சாமியாட்டம்
மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம். உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம கதைகளுக்கு வருவோம். 1. கோட்டி முத்து. மனநிலை பிழன்றவனோ என்று யோசிக்க வைக்கும் கேரக்டர். இம்மாதிரியான ஆட்கள் ஊருக்கு ஒருத்தர் நிச்சயம் இருப்பார்கள். தனக்கென்று யாருமில்லாமல் ஊருக்காக நேர்ந்து விட்ட ஆளாக சுற்றியலையும் இவனைப் போன்றவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ அது போலவே தான் இவன் முடிவும் இருக்கிறது.