Posts

Showing posts with the label சாதனைகள்

கலைஞர் அரசின் சாதனைகள்

Image
கடந்த அதிமுக அரசை விட தற்போது ஆட்சி நடத்தும் திமுக அரசு சாதனைகளை மட்டுமே செய்து வருகிறது.. என்கிறார்கள் திமுகவினரும், திமுக தலைவர்களூம், சரி என்று யோசித்து பொதுமக்களில் ஓருவனாகிய நான் அவரின் சாதனைகளை பட்டியலிட முயல்கிறேன். 1 ஓரு ரூபாய்க்கு அரிசி நிச்சயமாய் இது ஓரு சாதனைதான்.. அதிலும் நல்ல குவாலிடி அரிசி கொடுக்கிறார்கள். அதற்காக 25 ரூபாய் கொடுத்து வாங்கும் அரிசியை கம்பேர் செய்ய கூடாது.. நான் உபயோகிக்கிறேன்.. நன்றாகவே உள்ளது.. இதனால் எதிர்கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இது நிச்சயமாய் திமுக அரசின் சாதனையே.. 2. இலவச டிவி இதுவும் நிச்சயமாய் சாதனையே.. நல்லதோ கெட்டதோ.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிக்கிறார் கலைஞர். என்ன டிவியை வாங்கி 1500 முதல் 2000 வரை வாங்கிய சூட்டோடு விற்கபடுகிறது. இப்படி விற்கப்படுவதால் அதிகம் பலனடைந்தவர்கள் மேன்ச்னில் வசிக்கும் இளைஞர்கள். ஆளுக்கு 400-500 போட்டால் ஒரு கலர்டிவி கிடைத்துவிடுவதால்.. டிவிடியில் கில்மா படங்கள் அமோக விற்பனையாம்.. 3 ரேசனில் சமையல் பொருட்கள் இதுவும் நல்ல முயற்சியே..அதிலும் விஜயகாந்த் போன்ற சிறு தலைவர்கள் கேட்ட கேள்விகளுக...