சாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்
கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் நாயுடுபுரம் என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் ஏரியிலிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் மேல் நோக்கி நடந்தால் இன்னும் சிறப்பு. நல்ல பசியோடு நடை நடந்தால் நன்றாக பசியெடுக்கும். அந்த ஏரியாவில் நல்ல நான்வெஜ், வெஜ் ஓட்டல் எதுவென யாரை கேட்டாலும் கைக்காட்டிய இடம் வெல்கம் தான். ஓட்டலின் பெயர் வெல்கம். ஏதோ பெயரை பார்த்து பெரிய ரெஸ்டாரண்ட் என்று நினைத்தால் அது உங்கள் கற்பனை ஆனால் கொடுக்கும் உணவுகளின் தரமோ அடிதூள்.