Thottal Thodarum

Aug 26, 2011

Final Destination -5

finaldestination ஏற்கனவே முதல் பாகத்தையும், மற்ற ஒரு சில பாகங்களையும் பார்த்ததாய் நியாபகம். முதல் பாகம் கொடுத்த இம்பாக்ட் அடுத்த பாகங்களில் எனக்கு கொடுக்கவிலலை என்பது என் கருத்து.


எல்லா படங்களைப் போலவே இதிலும் ஒரே விஷயம். துரத்தும் மரணங்கள். ஃபிரிமோனிஷனாக அலுவலக நண்பர்களுடன் சாம் பயணிக்கும் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாவதாகவும், அதில் தன்னையும் சேர்த்து எல்லோரும் இறந்துவிடுவதாக ஒரு காட்சி ஓடுகிறது. கண் விழித்துப் பார்க்கும் போது அந்த பஸ் அதே ப்ரிட்ஜில் இருக்க, விபத்து நடக்கப் போவதற்கான அத்துனை அறிகுறிகளும் சாமிற்கு தெரிய, நண்பர்கள் அனைவரையும் எச்சரித்து பஸ்ஸை விட்டு இறக்கிவிட்டுவிடுகிறான். அதில் எட்டு பேரை காப்பாற்றி விடுகிறான்.   ஆனால் மரணம் அவர்களை விடாது துரத்துகிறது.
final_destination5_02 ஒவ்வொரு பாகத்திலும் ஆட்களை கொல்ல இவர்கள் யோசிக்கும் வழிமுறைகள் அசத்தலாயிருந்தாலும், கொஞ்சம் எனக்கும் ஃப்ரிமோனிஷனாக என்ன செய்வாரக்ள் என்று யோசிக்க முடிந்துவிட்டதால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது இதன் மற்ற பாகங்களை பார்க்க, இது 3டி, அதுவும் முழுதாக 3டி டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டது. முழு 4கேவில் எடுக்கப்பட்டு ரெஸ்யல்யூஷன் குறையாமல் அதே 4கேவில் எடிட் செய்யப்பட்ட படம். என்பதால் ஆர்வம் மேலேறியது.  டெக்னிக்கலாய் அவர்கள் ஏற்படுத்திய ஆர்வம் குறையாமலிருப்பதற்கான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாரக்ள் என்றே சொல்ல வேண்டும்.
final-destination5-08 டெக்னிக்கலான விஷயங்களை விட்டு படத்தைப் பற்றி சொன்னால் ஒரு சுவாரஸ்யமான கதையே.. ஒவ்வொருவரின் மரணமும் ஒவ்வொரு விதமான கோரம். அது எப்போது, எப்படி நடக்கும் என்பது தான் படத்தின் சுவாரஸ்யத்தின் அடிநாதம். முடிந்தவரை சுவாரஸ்யம் கெடாமல் இருக்கவே செய்கிறது. பிரிமோனிஷனாக வரும் காட்சிகளில் இருக்கும் கோரங்களை தூக்கி சாப்பிடக்கூடியதாய் இருக்கிறது நிஜக் காட்சிகள். கண் பிதுங்கி வெளியே உர்ண்டோட, அதன் மீது கார் ஏற்றி கண் முன் காட்டும் போதும், பாய் மரக் கப்பலின் பாய்மரத்தின் மீது வீழ்ந்து குடலை கண் முன் கைகெட்டும் தூரம் வரும் காட்சியில் அதிர்ச்சியை விட ஒரு விதமான் அருவருப்பு தான் மேலிடுகிறது. சாகப் போகிறோம் என்று தெரிந்து கொண்டு, அதுவும் கண்ணெதிரே எதோ தக்காளியை நசுக்குவது போது பச்சக் என்று ரத்தம் பரவி சாவதை பார்த்துவிட்டு சாமும், அவனின் காதலியும் சர்வ சாதாரணமாய் இருப்பதும், ஒரு கேரக்டர் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜாக ஃபீல் பண்ணுவதும் கொஞ்சம் காமெடியாய் இருக்கிறது. தொடர்ந்து இந்த படங்களை பார்பவர்களுக்கும், படத்தை எடுப்பவர்களுக்கு வேண்டுமானால் வழக்கமாய் நடக்கும் சமாசாரமாய் இருக்கலாம். ஆனால் புதியதாய் படம் பார்க்கும் மக்களுக்கு என்னடா சாவு துரத்துன்னு தெரிஞ்சு சும்மா ஜாலியா சுத்திட்டிருக்கானுவளே என்று யோசிபதை தடுக்க முடியாது.
Final Destination -  3D Magic
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

sarav said...

i am first

sarav said...

Cable ji
ennakku intha series pidikka ve illai rombavum goram. Naanum murder horror padam pakkravan than but this is too no three no four no five much. technically may be good but some sort of mental imbalance irukkummo director and producer and story writer evangalukku endru thonudhu ithey mathiri innoru series hostel appaddinnu ninaikiren athuvum ippadi than
Action movies- car chase gun fight hand fight like boxing , kick boxing kungama poo sorry kungfu ithu mathiri irundha pakkalam but enakku ennamo ithu pidikkala.

ரைட்டர் நட்சத்திரா said...

ஆனால் புதியதாய் படம் பார்க்கும் மக்களுக்கு என்னடா சாவுதுரத்துன்னு தெரிஞ்சு சும்மா ஜாலியா சுத்திட்டிருக்கானுவளே என்று யோசிபதை தடுக்க முடியாது // தோனுங்கோ பகிர்வுக்கு நன்றி

கதம்ப உணர்வுகள் said...

உண்மையே இப்படிப்பட்ட படம் பார்க்கும்போது பயத்தை விட அருவெறுப்பு ஏற்படுவது தான் நிஜம்....

அன்பு நன்றிகள் விமர்சனத்திற்கு...

sharfu said...

i like this series very much, but this part is lagging some thing.

out of this series part 2 & part IV is my favourite..

ஸ்வீட் ராஸ்கல் said...

நல்ல படம் ஷங்கர் சார்,எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துது.3Dல் இந்த படத்தை முதல் முறையாக பார்த்தது மிகவும் பயங்கரமாக இருந்தது.

aotspr said...

சூப்பர் படம்.....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com