கும்பகோணம் டூ சென்னை
நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது. இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இரு...