Posts

Showing posts with the label குறும்படம்.

கொத்து பரோட்டா 2.0-37

கொத்து பரோட்டா 2.0-38 Rarandoi Veduka Chudham அப்பா நாகார்ஜுனாவை வைத்து குஜாலான சின்னி நைனா படத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர்,  பையன் நாக சைத்தன்யாவை வைத்து டிபிக்கல், தெலுங்கு டெம்ப்ளேட் காதல் குடும்பக் கதை எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.  ஆஸ்யூஸ்வல் கல்யாணத்தில் ஹீரோயின் சந்திப்பு. பார்த்தவுடன் பிடித்துப் போதல். சைத்தன்யாவின் ‘மச்சித்தனம்” பார்த்து ஹீரோயின் குடும்பமே இம்ப்ரஸ் ஆவது. ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோயின் அப்பாவும், ஹீரோ அப்பாவும் முன்னாள் நண்பர்கள் இன்னாள் விரோதிகள். காரணம் ஆஸ்யூஸ்வலான நட்பு துரோகம். தங்கையுடன் திருட்டுக் கல்யாணம் செய்ய முனையும் போது தங்கையின் சாவு. ஆனால் பின்னணியில் ஒர் மொக்கை குடும்ப வில்லன். குடும்பத்தையும், காதலையும் சேர்க்க ஹீரோவின் முயற்சி என சகலவிதமான தெலுங்கு பட டெம்ப்ளேட்டுகளுடனான கதை. ரசிக்கக்கூடிய ஒர் விஷயம் குளுகுளு ராகுல் ப்ரீதி சிங். தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஒரிரு பாடல்கள். கலர்புல் ஒளிப்பதிவு மட்டுமே. ரொமான்ஸில் தம்பி இன்னும் ப்ரீகேஜியே தாண்டவில்லை. அப்பாவை வைத்து இந்த கதையை எடுத்திருந்தால் மிண்டும் ஹிட்டடித்திருப்பார் இயக்குனர். ...

கொத்து பரோட்டா -4/4/16

Image
சென்ற வாரம்  நண்பர் சங்கருடன் அவரின் கர்நாடகா ஸ்டேட் வண்டியில் வளசரவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது 80 அடி ரோட்டின் முனையில் போலீஸாரால் நிறுத்தப்பட்டோம். உள்ள லைட்ட போடுங்க, டிக்கிய திறங்க என இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டே ஒரு பெண் எஸ்.ஐயும், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் சில பல போலீஸ் “உயர் அதிகாரிகள்” செக் செய்தனர். ஒரு மினி டிவியை வைத்துக் கொண்டு, ஒரு  அவர்களின் செயல்பாடுகளை படமெடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வண்டியில் செக் செய்ய ஏதுமில்லாததால் அனுப்பிவிட்டனர். நீங்க கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன்ல வர்றதுனால தீவிர் செக்கிங்  என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து என் காரில் அதே வழியில் திரும்பப் போன போது, அங்கே ஈ காக்கா இல்லை. தேர்தலுக்காக, தீவிர செக்கிங் என டிவியில் போடுவதற்காகவும் தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணைத் தூவ நடத்த ஏற்பாடு போல. விளங்கிரும் @@@@@@@@@@@@@@@@@@@@@

கேம்பஸ் செலக்‌ஷன்

யாராவது ஏதாவது ஒரு புது முயற்சி செய்யலாம் என்று அடியெடுத்து வைக்கும் போது “இதெல்லாம் விளங்காது. ஆகுற வேலைய பாரு” என்று ஆரம்பித்து அத்தொழிலில் உயர்வான இடத்தில் உள்ள ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு “அவரே செய்யலை நீ செய்திருவியா?” என்று கேட்டு நம் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள். அப்படியான ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ரொம்பவே அதிகம். எது சொன்னாலும் கமல் பண்ணலை, ரஜினி பண்ணலை, ஏவிஎம் பண்ணலை நீங்க பண்ணிருவீங்களோ? என்று கேட்பவர்கள் இருக்குமிடத்தில் அதுவும், வெற்றி மட்டுமே மதிப்பீடாக இருக்கும் துறையில் ஏதாவது சாதிக்க முயன்றாலும் அதற்கான கிண்டல்களும் கேலிகளும் நிறையவே வரத்தான் வரும். 

சத்யம் டிவி லைவ்.

நாளைக் காலை 9 மணி முதல் 10 மணி வரை சத்யம் டிவி நேரடி ஒளிபரப்பில் குறும்படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க உள்ளேன். நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். உங்கள் தொலைபேசியின் மூலம் கேள்விகள் கேட்டு. உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம்.  கேபிள் சங்கர்