Maryada Ramanna
தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் ஹிட் மேக்கர் எஸ்.எஸ்.ராஜ்மெளலியின் படம் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு ரசிகர்கள் தயாராகிவிடுவார்கள். அதுவும் தெலுங்கு மெஹா ஹிட்டான மகதீராவுக்கு பின் வரும் படம் எனும் போது எதிர்பார்ப்புக்கு குறைவேயிருக்காது. இப்போது முதல் முறையாக காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக்கி ஒரு முழு நீள காமெடி கலந்த செண்டிமெண்ட் படத்தை கொடுத்திருக்கிறார். ராமனின் அப்பா ராயலசீமாவில் நடக்கும் ஊர் பிரச்சனையில் கொல்லப்பட, ராமனை காப்பாற்ற ஹைதராபாத்துக்கு வந்து செட்டிலாகிறாள் அவனுடய அம்மா. அம்மாவின் மறைவிக்கு பிறகு மிகவும் கஷ்டப்படும் ராமனுக்கு அவனது கிராமத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வருகிறது. 5 ஏக்கர் நிலத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி வர, சந்தோஷமாய் ரயிலில் ஊருக்கு கிளம்புகிறான். ரயிலில் அபர்னாவை சந்திக்கிறான், அவளின் அப்பா ராமநீடு ரொம்ப வருஷமாக ராமனை கொல்ல காத்திருக்கிறான். ஏனென்றால் ராமனின் அப்பாதான் ராமநீடுவின் தம்பியை ஊரில் நடக்கும் பிரச்சனையின் போது கொன்றுவிடுகிறார். அதற்கு பழி வாங்க காத்திருக்கிறார் அபர்ணாவின் தந்தையான ராமநீடு. ஊருக்குள் வந்து அபர்ணா விட்டுப் போன புத்தகத்தை...