
100% லவ்வின் வெற்றிக்கு பிறகு வெளிவரும் நாக சைத்தன்யாவின் படம். மிகவும் ஸ்டைலிஷான ஸ்டில்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமில்லாமல் இவருக்கும் காஜல் அகர்வாலுக்குமிடையே ஏதோ ஒரு பிரச்சனை என்று வேறு கிசுகிசு ஓடியதால் இன்னும் ஆர்வம் ரசிகர்களிடையே மேலிட வெளியான படம்.

கதை என்று சொல்ல வேண்டுமானல் நாக சைத்தன்யா அமெரிக்காவில் தன் அண்ணன் நம்ம ஸ்ரீகாந்த், அவரது மனைவியுடம் இருக்கிறார். எப்பப்பார் அடிதடி என்று பெண்களுக்கு ஆதரவாய் துரத்தி துரத்தி சண்டை போடுகிறார். அப்படி சண்டைப் போட்டு காப்பாற்றும் பெண்ணி மூலமாய் அவரை கொல்ல ஒரு ப்ரச்சனை துரத்துகிறது. பெரிய மில்லியனரின் பெண் காஜல். அவரின் அம்மா சிறு வயதில் தற்கொலை செய்து கொண்டு சாக, அவரின் 16எம்.எம் படத்தை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து தனிமையில் அழுபவர். இவருக்கும் நாகசைத்தன்யாவுக்கும் காதல் பிறக்கிறது. நாக சைதன்யாவால் பாதிக்கப்பட்ட வில்லன் கோஷ்டியினர் அவனை ஒரு பக்கம் கொல்ல அலைய, இன்னொரு பக்கம் காஜலின் சைடில் அவரை கொல்ல அதே தாதாவிடம் பணம் கொடுக்க, இன்னொரு பக்கம் நம்ம ஸ்ரீகாந்த் தன் சொந்த தம்பியையே கொலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்க, நாக சைதன்யா எப்படி எல்லா பிரச்சனைகளையும் சால்வ் செய்கிறார் என்று நிறுத்தி நிதானமாய் சொல்லியிருக்கிறார்கள்.

நாக சைதன்யா மேலும் ஸ்மார்ட்டாய் இருக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். ஸ்டைலாய் பறந்து பறந்து அடிக்கிறார். கொஞம் பஞ்ச டைலாக் பேசும் போது மட்டும் சிரிப்பு வருகிறது நமக்கு. அவர் அசராமல் பேசுகிறார். காஜல் சில் காட்சிகளில் அழகான பொம்மையாய் இருக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். அழுகிறார். ப்ரம்மானந்தம் உட்பட தெலுங்கு சினிமாவின் முக்கிய காமெடியன்கள் எல்லோரும் ஆளுக்கொரு சீன் வந்தாலும் சிரிப்புத்தான் வரமாட்டேன் என்கிறது. அவ்வளவு மொக்கை. ராகுல் தேவ், கென்னி என்று மூன்று நான்கு வில்லன் கோஷ்டிகள் இருக்கிறது. ஆளாளுக்கு படு மொக்கையாய் பேசியே கொல்கிறார்கள். அதிலும் வில்லன் தன் கால் போனதை பற்றி படத்தில் சொல்ல ஆரம்பித்ததும் ஒரே கத்தல். நம்ம ஸ்ரீகாந்தும் தன் பங்கிற்கு நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் படு மொக்கை. பின்னணியிசை கொஞ்சம் பரவாயில்லை. எழுதி இயக்கியிருப்பவர் புதியவரான அஜய் புயான். கதை என்கிற விஷயம் பாதி படம் வரை ஆரம்பிக்கவேயில்லை. ஆளாளுக்கு ஒரு சீன் என்று ஆர்டரில் சொதப்புகிறார்கள். வில்லனிடம் ஹீரோவுக்கு வேண்டப்பட்டவர் வேலை செய்வது என்பதை மட்டுமே ஒரு பெரிய துருப்புச் சீட்டாய் நினைத்து கடைசி வரை சஸ்பென்சை மெயிண்டெயின் பண்ணுகிறார்களாம். படு காமெடி. இன்னொரு காமெடி படத்தில் வரும் அத்தனை அமெரிக்கர்களுக்கும் தெலுங்கு புரிகிறது. தெலுங்கில் பேசுகிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம் என்று ஒன்றிருந்தால் கொஞ்சம் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்காகவும், வழக்கமான சேஸிங் அல்லது பத்து நிமிஷ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி வைக்காமல் குறைத்தது. ஆங்கேஎ தெரியும் சில இன்னவேட்டிவான காட்சிகள்க்காக வேண்டுமானால் பாராட்டலாம். மற்றபடி மரண மொக்கை படம் தான் தடா.
6 comments:
அது எப்புடி சாமி ஒரு நாளைக்கு ஒரு படம் பாக்கறீங்க?
I am jelous on you! i too wanted to watch movies like you! hope the days come
Sorry, It's out of syllabus.
Living with one of the Classical Languages at http://kumkumaa.blogspot.com
:-)
" நாக சைத்தன்யா அமெரிக்காவில் தன் அண்ணன் நம்ம ஸ்ரீகாந்த், அவரது மனைவியுடம் இருக்கிறார்."
அப்ப நாகசைதன்யா அவங்க அண்ணி கூட இருக்கிறாரா....ஏடாகூடமா இருக்கே..சில சமயங்களில் நீங்கள் கதையை விளக்கும் விதம் குழப்பி அடிக்கிறது நண்பரே...
Post a Comment