Posts

Showing posts with the label article

Are Delivery Apps A Boon Or A Curse?

Image
  Are Delivery Apps a Boon or a Curse?   During a recent visit to Kumbakonam, I could see young people wearing Swiggy T-shirts everywhere. It's no surprise to exclaim, "Oh, so you've arrived here too, great lords?" The reason is that it's challenging to classify the logistics business as an unprofitable industry. However, it requires the right execution and a highly efficient backend. The online food delivery business was valued at ₹581.86 billion in 2022, and it's said it will reach ₹3059.25 billion by 2028. In this, food delivery apps have two business models. One is aggregating all restaurants and sending orders to the respective establishments for them to deliver. The other is receiving orders and delivering them through their own company personnel. The second type is the major business today. Food delivery was once done only by pizza shops. They placed ads in newspapers, showered offers, and through flashy video ads on TV, they reached people, makin...

விமர்சன சர்ச்சைகள்

விமர்சனச் சர்ச்சைகள் சமீபத்தில் சர்சைக்குண்டான விமர்சன விஷயத்தை தடுப்பதற்காக அப்படத்தின் இயக்குனர் ஒரு வாய்ஸ் மெசேஜை ஷேர் செய்திருந்தார் . ப்ளூ சட்டை மாறன் போன்றோர் எல்லாம் முட்டைப் பூச்சிப் போல , கொசு போன்றவர்கள் என்றிருக்கிறார் . மூட்டைப் பூச்சி என்றால் நசுக்கிவிடுவேன் . கொசு என்றால் அடித்துவிடுவேன் . அது போலத்தான் இவரும் என்கிறார் . அதற்கு திரைத்துறையிடமிருந்து மூன்று விஷயங்களை கேட்கிறார் . அது கூட அவருடய படத்திற்கோ , அவரது தயாரிப்பாளருக்கோ அல்ல .. வருகிற வாரம் வெளியாகப் போகும் படங்களின் தயாரிப்பாளர்களுக்காக என்றிருக்கிறார் . 1. அவருக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் விளம்பரம் கொடுக்ககூடாது என்பது . அது சாத்தியம் . தயாரிப்பாளர் சங்கம் ஒன்று பட்டு இருக்கும் பட்சத்தில் . இதுக்காகவாவது நடந்தா சந்தோஷம்தான் . ஆனால் இன்னொரு பக்கம் விளம்பரம் கொடுத்ததுக்காகவே சொம்படிக்கிற விமர்சகர் ஒருத்தர் நல்லா கல்லா கட்டிட்டு இருக்காரு . அவரோட பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிச்சிருச்சு . ஸோ .. பணம் கொடுத்து விலைக்கு ...

இருட்டு அறையில் “சென்சார்” குத்து

இருட்டு அறையில் “சென்சார்” குத்து ஆம் சென்ஸார் குத்துதான். அது ஏ படம். வயது வந்தவர்களுக்கான படம். அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே? இதில் என்ன பிரச்சனை? என்று கேட்டீர்களானால், நிச்சயம் எல்லா படங்களையும் ஒரே தராசில் வைத்து அவர்கள் பார்ப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திற்கு அனுமதி அளித்ததே தவறு என வாதிட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு மத்தியில் ஏன் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஸ்ட்ரிக்டு என கேள்வி வைக்கும் இந்த கட்டுரை அபத்ததின் உச்சமாய் கூடத் தெரியும். ஆனால் நிஜத்தை பேசியே ஆகவேண்டும். வசவு வார்த்தைகள், குழந்தைகள் மீதான வன்புணர்வு, டபுள் மீனிங் வார்த்தைகள் பெண்களின் க்ளீவேஜ், மற்றும் பின்புற பாகங்கள் ஆட்டுவதை காட்டுவது, உடலுறவை வெளிப்படையாய் காட்டுவது, முத்தக்காட்சி என பல லெவல்களில் சென்சார் தன் வேலையை செய்ய அரசு சட்டம் வகுத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் எல்லா படங்களுக்கும் ஒரே விதமாய் யாரும் பார்ப்பதில்லை. உதாரணமாய் எங்களுடய “6 அத்தியாயம்” படத்திற்கு சென்சாரில் “ஏ” சர்டிபிகேட் கொடுத்தார்கள். எங்களின் படத்தில் உள்ள க...

இலவசம்

Image
என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னு முடிவு செஞ்சப்புறம் இலவசமா எந்த ஐடியாவும் வரமாட்டேங்குது.. நம்மாளுங்க இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம் டிவி, இலவச நிலம், இலவச பொங்கல், இலவச தீபாவளின்னு ஒரே இலவச மயம்தான். நம்ம ஜெயலலிதா போன ஆட்சியில, என்ன பண்ணாங்க.. கோயில்ல தினமும் மத்யானம் இலவச சாப்பாடு போட்டாங்க. அங்க இங்க கொஞ்சம் நஞ்சம் வேலை பார்த்து சம்பாதிச்சிகிட்டிருந்த அடிப்படை வேலை செய்பவர்கள், வேலை செய்யறத விட்டுட்டு, ஒரு வேளை சாப்பாடு நிச்சயம்க்கிற நிலையில வேலையை விட அவங்களுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். ஒரு காலத்துல குங்குமம் புக் வாங்கினா புக் விலையவிட அவங்க கொடுக்கிற இலவச பொருட்களின் விலை அதிகமா இருக்கும். அதனால அந்த புத்தகம் நம்பர் ஓன்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. அவங்க சொன்ன பின்னாடி இன்னொரு பத்திரிக்கை நாங்களும் நம்பர் ஒன்னுன்னு சொல்றாங்க. அவங்களும் ஒரு சர்வே ரிசல்ட் வச்சிருக்...