Thottal Thodarum

Aug 8, 2011

கொத்து பரோட்டா – 08/08/11

காட்சிப்பிழை பத்திரிக்கைக்காக தெய்வதிருமகள் படத்தை பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு என்னை அழைத்திருந்தார் அதன் ஆசிரியர் திர். ராஜன் குறை. ஜீவாவின் தேசிய விருது பெற்ற புத்தகத்தை பற்றி பேசிய போது பழக்கம். ராஜன் குறை, மற்றும் இன்னும் பலர் வந்திருந்தார்கள். பேச்சு படு தீவிரமாய் போயிற்று. சினிமாவை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் நண்பர்கள். நடிப்பில் ஆரம்பித்து திரைக்கதைவரை பல விஷயங்களை பேசினோம். இந்த கலந்துரையாடல் அச்சில் வரும் போது எப்படியிருக்கும் என்று எனக்கு ஆவலாய் இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் பேசிய பல விஷயங்கள் ஆப்த ரெக்கார்டாகத்தான் வைக்க முடியும். வசந்தபாலனின் உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார். மிக அளவாக பேசி எல்லோரையும் கவனித்தார். நடிப்பைப் பற்றி பேசும் போது நண்பர் ஒருவர் அந்த வெஸ்கியின் தியரி, ப்ராக்டிகல் என்றெல்லாம் சொன்னார்கள். நமக்கு விஸ்கியை தவிர வேறேதும் தெரியாததால் எஸ்கேப். கூத்துப்பட்டறை முத்துசாமியின் மகன் நடேசன் வந்திருந்தார். படு கேஷுவலாய் பேசினார். எனக்கு கூத்துப்பட்டறை பற்றிய மாற்றுக் கருத்து உண்டென சொன்னேன். எனக்கே இருக்கு உங்களுக்கு இருக்காதா? என்று கேட்டு ஆர்பாட்டமாய் சிரித்தார். காட்சிப்பிழையின் கலந்துரையாடலை அச்சில் பார்க்க ஆவலாயிருக்கிறேன். என்னையும் உங்களுடன் இணைத்து கொண்டதற்கு நன்றி ராஜன் குறை அவர்களே. 
###################################


புது தலைமை செயலகத்தை மக்களின் வரிப்பணம் வீணாகாமல் என்னவாக உபயோகப்படுத்தலாம் என்று ஹிந்து பத்திரிக்கை ஒரு ஆலோசனையை நேற்றைய செய்திகளில், தலைமை செயலகத்தின் வரைபடத்துடன் போட்டு கேட்டுள்ளது. சிறந்த ஆலோசனைகளை ஆர்கிடெக்குகளை வைத்து தெரிந்தெடுத்து அதில் மூன்றை அரசின் கவனத்திற்கு அனுப்ப போகிறார்களாம். செம ஐடியா.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கப்பா.. எனக்கென்னவோ எதுவும் செய்யாம முன்னாடி ராஜாஜி ஹாலை சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டார் போல இதையும் ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விடலாம்னு தோணுது.
###############################################
ராமதாஸ் சரக்கு கடையெல்லாம் அடிச்சு தூள் தூளாக்க போறாராம். அடிக்கிறதுக்கு முன்னாடி அடிபொடியெல்லாம் சரக்கு அடிக்கணுமே அதுக்கு எங்க போவாறாம்? இப்பத்தான் இவருக்கு புரிஞ்சிருக்காம் திராவிட கட்சிகளோட கூட்டணி வச்சிட்டது தப்புன்னு. இவங்க ஆட்சிக்கு வராட்டா வேற யார் வர்றதுன்னு அவரே கேட்டுக்கிட்டிருக்காரு? ராஜ்யசபா சீட்டும் போச்சு, அமைச்சர் பதவியும் கிடைக்காதுன்னு தெரியற வரைக்கும் கூட இருந்திட்டு ங்கொய்யால இப்ப திருந்திட்டாராமா? மம்மி சும்மா விடுவாங்களா? 
################################### 
நானும் ட்விட்டர்ல ஒரு ஆளுன்னு ஆயிரம் ட்வீட்டுகளை தாண்டிட்டேன். 
####################################### 
திரைப்பட இலக்கிய சங்கமம் என்கிற அமைப்பில் என்னை சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சென்ற சனிக்கிழமையன்று  பேச அழைத்திருந்தார்கள். முழுக்க முழுக்க சினிமா உதவி இயக்குனர்களை கொண்ட அமைப்பு. சினிமா வியாபாரம் புத்தகமும், மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தாவும் அவர்களுக்கு பரிச்சயமாயிருந்தது சந்தோஷமாய் இருந்தது.  தன் சொந்த செலவில் இக்குழுமத்தை நடத்துகிறார் உதவி இயக்குனரான விஜயன். மிக சுவாரஸ்யமாக அமைந்தது அந்தக் கலந்துரையாடல். விஜயனைப் பற்றி ஒரு விஷயம். உதவி இயக்குனர் மட்டுமில்லாது ஒரு தமிழிலக்கிய ஆர்வலர். அதையெல்லாவற்றையும் விட அவர் தாய்மொழி மலையாளம் என்பதுதான்.திருக்குறளுக்கான உரையை இரண்டு வரிகள் எளியகுறள் என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். சுவாரஸ்யமான முயற்சி.. வாழ்த்துகள். 

