இரண்டு பேர் அஞ்சு பரோட்டா, இரண்டு சப்பாத்தி, ஆலுமட்டர், காலிப்ளவர் சப்ஜி சாப்பிட்டு மொத்த பில் 49 ரூபாய் என்றால் நம்புவீர்களா..?. என்ன பகல் கனவு கண்டீர்களா? என்று கேட்பவர்கள் ஒரு நடை நம்ம கோடம்பாக்கம் ரோடு, மீனாட்சி காலேஜுக்கு முன்னால் ஒரு சின்னக் கடை ஆரோமா என்ற இந்தக் கடைக்கு ஒரு நடை போய் வாருங்கள். அவ்வளவு அருமையான சப்பாத்திகள்.
இவர்களின் மெனு கார்டில் அதிகபட்ச விலையே 35 ரூபாய்தான். குறைந்தபட்ச விலை 4 ரூபாய். கையேந்திபவனிலேயே ப்ரைட்ரைஸ் 30 ரூபாய் விற்கிறார்கள். அது மட்டுமில்லாமல் துரிதமான சர்வீஸ், சப்பாத்தி மட்டுமில்லாது, பரோட்டா, காலையில் தோசையெல்லாம் கூட போடுகிறார்கள். சகாய விலையில் சென்னையில் சாப்பிட நல்ல வெஜ் ரெஸ்டாரண்டுகளில் இதுவும் ஒன்று. ஒரு நடை போய் வாருங்கள். சின்ன பட்ஜெட்டில் நிறைவான உணவு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
நல்ல வேளை.. ஆடுறா ராமா ன்னு சொல்லாம போனீங்களே..
அப்ப இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு இரோமா ஆகுமா?
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
http://www.youtube.com/watch?v=RNmsdPeg-6Y&feature=related
ஆலு என்றால் உருளைகிழங்கு. மட்டர் என்றால் பட்டாணி.
பேஸ்புக்கில் புதிதாய் வந்துள்ள முக்கிய மாற்றங்களை இங்கே காணலாம் Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்