Posts

Showing posts with the label web series

Sare Jahaan Se Acha- Hindi web series

Image
  ஹோமிபாபா கொல்லப்பட, இந்திய ‘ரா” உளவு துறை உருவாக்கப்பட்டு, விஷ்ணு சங்கர் எனும் உளவு துறை அதிகாரி பாகிஸ்தானில் ஹோமி பாபா கொலைக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதோ ஒரு தீவிர சதியை செய்து கொண்டிருக்கிறது என்று நம்பகமான செய்தி வர, அது நியூக்கிளியர் பாம் தயாரிப்பு என்று தெரிய வருகிறது. அதை எப்படி முறியடித்தார்கள் என்பதை மிக ஸ்டைலான கதை சொல்லலில், எடிட் மூலம் சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி கதை மாந்தர்களின் கேரக்டர்களின் செயல் பாடு, கதையில் டிவிஸ்ட் என வரும் இடங்களை எல்லாம் தொடர்ந்து ஸ்பை படம், கதை படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி. பாகிஸ்தான் சைட் காட்டும் வில்லன் கேரக்டர் என்று நாம் சொன்னாலும் அவர்கள் சைட் ஹீரோ எப்படி தோற்கிறார் என்பதை காட்டும் போது அவசர அவசரமாய் முடித்த ஃபீலிங். ப்ரதீக் காந்தியின் நடிப்பு சிறப்பு. அதை விட வில்லனாய் வரும் பாகிஸ்தானியர் கேரக்டர் நடித்தவரின் நடிப்பு மிகச் சிறப்பு. ஏனென்றால் அவருக்கு தான் நிறைய எமோஷனல் வேல்யூவுடன் காட்சிகள் இருந்தது. #saarejahanseaccha #Netflix #hindiwebseries2025cablesankar

Mayasabha-Telugu Web Series

Image
  மாயசபா. இரண்டு பேர். மாணவர்கள். விவசாய குடும்பத்திலிருந்து வந்த கே.கே.ஆருக்கு அரசியலில் இறங்கி ஊருக்கு நல்லது செய்ய ஆசை. இன்னொரு பக்கம் டாக்டருக்கு படிக்கும் எம்.எஸ்.ஆர். ரெட்டியிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு ரவுடியிச குடும்பத்திலிருந்து வருகிறவர். இவருக்கு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைத்தவிர வேறு ஆசை இல்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களின் அரசியல் வாழ்க்கை ஆந்திர அரசியலில் மிக முக்கியமானது. சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி இருவரைப் பற்றிய கதை. இருவரும் ஒன்றாய் அரசியலில் வளர்ந்து, ஒரே கட்சியிலிருந்து, என்.டி.ஆரின் மருமகனாகி, என்.டி.ஆர்- சிவபார்வதியின் பிரச்சனையால் கட்சியை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து ஆட்சியமைத்த கதை. நண்பர்கள் இரு துருவமாக மாறும் நேரம் வரை இந்த சீசன் போகிறது. சந்திரபாபு நாயுடுவாக ஆதிபினிசெட்டியும் ராஜசேகர ரெட்டியாக சைத்தன்யா ராவும் நடித்திருக்கிறார்கள். என்.டி.ஆரை ஆர்.சி.ஆர், என்றும் நாகேஸ்வரராவை ஏ.சி.ஆர், என அழைக்கிறார்கள். ஆந்திர அரசியல் தெரிந்தவர்களுக்கு செம்ம சுவாரஸ்யமாய் இருக்கும் இந்த சீரிஸ். ஆங்...

