Posts

Showing posts with the label ஷான் கருப்பசாமி.

பொன்னி

Image
வெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.  பொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம். இன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில்  தங்க விலையுர்ந்து  கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க். கிபி  இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது? எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது? கோலார் தங்க வயல், அதன்  பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்...