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக.

படி பிழையின்றி படிப்பவை படித்தபின் நட அதன் படி.

 #######################################
சுவாமி ஓம்காரின்  தினம் ஒரு திருமந்திரம் புத்தக அறிமுக கூட்டத்திற்கு சென்றிருந்தேன். சொற்பமான கூட்டமென்றால் மிக அழகாய் சுருக்கமாய் நூலைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்தார் சுவாமி ஓம்கார். சில அறிய தகவல்களையும் கொடுத்தார். திருமந்திரம் சைவர்களுக்கு மட்டுமான நூலில்லை என்ற விஷயம் புதிது.
##########################################
 சின்மயி சிறந்த பாடகி என்று தெரியும். ஆனால் பல படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் என்ற விஷயம் பல பேருக்கு தெரியாது. பின்னணி பேசியதற்காக ஆந்திர அரசின் இந்த வருட  நந்தி விருதை பெற்றிருக்கிறார் ”ஏ மாய சேஸாவோ” என்கிற தெலுங்கு திரைப்படத்திற்காக. ”ஏ மாய சேஸாவோ” ”விண்ணைத்தாண்டி வருவாயா”வின் தெலுங்கு வர்ஷன். வாழ்த்துகள் சின்மயி.
#########################################
தத்துவம்
நண்பன் என்பவன் உன்னை பற்றி நிறை குறை எல்லாம்  தெரிந்தும் உன்னுடன் இருப்பவன்.

நல்லவனை தேடும் முயற்சியை கைவிடு இந்த திரிசமன் உலகத்தில். அதற்கு பதிலாய் நல்லவனாய் நீ மாறு. அட்லீஸ்ட் உலகின் வேறொருவனின் தேடலாவது முடிவுக்கு வரும்.
#########################################
செவிக்கினிமை
எங்கேயும் எப்போது பாடல் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். ட்ரைலரும், இரண்டு பாடல்களையும் வெளியிட்டார்கள். ஆர்வத்தை ஏற்படுத்தும் ட்ரைலர். அதே பார்த்தவுடன் மனதில் பச்சக் என ஒட்டிக் கொள்ளும் பாடல் காட்சிகள். மாண்டேஜுகளில் பாடல்களை எடுப்பதற்கு ஒரு ரசனை வேண்டும். அந்த ரசனை இயக்குனர் சரவணனுக்கு இருக்கிறது. கோவிந்தா என்கிற பாடலில் அனன்யாவும், ஷரவணும் வரும் காட்சியில் வரும் மாண்டேஜுகள் அட்டகாசம். முக்கியமாய் எதிரே வரும் வயிறு ஒட்டிய டைட்ஸ் போட்டு வரும் பெண்களைப் பார்த்து அனன்யா தன்னுடய லூசான சல்வாரை முதுகு பக்கமாய் இழுத்துப் பிடித்து வயிற்றை பார்த்துக் கொள்ளும் காட்சி  க்யூட். மாசமா என்கிற பாடல் இந்த வருடத்திய நிச்சய ஹிட். பாடலை கேட்கும் போது அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்பவர்கள். நிச்சயம் படம் பார்த்த பின் இடது தோளை குலுக்கியபடி பாடாவிட்டால்.. சொல்லுங்கள். நா.முத்துக்குமாரின் வரிகள் இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் “உன் பேரே தெரியாது” என்ற பாடல் நிச்சயம் பேசப்படும். ஒரு பேரை யோசிக்க அவர் கொடுக்கும் ரசனையான க்ளூக்களை கேளுங்கள் அருமையான கவித்துவமான வரிகள்.திரைப்படப் பாடலகளில் சமீபத்திய க்ளாஸ் பாடல் வரிசையில் நிச்சயம் இந்தப் பாடல் வரும். மதுஸ்ரீயின் குரலில் சாதனாசர்கம் தெரிகிறார். இசையமைப்பாளர் சத்யா. நிறைய டிவி சீரியல்களின் டைட்டில் பாடலை இசையமைத்தவர். ஜெயாடிவியில் வரும் ராகமாலிகாவின் இசையமைப்பாளர். ஆடுகிறான் கண்ணன் சீரியலின் டைட்டில் சாங்கை கேட்டால் இவரது திறன் புரியும். ஆல் த பெஸ்ட் சத்யா. #####################################
ப்ளாஷ்பேக்.
இந்த பாடல் இன்னும் ஐம்பது வருஷம் ஆனாலும் சூப்பர் ஹிட் சாங் தான். எப்படி இந்திய திரையுலகுக்கே பெருமை சேர்த்த படமோ, அது போலத்தான் இந்தப் பாடலும். இன்று கேட்டாலும் எழுந்து ஆட வைக்கும் ட்யூன்.  மெஹபூபா...

