Posts

Showing posts with the label Butterfly on a wheel.

Butterfly On A Wheel (2007)

Image
திடு, திப்பென ஒருவன் காரோட்டும் போது துப்பாக்கியை நெற்றியில் வைத்து, நான் சொன்னபடி செய் இல்லாவிட்டால் உன் குழந்தை காலி என்றால் எப்படி இருக்கும்?. தூக்கி வாரிப் போடாது. அப்படித்தான் தூக்கி வாரிப் போட்டது ராண்டலுக்கும், அவன் மனைவிக்கும். நல்ல சந்தோஷமான வாழ்க்கை, இரண்டு வயதில் குட்டி தேவதையாய் ஒரு பெண் குழந்தை, அருமையான கணவன், விரைவில் தன் ஆபீஸில் உயர் நிலை அடைவதை மிகவும் எதிர்பார்த்திருக்கும் ராண்டலின் வாழ்வில் திடீரென ஒரு நாள் சூறாவளி வீசுகிறது. தன் பாஸுடன் வெளியூர் செல்லும் ப்ரோக்ராமுக்கு ராண்டல் கிளம்ப, அவனது மனைவியும் ஒரு பார்ட்டிக்கு கிளம்ப வேண்டியிருப்பதால் ஒரு பேபி சிட்டரை -குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆளை- ஏஜென்ஸி மூலம் ஏற்பாடு  செய்கிறார்கள். குழந்தையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் பின் சீட்டிலிருக்கும் ஒருவன் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறான். பதிவின் மேற்ச் சொன்ன விஷயத்தை சொல்லி, பயந்து போன இருவரும் அவன் சொல்வதை கேட்கிறார்கள். ராண்டலின் அக்கவுண்டில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதை துல்லியமாய் சொல்லும் அவன் எல்லா பணத்தையும் வி...