
ஏவிஎம்மின் தயாரிப்பு. மைனா ஹிட்டிற்கு பிறகு வித்தார்த்தின் நடிப்பில் வரும் படம். புது இயக்குனர், சொன்ன கதையில் மிகவும் பிடித்துப் போய் உடனடியாய் படம் செய்ய ஆரம்பித்ததாய் சொன்னார்கள். அப்படி என்ன கதை என்று பார்ப்போமா?
வித்தார்த்தின் பெயர் எமக்குஞ்சு. அவன் ஒரு சில்லுண்டி ரவுடி. தன் நண்பனின் மேல் கைவைத்ததால் அவனின் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போனவன். அதைப் பற்றி அவனுடய அம்மா எதையும் கேட்பதில்லை. ரவுடியாய் இருக்கிறான் என்றால் அடுத்து என்ன நடக்கும் நல்ல அழகான, படிச்ச பொண்ணு பின்னாடி அவன் சுத்துவான், அப்புறம் அவ சுத்துவா. அதான் நடக்குது. இவங்க காதலுக்கு அவளோட அப்பனாத்தா ஒத்துக்க மாட்டாங்க.. அப்புறம் அவங்க எப்படி சேர்ந்தாங்கன்னுதானே கதை இருக்கணும். அதுவும் இருக்கு. நடுவுல பருத்திவீரன், சுப்ரமணியபுரம், இரண்டு வில்லன்க, அவனோட அண்ணன் பெரிய ரவுடி, கேட்டா அவரு வீரராம். சரி விடுங்க இதான் கதை. இதுல என்னத்த கண்டுபுட்டாங்கன்னு ஏவிஎம்மு படமெடுத்தாங்கன்னு தெரியலை

வித்தார்த்தின் கேரக்டர் சும்மா உதார் விடும் பார்ட்டியா? இல்லை நிஜமாகவே ரவுடியா? என்பதே குழப்பமாய் வைத்திருக்கிறார்கள். சுத்தமாய் அழுக்கு ரவுடியாய் காட்டினால் பருத்திவீரன் ஞாபகம் வ்ந்துவிடுமோ? இல்லை கொஞ்சம் டீஸெண்டான நட்புக்காக கொலை செய்ய ஒத்துக் கொள்ளூம் சுப்ரமணியபுரம் கேரக்டருக்கும் ஏற்றார் போல கதையில்லை. எனவே அப்படியே வைத்துக் கொள்ளவும் குழப்பம். அதே போல அந்த லோக்கல் கவுன்சிலர், நகராட்சி மன்ற தலைவர். கேரக்டர்களுக்குள்ளான விரோதம். ஒரு முக்கியமான காட்சியில் இருவரும் ஒரே காரில் பயணிக்கிறார்கள். விரோதிகள். அதுவும் சகஜமாய். அடுத்த காட்சியில் ஆளாளுக்கு வெட்ட சொல்கிறார்கள். ஓட்டு போட ஆட்களை கடத்துகிறார்கள். இத்தனைக்கும் கவுன்சிலருக்கு சப்போர்ட் செய்ய விரும்புவர்களை எதிர்பார்ட்டி கடத்தி வைக்கிறான். ஆனால் அவர்களோ கவுன்சிலருக்குத்தான் சப்போர்ட். அவர்களை எதற்காக திரும்ப கடத்த சொல்ல வேண்டும். அவர்களை ஓட்டை மாற்றி போடச் சொன்னால் ஆயிற்றே? கிஷோரின் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு பில்டப்?. ஏன் அவர் கேரக்டரையும் நல்லவனா? கெட்டவனா? என்று குழப்ப வேண்டும். இப்படி பல கோணங்களில் கதை போவதால் போலீஸ் எஸ்.பி அவரின் வீரத்தைப் பற்றி பேசும் காட்சிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதிலும் ஒட்டாமல் படம் பார்கக் வேண்டிய கட்டாயத்தில் ஒரு இன்வால்மெண்டும் வர மாட்டேன் என்கிறது.