Crack Down - Hindi Web Series Review

Image
  shootout at lokanwala படத்தின் இயக்குனர் அபூர்வ லக்கியாவின் முதல் வெப் சீரீஸ். பேமிலி மேனின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட சுவாரஸ்ய ரா உளவுத்துறை சம்பந்தமான கதைகள் இந்தியில் சிறப்பாகவே வர ஆரம்பித்திருக்கிறது. இந்த க்ராக்டவுனும் அதில் ஒன்று என்று சேர்க்கலாம். சிக்ஸ்பேக்கில் இறுக்கமான முகத்துடன் சமயங்களில் ரா தலைமைக்கே போன் போடு, அவனை பிடி என்று உத்தரவு கொடுக்கும் அளவுக்கான டாமினெண்ட்  சாகுப் சலீம், கொஞ்சம் ராஸ் பட அலியா பட் கேரக்டரின் சாயலில் வரும் ஷிரியா பில்கனோகர்,   ராவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசியல். சட்டப்படி நடவடிக்கையை மீறி செயல் படும் ராவுக்கும் டைரக்டர் ஆப் ஆப்பரேஷனுக்குமிடையே நடக்கும் உள் புகைச்சல்கள். பாகிஸ்தானிய தீவிரவாதிகள். முஸ்லிம் ஏரியாக்களில் ஊடுருவும் பெண் தீவீரவாதிகள். கொலை செய்வதற்கு முன் நமாஸ் செய்துவிட்டு போகும் தீவிரவாதிகள் என எல்லா தீவிரவாதக் கதைகளுக்குண்டான அத்தன விஷயங்களும் இதில் இருக்கிறது.  சிந்தன் காந்தியும், சுரேஷ் நாயரும் இணைந்து எழுதியிருக்கும் இந்த சீரீஸுக்கு இவர்கள் தந்த டீடெயிலிங் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு இதை படமாக்க...

இரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்

Image
இந்தியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வெப்சீரீஸுகளுக்கு மத்தியில் தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான வெப்சீரீஸ் என்றால் அது ஆட்டோ சங்கர் மட்டுமே. தொடர்ந்து பல தமிழ் வெப் சீரீஸ்கள் வந்தாலும் அவைகள் எல்லாமே டிவி சேனலில் காசு வாங்கிக் கொண்டு பணத்தை சுருட்டி எடுத்துக்கொடுத்தது போல் தான் இருக்கிறதே தவிர, வெப் சீரீஸுக்கான மேக்கிங், எழுத்து என எந்த மெனக்கெடலும் இல்லை. பெரிய நிறுவனங்கள். பெரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றும் ஒப்பேற மாட்டேன் என்கிறது தமிழ் வெப் சீரீஸ் உலகம். அந்த வகையில் புதியதாய் வந்திருக்கும் இந்த இரு துருவம் வெப் சீரீஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இன்ஸ்பெக்டர் விக்டரின் மனைவி காணாமல் போய் ஆறு மாதமாகிறது. அவனுக்கு ஒரே மகள். மனைவியை அவர் கொலை செய்துவிட்டு காணாமல் நடிக்கிறார் என்று துறை சார்ந்த விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனையால் அவரால் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அந்நேரத்தில் நகரில் ஒர் கொலை நடை பெறுகிறது. அது தொடர் கொலையாய் மாறுகிறது. தொடர் கொலை செய்பவன் யார்? அவன் ஏன் இப்படி செய்கிறான்...

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -2

Sacred Games இந்திய அளவில் பெரும் விளம்பரத்தோடு வெளியான நெட்ப்ளிக்ஸ் சீரீஸ்.  அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, நவாசுதீன் சித்திக், சாயிப் அலிகான், ராதிகா ஆப்தே என பிரபலங்களை களமிறக்கியிருந்தார்கள். வழக்கமான சாதாரணன் தாதாவான கதை தான் என்றாலும் அதை ப்ரசெண்ட் செய்த விதத்தில் “வாவ்” போட வைத்துவிட்டார்கள். மிரட்டும் நடிப்பு. அதிரடி வசனங்கள். காட்சிகள். பார்வையாளர்களை ஒரே வீச்சில் பார்க்க வைக்கும் திரைக்கதை என மட்டுமில்லாம டெக்னிக்கலாய் அசத்தியிருந்தார்கள். இந்திய அளவில் வந்த நல்ல வெப் சீரிஸ் இது.  அமேசானின் வழியில் நெட்ப்ளிக்ஸும் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் டப்பிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் இரண்டாம் சீசன் களைக் கட்ட போகிறதாம். ஐயம் வெயிட்டிங். Mirzapur நீ வயலண்டாய் சாக்ரட் கேம்ஸை இறக்குகிறாயா? இதோ என் பங்கிற்கு என அதே போல வயலண்ட் ஆக்‌ஷன் சீரிஸை அமேசான் இறக்கிவிட்டிருக்கிறது. சென்ற வருடம் தரமான சம்பவம் செய்த,  அதே இன்சைட் எட்ஜ் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகியிருக்கிறது. மிர்சாப்பூர் என்ற் அஒரு நகரத்தை ஆண்டு கொண்டிருக்கிற அகானந்த்  திர...

