Posts

Showing posts with the label abiyum naanum

அபியும் நானும்.. திரை விமர்சனம்

Image
ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி மனசை அள்ளுற படம் பாத்து. கிட்டதட்ட ஒவ்வொரு அப்பாவும், அதிலேயும் பெண்ணை பெத்த அப்பாவா இருந்து, படம் பார்த்துட்டு அழலைன்னா, நான் என் பேர மாத்திக்கிறேன். பிள்ளைய பெத்த என்னையே கலக்கிருச்சுன்னா.. ஊட்டியில் ஒரு பார்கில் ஒரு பெண் குழந்தையுடன் வரும் பிருதிவிராஜிடம், தன் மகளை பற்றி சொல்வதாய் ஆரம்பிக்கிறது கதை.. என்ன ஒரு இயல்பான கதை சொல்லல் பாணி.. பிரகாஷ்ராஜ் ஒரு பெண்ணுக்கு தகப்பனாய் வாழ்ந்திருக்கிறார். சாதாரணமாய் பார்த்தால் எல்லா பெண்ணை பெற்ற அப்பனுக்கு நடக்கும் நிகழ்வுதானே எதற்காக இவ்வளவு எக்ஸாசிரேஷன் என்று கேட்பவர்கள், ப்ளீஸ்.. நீங்கள் வேறு படத்திற்கு போகவும்.. உளவியல் ரீதியாய் ஒரு தகப்பனுக்கும், மகளூக்கும் அவள் பிறந்ததிலிருந்து, அவனுக்கும், அவளுக்கும் நடக்கும் நிகழ்வுகளே படம்.. எவ்வளவு யதார்தமான காட்சிகள், பெண்ணை ஸ்கூல் சேர்க்க, இண்டர்வியூவுக்கு தயாராவதிலிருந்து, சீட் கிடைத்து, அவளை பள்ளிக்கு அனுப்பும் காட்சி, பின்னர் தன் பெண் ஒரு பிச்சைகாரனை வீட்டிற்கு கூட்டி வந்து அவனுக்கு வேலை போட்டு கொடுக்க சொல்ல, பெண் சொல்லிவிட்டாளே என்று பெயரே இல்லாத ஒருவனுக்கு ரவிசாஸ்திரி எ...