வாங்கியாச்சா? (எப்படி உடனுக்குடன் படம் பார்க்கின்றீர்கள்? பிரிமியர் ஷோக்கு பாஸ் தருகின்றார்களா?

Anonymous said...

அப்ப புலிவேஷம்... ரொம்ப மோஷம் போல!

aotspr said...

ரொம்ப சுமார் தான்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com