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் மற்றும் வெப் படங்கள் – ஒரு பார்வை-1

ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒர் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இண்டர்நெட்டின் வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாட்டிலைட் சேனல் உரிமை வியாபாரம் மிகப் பெரிய கேள்விக் குறியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ட்ரீமிங் உரிமை எனும் இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது. படங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது போலவே,  வெப் சீரீஸ்கள் எனும் புதிய கதவு திறந்திருக்கிறது. வழக்கம் போல இந்தி பெரிய மார்கெட் என்பதால் அனுராக் காஷ்யப், விக்ரம் மோத்வானி, போன்ற பெரும் தலைகள் எல்லாம் சடுதியில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.  மற்ற மொழிகளில் வழக்கம் போல பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களைப் பற்றிய கண்டெண்ட் அறியாமைகளோடு, களம் இறங்கியிருக்கிறார்கள். இதில் பெரும் கை நெட்ப்ளிக்ஸ் என்றாலும், இந்திய அளவில் பெரும் முதலாளி அமேசான் ப்ரைம் தான். இவர்களுடன் பாலாஜி டெலி பிலிம்ஸின் ஆல்ட் பாலாஜி, ஸ்டாரின் ஹாட் ஸ்டார், கலர்ஸின் வூட், சன் நெட்வொர்க...

GHOUL - Web series

Ghoul ஒரு காலத்தில் தமிழில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஒரே டைரக்டரின் படங்க ளி ல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பார். அந்த படம் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நடித்துக் கொடுப்பார். அதே போல ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தனின் படங்களில் நடித்திருப்பார். அது போல ராதிகா ஆப்தே, அனுராக் கஷ்யப்பின் படங்களில் நடிப்பது. குறிப்பாய் நெட்ப்ளிக்ஸில் இவர்கள் படங்கள் வெளியாக ஆரம்பித்தபிறகு மீம்ஸ் போடுமளவுக்கு ராதிகா ஆப்தேவின் ஆக்ரமிப்பு. சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் நடிப்பு மட்டுமில்லாமல் , கதை வசனத்திலும் இவரது பங்களீப்பு இருந்தது. ஒரு புதிய நெட்ப்ளிக்ஸ் படத்தில் ராதிகா ஆப்தேவே எல்லா கேரக்டர்களிலும் நடிப்பது போன்ற ஒரு விளம்பரத்தை ராதிகாவே வெளியிட்டிருந்தார். அது கிண்டலுக்காக வெளியிடப்பட்டது என்று நினைத்தால் நிஜமாகவே அப்படி ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொல்கிறார் விக்ரமாதித்ய மோத்வானி. இத்தனை களேபரங்கள், விமர்சனங்களுக்கு நடுவில் ராதிகா ஆப்தே ஒன்றும் திறமையில்லாதவர் இல்லை ஒவ்வொரு  ப்ராஜெக்டிலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டேதானிருக்கிறார். ஒரு சில இயக்குனர்...

Sacred Games - Web Series

Sacred Games சினிமா அவ்வளவுதான் இனிமே. எல்லாரும் டிவி பார்க்க போயிட்டாங்கனு சொல்லிக் கொண்டிருந்த போதும், சிடி, டிவிடி, டவுன்லோட் காலம் என ஒவ்வொரு ப்ரீயட் வரும் போதும் அவ்வளவுதான் சினிமா என்பார்கள். ஆனால் சினிமா எனும் ராட்ஷனுக்கு அழிவே கிடையாது. எதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பவன்.  அது வெளிப்படும் டெக்னாலஜி வேண்டுமானால் மாறுமே தவிர சினிமா மாறுவதேயில்லை. 2010 நான் சினிமா வியாபாரம் புத்தகத்தில் இன்னும் பத்து வருடங்களில் நாம் சினிமாவை வீட்டில் தான் பார்க்கப் போகிறோம், அதுவும் இண்டர்நெட் வழியாய் என்று எழுதியிருந்தேன். அது ஆறு வருடங்களுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்துவிட்டது. பெரிய திரைகளில் சூப்பர் ஹீரோ படங்களும், வீட்டின் டீவியில் மொக்கை சீரியல்களும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் வெப் சீரீஸ் எனும் புதிய சீரியல் வடிவம். சினிமாவுக்கு சற்றும் குறையாத வகையில், அதே பிரம்மாண்டத்தோடு விதவிதமான கதைக்களன்களில், மிகச் சிறந்த நடிகர்களோடு, டெக்னீஷியன்களோடும், ஹாலிவுட்டில் களமிறங்க ஆரம்பிக்க. நாமெல்லாம் நெட்ப்ள்க்ஸிலும், அமேசானிலும் ஆவென வாய் பிளந்து பார...

Glitch – உயிர்தெழுதல்- web series review

Glitch – உயிர்தெழுதல் சினிமாவில் சொன்னால் நம்ப முடியாத சில கதைகளை சீரீஸில் சொன்னால் சுவாரஸ்யப்படுத்திவிட முடியும். அதிலும் குறிப்பாக அமானுஷ்ய கதைகள். அம்மாதிரியான கதைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்குமிடம் வெப் சீரீஸ்கள். சமீபத்தில் பார்த்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸான “க்ளிட்ஜ்” கதை படு சுவாரஸ்யம். முதல் எபிசோடிலேயே நம்ம கட்டிப் போட ஆரம்பித்துவிட்டது. ஒரு சுடுகாடு. நடு ராத்திரி. கல்லரை ஒவ்வொன்றாய் விரிசல் கொண்டு பிளக்க ஆரம்பிக்கிறது. மெல்ல அதிலிருந்து நிர்வாணமான மனிதர்கள் வெளியே வருகிறார்கள். வந்தவர்கள் உடல் முழுவதும் மண் அப்பியிருக்க, ஒன்றும் புரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளாளுக்கு மலங்க, மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த சிறுவன் ஒருவன் அதை படம் பிடிக்கிறான். போலீஸுக்கு தகவல் சொல்கிறான். அங்கு வரும் போலீஸ் இவர்கள் எல்லாரும் யார் என்ன என்று விசாரிக்க, அவர்களால் ஏதும் பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்குமான முதல் உதவிகளை செய்ய அருகில் உள்ள லோக்கல் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் போலீஸ் அதிகாரியான ஜார்ஜ். அனைவரையும் அழைத்துப் போய் ஆஸ்பிட்டலில் ச...

Lust Stories

Lust Stories செக்ஸுவல் உணர்வு சார்ந்த கதைகளை தமிழில் எடுத்தால் பெரும்பாலும் ஹிப்போக்கிரேட் ஷோஷியல் மீடியா சூழ் உலகில் அவைகளை பிட்டுப்படங்களாய் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் உலக சினிமாவென்றால் அதே பிட்டுக் காட்சிகள் பிரஸ்தாபிக்கப்படும். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை டார்கெட் செய்து இரண்டு வெளிநாட்டு ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களான நெட்ப்ளிக்ஸும், அமேசானும்  தங்களது கண்டெண்டுகளால் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. பெரிய நடிகர்கள் ஃபீல் குட் படங்களில் நடிப்பதில்லை. சிறிய நடிகர்கள் நடித்த ஃபீல் குட் படங்கள் ஓடுவதில்லை. ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இந்திய சினிமாவுக்கு இந்த ப்ளாட்பார்மகள் பெரும் வரப்பிரசாதம். லவ் பர் ஸ்கொயர் ஃபீட், போன்ற படங்கள் மூலம் நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் படங்கள் சீரீஸை ஆரம்பித்திருக்க, இன்னொரு பக்கம் அமேசான், தமிழ், தெலுங்கு நடிகர்களை வைத்து கிட்டட்தட்ட மசாலா படம் லெவலுக்கு படங்களையும் சீரீஸ்களையும் இறக்குகிறது. நெட்ப்ளிக்ஸ் தேர்ந்த கலைஞர்களுடன் கைகோர்த்து சமீபத்தில் அளித்திருக்கும் ஒரிஜினல் படம் தான் இந்த “லஸ்ட் ஸ்டோரீஸ்”. காமம் சார்ந்த க...