###############################################
மை கார்னர்

#################################################
 அடல்ட் கார்னர் 

புருஷனும் பொண்டாட்டியும் கிரிக்கெட் ஆடிட்டு இருந்தாங்க.. அப்ப புருஷன் ஒரு ஷாட் ஓங்கி அடிச்சான்.. பாலு பக்கத்துல இருக்கற வீட்டு  ஜன்னலை உடைச்சிட்டு உள்ள போயி விழுந்துச்டுச்சு..பாலை எடுக்க முடிவு செஞ்சி ரெண்டு பெரும் அந்த வீட்டுக்குள்ள போனாங்க...அங்க ஒரு வயசான பெரியவரு உக்காந்துட்டு இவங்க வர்றதையே முறைச்சு பாத்துட்டு இருந்தாரு. பாலு பட்டு ஒரு கண்ணாடி பாட்டில் சுக்கு நூறா உடைஞ்சி இருந்தது.

புருஷன் : நாங்க தெரியாம அடிச்சி உடைசிட்டோம்.. எங்கள மன்னிச்சுருங்க.. 


பெரியவர்: அய்யய்யோ.. நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க.. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..


பொண்டாட்டி: எங்களுக்கு எதுக்கு நீங்க நன்றி சொல்லணும்? 
பெரியவர் : ஆமாம்மா.. நான் ஒரு பூதம்... இந்த கண்ணாடி பாட்டில்ல  ரெண்டு வருஷமா அடைஞ்சி இருந்தேன்.. நல்லா வேலையா நீங்க அத உடைச்சி என்ன காப்பாத்துட்டீங்க.. அதுக்குதான் உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்.. என்னை நீங்க விடுதலை செஞ்சதுக்கு என்னால உங்களுக்கு மூன்று வரம் தர முடியும்.. அதுல ஒன்றை நான் வச்சிக்குறேன்.. மீதி ரெண்ட நீங்க கேளுங்க.. நீங்க என்ன கேட்டாலும் கிடைக்கும்.. 
புருஷன்  : எனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வேணும்.. பெரியவர் : அப்படியே ஆகட்டும்.. உங்களுக்கு ??? 
பொண்டாட்டி : எனக்கு உலகத்துல இருக்கற எல்லா பெரிய ஊர்லேயும் ஒரு பங்களா வேணும்.. 
பெரியவர் : நீங்க கேட்டது எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் ஆனா அதுக்கு முன்னாடி நான் கேக்குறத நீங்க எனக்கு செஞ்சாத்தான் அது பலிக்கும். புருஷன் : தாராளமா.. உங்களுக்கு என்ன  வேணும் கேளுங்க.... 