வித்தார்த்தின் கேரக்டர் குழப்பத்தையும் மீறி ஆங்காங்கே சிறு சிறு ரசிக்க வைக்கும் காட்சிகள் இருக்கவே செய்கிறது. அதே போல கவிதா நாயரின் முகம் முத்தினதாய் பல காட்சிகளில் அக்கா போலிருக்கிறார். கண்கள் சில இடங்கள் க்யூட். கூட வரும் ப்ரெண்ட் கேரக்டரையெல்லாம் நல்லா தேடிப் போடுகிற இயக்குனர் கதாநாயகி விஷயத்தில் சறுக்கியிருப்பது ஏன் என்றே தெரியவில்லை?. பெண்ணிற்கு வரும் காதல் கடிதங்களை பஸ் கண்டக்டர் அப்பாவே வாங்கி வந்து படிப்பதும், அதில் ஒரு லெட்டர் அவருக்கு வந்ததாய் இருக்க மனைவி துரத்துவதும் இண்ட்ரஸ்டிங். இம்மாதிரி சின்னச் சின்ன சம்பவங்கள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் வித்தார்த்த் வித்யாசமாய் வேட்டி சட்டை அணிந்து டைட் பட விளம்பர மாடல் போல பளிச்செனவே இருக்கிறார். போதையில் குடித்து வீழ்ந்து கிடந்தாலும் கண் கூசும் பளிச்செனவே இருக்கிறார். மயில்சாமி ஆங்காங்கே வ்ந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். கலைவாணி வழக்கமாய் கத்தி கத்தி அழுகிறார். படம் பூராவும் மகன் செய்யும் த்வறுக்கெல்லாம் உடைந்தையாய் ஆதரவு அளித்துவிட்டு, க்ளைமாக்ஸின் போது வில்லன் திருந்துவது போல மகன் மீது பாசத்தை பொழிந்து, அவனை திருந்தச் சொல்லி அழுவது செம காமெடி. எதிர்கோஷ்டி வில்லனை வைத்து தருகிற ட்விஸ்ட் ஓகே.

செல்லதுரையின் ஒளிப்பதிவு பளிச். டி.இமானின் இசையில் இரண்டு குத்துபாடல்கள் ஓகே. அப்புறம் வாந்தே போந்தே என்ற அறிவுமதியின் பாடல் கொஞ்சமே கொஞ்சம் மெலடி. எழுதி இயக்கியவர் ஆர்.குமரன். பருத்திவீர்ன் டைப் ரவுடிக்கதை, களவாணி டைப் காட்சிகள், சுப்ரமணியபுரம் போன்ற நட்பு, துரோகம், கொலை, என்று நிறைய வைத்து ஒரு கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இவ்வளவு பளிச்செனற ரவுடியை தமிழ் சினிமாவில் என்பதுகளுக்கு முன்னால் தான் காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே வரும் குட்டி குட்டி ட்விஸ்டூகள், சில வசனங்கள் அட போட வைத்தாலும், ஹீரோ கேரக்டர் முதல் வில்லன் கேரக்டர் வரை ஒரு குழப்பமான மனநிலை இருப்பதால் ஒன்றும் ஏற மாட்டேன் என்கிறது.
சில படங்களைப் பற்றிய கருத்தை படம் பார்த்தபின் தான் சொல்ல முடியும். ஆனால் இப்படத்திற்கான விளம்பரத்தை வைத்து பார்த்தாலே தியேட்டரில் நுழைய விட்டுவிடுவேனா என்கிறார்கள். தானா வர்றவனையும் துரத்தி அடிக்கும் முந்தானை முடிச்சு ஸ்டைல் விளம்பரங்கள். அதிலும் ட்ரைலர் படு கொடுமை. இப்படித்தான் அயன், சிவாஜிக்கெல்லாம் செய்தார்களா? இல்லை படம் பர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு இது போதும்னு நினைச்சிட்டீங்களா?. இதையெல்லாம் மீறி நான் பார்த்துட்டேன். வெளியே என்னைப் போன்ற பல நூறு உதவி இயக்குனர்கள் நல்ல நல்ல கதைகளோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏவிஎம்முக்கு மீண்டும் ஒரு அன்பே.. அன்பே..
முதல் இடம் – மூணு சப்ஜெக்ட் ஃபெயில்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
gm_dinesh@live.com.
விதார்த்துக்கு சறுக்கலா முதல் இடம்.
Dont market yourself when you judge other's films. This will not add beauty to your blog.
Regards,
Amarnath
why i should not market myself?. i have all the right to market my self. if a film is produced they have to market the film before release. that is there duty. like that i have to market my self. that is not wrong. this is my opinion.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com