Seethamma Vaakitlo Sirimalle Chettu
பிரகாஷ்ராஜ் மிகவும் நல்ல மனிதர். எதையும் பாசிட்டிவாக பார்ப்பவர். அவருக்கு ரெண்டு மகன்கள், ஒரு பெண். தன் மனைவி ஜெயசுதாவோடு ரேலங்கியில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவர். இரண்டு மகன்களில் மூத்தவரான வெங்கடேஷ் ஒர் வேலையில்லா பட்டதாரி, சுள்ளென கோபப்டுகிறவர். இளையவர் மகேஷ்பாபு. நன்கு படித்தவர். ஹைதையில் இருப்பவர். இளமைத் துள்ளலோடு வளைய வருபவர்.இவர்களின் உறவினரான பணக்கார ரமேஷ் ராவுக்கு ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜ் குடும்பத்தின் மீது காழ்ப்புணர்ச்சி. இவரது மகள் சமந்தாவுக்கும் மகேஷ்பாபுவுக்கும் காதல். இன்னொரு பக்கம் வீட்டோடு இருக்கும் முறைப் பெண் அஞ்சலி . வெங்கடேஷ் தான் தன் கணவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இருப்பவர். ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜின் குடும்பத்தில் உறவினர் ரமேஷ் ராவினால் ஒர் பிரச்சனை உருவாகிறது. அது அண்ணன் தம்பிக்கிடையேயும் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை.