Posts

Showing posts with the label உயிர்மை

நீர் - நாவல் விமர்சனம்

நீர் – நாவல் விநாயக முருகன் சென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது?. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை  பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.  இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திரா, ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம்.  வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்க...

நிவாரணத்துக்குரியவன்

நிவாரணத்துக்குரியவன் வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒரு முறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய் ஆரம்பித்து, சடசடவென வீடு முழுதும் ஈர வாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேனாம். ஜுரம் வந்து ”தண்ணி வருது.. தண்ணி வருது”என புலம்பியிருக்கிறேன்.  பின்பு தண்ணீர் வடித்த வீட்டின் கதவை திறந்து உள்ளே போன மாத்திரத்தில் அத்துனை சேற்றின் நடுவே “ஓ’வென அலறி உட்கார்ந்தபடி அழுத அம்மாவைப் பார்த்து அழுதிருக்கிறேன். அப்பா.. ஏதும் சொல்லாமல் ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் சுற்றி பார்த்துவிட்டு, கலைந்து சிதைந்திருந்த பொருட்களையெல்லாம்  கவனித்தபடி “சரி வா.. போனா போகட்டும் வாங்கிக்கலாம்.. வேலைப் பாப்போம்” என்று சொல்லி அம்மாவை எழுப்பினதை பார்த்திருக்கிறேன். டிவி,  விளையாட்டுப் பொருட்கள் போனது எல்லாம் பெரும் விஷயமாய் இருந்திருக்கிறது.

வெட்டுப்புலி –புத்தக விமர்சனம்

Image
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேர் சிலாகித்து சொன்னார்கள். எழுதியிருந்தார்கள். ஒரு சினிமாவை பற்றி பதிவெழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை இப்படி விமர்சித்து நிறைய பேர் சொன்னது என்னுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சொல்லி வைத்து டிஸ்கவரியிலிருந்து வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன். வெட்டுபுலி படம் போட்ட தீப்பெட்டியில் இருக்கும் தன் மூதாதையரான தாத்தாவின் வரலாறு தேடி போவதாய் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமான ஆரம்பமாக இருந்தாலும், ஒரு அருமையான் கதை சொல்லிக்கான யுக்தியாய் தான் தெரிந்தது. படிப்பவர்களை மெல்ல கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான யுக்தி. முப்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. லஷ்மணரெட்டி வெள்ளைக்காரனின் குதிரையை உடல் சிராய்த்து, ரத்தம் வழிய ஓட்டப்பழகுவதோடு கதை ஆரம்பிக்கிறது.  முப்பதுகளிலிருந்து இன்றைய காலம் வரை நம் தமிழ் நாட்டு மக்களிடையே, அதுவும் கிராமத்து மக்களிடையே இருந்த கலாச்சாரம், ஜாதி, பள்ளி, பறையன், பாப்பார ஜாதிகளுக்கிடையேயான மதிப்பீடுகள், அரசியல், சினிமா, சுதந்திர தாகம், எதிர்ப்பு, ஆங்கிலேயனுக்கான மறைமுக ஆதரவு, ஆங்கிலேயனை வைத்து பிழைப்பு நடத்தி வசதி வா...