பெரியவர்: நான் ரெண்டு வருஷமா உள்ளவே அடைஞ்சி இருந்ததால எனக்கு இப்ப உடனடியாக செக்ஸ் தேவைப்படுது.. அதானால உங்க பொண்டாட்டிய நான் ஒரு தடவ மேட்டர் பண்ணிக்கலாமா?. இப்படி ஒரு கேள்விய எதிர்பாக்காத ரெண்டுபேரும் அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க.. 

புருஷன் : என்னடி பூதம் இப்படி கேட்டுடுச்சி... 

பொண்டாட்டி : பூதம் தான் நாம கேட்டத எல்லாம் கொடுக்க போகுதே. ஒரு வாட்டி தானே.   

பெரியவர் அவளை கூட்டிட்டு போயி, ஒரு மணி நேரம் கழிச்சு ரெண்டு பெரும் வெளிய வந்தாங்க.. அப்ப அவங்க ரெண்டு பேரையும் பாத்து பெரியவர் கேட்டார்.. 

பெரியவர் : உங்க ரெண்டு பேருக்கும் என்ன வயசு ஆகுது.. ? புருஷன் : எங்களுக்கு முப்பது வயசு ஆகுது..பெரியவர் : ஏழு கழுதை வயசு ஆகுது.... இன்னுமா ரெண்டு பேரும் பூதம், வரம் எல்லாத்தையும் நம்பிட்டு இருக்கீங்க...Post a Comment

17 comments:

தமிழன் said...

sooda oru kothu poratta!!!

தமிழன் said...

adult corner joke was excellent!!!

Pradeep said...

Asusual good :)

ம.தி.சுதா said...

/// சரக்கு அடிக்கணுமே அதுக்கு எங்க போவாறாம்?//

அண்ணாச்சி நம் மூரில இதுக்கு அர்த்தம் வேறயுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

KANA VARO said...

வழக்கம் போல அருமை. பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.

Unknown said...

தத்துவம் சூப்பர்...

arulgene said...

Sunday, August 07, 2011

6/7

கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்

நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.

நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.

மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன். ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது.

பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது.

சும்மா சொல்லக்கூடாது?

அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே? எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார். ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.

விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது. ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.

வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்.

a said...

மருத்துவர் அய்யா மீண்டும்(??) ஆரம்பித்துவிட்டார்...

aotspr said...

பயன்னுள்ள தகவல்!.

http://www.tamilcomedyworld.com

Unknown said...

அடல்ட் கார்னர் செம செம.. :)

Unknown said...

அண்ணே அந்த பூதம் மேட்டர் சூப்பர்....................எப்படித்தான் கண்டுபிடிகிராங்களோ................அப்புறம் இது ஒரு அடல்ட் ஜோக் அப்படின்னு நீங்க போட்டாலும், இதுல ஒரு கருது இருக்கு.......எதுவுமே உழைச்சு கஷ்டப்பட்டுதான் கிடைக்கணும், ஒரே நாளுலே பெரிய ஆளா ஆக நினைகிரவங்களுக்கு செமத்தியான நெத்தியடி ஜோக்..................

Unknown said...

ரஜினி எப்போதும் அவரது படங்களில் முழு நடிகர்கள் மற்றும் கவனித்து என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

'பரிவை' சே.குமார் said...

வழக்கம் போல அருமை.

admin said...

superb...!
www.tamilamazing.com

அபிமன்யு said...

கலைஞருக்கு அப்புறம் அதிகமா உழைக்கறது நீங்கதான் அண்ணா..

எப்படிணா நடிக்கவும் செய்யறீங்க , புத்தகமும் படிக்கிறீங்க, எல்லா படமும் பாக்கறீங்க , ப்ளாக் தினம் தினம் எழுதறீங்க..?

உங்களா பாத்தா பெருமையாவும் இருக்கு.. பொறாமையா இருக்கு..

கொங்கு நாடோடி said...

சங்கர் எப்படி உங்களால் மட்டும் மதத்திற்கு பத்து முதல் பதினைந்து பதிவுகள் இட முடிகிறது...

எல்லா பதிவுகளும் அருமை..

கேபிள் கதை ; நல்ல ஆராய்ச்சி

அருண் said...

சூப்பரப்பு,நிறைய திறமையுள்ள புதிய இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருகிறார்கள் போல.happy!
எளியகுரல் மேட்டர் அருமை.
-அருண்-