கோணங்கள் -20
கோணங்கள் 20 - வீட்டுக் கதவைத் தட்டும் சினிமா! சேரனின் சிடுஎச் டி.வி.டி. ஒரு வழியாக வெளியாகிவிட்டது. திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் டி.வி.டியிலும் வெளியாகும் என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் அனைவரும் சேரனுக்கு, யார் யாரெல்லாம் படம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்று தடை போடுமளவுக்கு வாய்மொழி உத்தரவு போட்டதையும் மீறிக் களமிறங்கிவிட்டார். சேரனின் படம் வெளிவந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தின் வீடியோ டோரண்டில் வலம் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமாக வரும் 4.7 ஜிபி இல்லாமல் 8 ஜிபி அளவுக்கான கன்டென்ட்டை கம்ப்ரஸ் செய்து 1.7 ஜிபிக்கு டவுன்லோடு செய்து கொள்ளும் அளவுக்கு இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் திருட்டு வீடியோ நண்பர்கள். இனி அவ்வளவுதான் இது வேலைக்காகாது; போட்ட காசை எடுக்க முடியாது என்று ஆளாளுக்கு ஒருபுறம் கருத்தாகவும், சந்தோஷமாகவும், பொறாமையுடனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனைதான் விற்றது இத்தனைதான் விற்றது எனக் கணக்கிட்டுக் காசு தேறலை என்று பேசுவார்கள். இப்படிப் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் செயல்படுவதேயில்லை. நிச்சயம் ஒவ்வொரு ம...