மங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.
எந்த நேரத்தில் மங்காத்தா என்று சூதாட்டப் பெயரை வைத்தார்களோ? ஒரே ஆட்டமாய்தான் இருக்கிறது. மங்காத்தாவை ஆளாளுக்கு கை மாற்றி விட்ட குழப்பம் ஒரு வழியாய் முடிந்து மீண்டும் சன்னிடமே வந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் விஷயமே வேறு. முதலில் மங்காத்தா படத்தை துரை தயாநிதியே வெளியிட நினைத்து தியேட்டர்களை புக் செய்ய முனைந்த போது துரை தயாநிதியின் முந்தைய படங்களான, வா குவாட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களினால் அடைந்த நஷ்டத்தை சரிகட்டினால்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது சூர்யா, கார்த்தியை வைத்து படம் தயாரிக்கும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை விநியோகிக்க விரும்பிக் கேட்க, அவர் மூலம் விநியோகித்தால் தியேட்டர் அதிபர்களின் ப்ரச்சனையை சமாளித்துவிடலாம் என்று முடிவெடுத்து ஓகே சொன்னார்கள் மங்காத்தா தயாரிப்பாளர் துரை தயாநிதி. ஸ்டூடியோ க்ரீன் போட்ட ஒரு முக்கிய கண்டீஷன் என்னவென்றால் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கும் ஓகே சொன்னார் துரை.அது சரி எப்படி தியேட்டர் அதிபர்கள் ப்ரச்சனையை தவிர்க்க முடியும்? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம். தொடர்ச்சியாய் ஸ்டியோகிரீன் சூர்யா, கார்த்தியை வைத்து சொந்தமாக படம் தயாரிக்கிறது. இவர்கள் படத்தை விநியோகித்தால் அடுத்து இவர்கள் எடுக்கும் சூர்யா, கார்த்தி படங்கள் தங்கள் திரையரங்குக்கு திரையிடாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது எனவே அவர்களை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் ஒதுங்கிக் கொள்ள, ஸ்டூடியோ க்ரீன் நேற்று முன் தினம் துரை தயாநிதியின் பெயர் இல்லாமல் க்ளவுட் நைன் பேரில்லாமல் ஸ்டூடியோ க்ரீன் பெயரில் விளம்பரத்தை வெளியிட்டது.
விளம்பரத்தை பார்த்த சன் குழுமமும், மற்றவர்களும் நொந்து நூலாகிவிட்டனர். க்ளவுட் நைன் பேரில்லாமல் வந்த விளம்பரம் உறவுகளை ஒன்று சேர்த்து உருக வைத்துவிட்டது. எல்லோருடய கண்களும், இதயமும் பனித்துவிட்டது. அதெப்படி தயாரிப்பாளரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெளியிடலாம் என்று யோசித்ததில் உதயநிதி தான் செய்தது போல தன் தம்பியின் படத்தையும் சன்னிடமே விற்றுவிட ஐடியா கொடுத்தார். இது நாள் வரை சன் வெளியிடும் அத்துனை படங்களின் தயாரிப்பாளர்களின் பெயரும் ஏதோ போனால் போகட்டும் என்று ஒரு மூலையில் கண்ணுக்கே தெரியாத வகையில் போட்டு விளம்பரப்படுத்தும் சன்னுக்கு தன் சதை ஆடிய காரணத்தால் உடனடியாய் தன் நெட்வொர்க்கின் மூலம் படத்தை வாங்கி விட்டது. சரி வாங்கியாயிற்று மற்றவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை விட இவர்களுக்கு இருக்கும் ப்ரச்சனை அதிகம் அப்படியிருக்க எப்படி சமாளிப்பது?. யோசித்தார்கள் பிஸினெஸ் மூளையை தட்டிவிட்டார்கள்.
வழக்கமாய் சன் டிவி வாங்கும் படங்களை அவர்களே நேரடியாய் விநியோகிப்பார்கள். படங்களூக்கு ஏற்றார்ப் போல எம்.ஜி, அட்வான்ஸ் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் இம்முறை ஏற்கனவே இருந்த ஆட்கள் உள்ளிருப்பதாலும், மீண்டும் தாங்கள் மார்கெட்டுக்கு வந்தால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் மனநிலை எப்படியிருக்குமோ என்று யோசித்து சட்டென ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துவிட்டிருக்கிறார்கள். படத்தை சன் வாங்கினாலும் வெளியிடப் போவது ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ். அவர்கள்தான் வியாபாரம் செய்யப் போகிறார்கள். சன் டிவி, கலைஞர் டிவி ப்ரச்சனையின் போது கூட பல சன் டிவி பிரமுகர்கள் கலைஞர்டிவிக்கு எகிறிய போதும், ராதிகாவின் ராடன் டிவி மட்டும் அங்கே போகவில்லை. சன்னின் பங்கோ, அல்லது கலாநிதி மாறனின் பங்கோ நிச்சயம் அவர்களிடம் இருக்கிறது என்று கிசுகிசுத்துக் கொண்டிருந்தது உண்மை என்பது போல இப்படத்தின் விநியோகம் நிகழ்வின் மூலம் நிருபணம் ஆகியிருக்கிறது.
ஏனென்றால் ராடன் மீடியா ஒர்க்ஸ் ஏற்கனவே சினிமா தயாரிப்பில் இறங்கி படம் எடுக்க முடியாமல் பூக்கடை ரவி என்கிற ஒரு படம் பாதியில் நிற்கும் வேலையில் திடீரென சில பல கோடிகளை கொடுத்து மங்காத்தாவை வாங்கி ரிலீஸ் செய்வது ஏன் என்ற கேள்வி வரத்தான் செய்கிறது. இதன் பின்னணியில் ஒரு ஆட்டம் இருக்கிறது. யார் யாரோடு சண்டை போட்டாலும் ராடன் டிவி மட்டும் சன்னுடன் தான் ஆட்டத்தை ஆடிவருகிற நிலையில், சரத்குமார் அங்கிருக்கும் பட்சத்தில் தன் மனைவியின் கம்பெனி மூலமாய் ரிலீஸ் செய்யும் படத்திற்கு அரசியல் ரீதியாக ப்ரச்சனை வராது என்பதால் அவர்கள் பெயரில் மங்காத்தா பெயரில் வெளியாகிறது என்கிறது பட்சி.எது எப்படியோ ”தலை”யின் மங்காத்தா ஆட்டம் ரிலீஸுக்கு முன்பே சூடு பிடித்திருக்கிறது. இதில் நான் பாராட்டுவது சன்னின் வியாபார தந்திரம்தான். சேனலுக்கு படமும் ஆயிற்று, தன் விநியோகத்தை நடத்திய மாதிரியும் ஆயிற்று. நாள் நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டேயிருக்க, படத்தின் வெற்றி தோல்வி தான் சன்னின் ஆட்டத்தை நிர்ணையிக்கும் ஆட்டமாய் அமையும் மங்காத்தா.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
-Http://claqueurs.blogspot.com
புட்டு புட்டு வச்சிட்டீங்க! சூப்பர்!
எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com