ஷேர் ஆட்டோக்காரின் பரிதாபங்கள்.
எங்களுடய காமு.காபி படத்தின் வேலை காரணமாய் க்யூப் வரை போக வேண்டிய வேலை. மைலாப்பூருக்கு ஆஞ்சநேயர் கோயில் வழியாய் மைலாப்பூர் சபா தாண்டி இஸபெல்லா ஆஸ்பிட்டலுக்கு பக்கத்தில் அந்தப் பக்கம் போக ஒரு சந்து இருக்கும் அது வழியாய்த்தான் நான் எப்போதும் போவது வழக்கம். மெட்ரோ பணிகளின் காரணமாய் சென்னையில் பல ரோடுகள் ஒன்வே ஆகியிருப்பது உத்துப் பார்த்து ஓட்டினால் ஏதாவது குழியில் விழ வாய்ப்பிருக்கிறது என்பதால் தோராயமாய் பார்த்து ஓட்டியே பழக்கப்பட்டதில் ஒன்வே சைனை பார்க்காமல் நுழைந்து விட்டேன். குட்டியூண்டு டனலில் ஓவர்ப்ளோ போக நானொரு வண்டி மட்டுமே எதிர்பக்கம் போக, என் எதிர்பக்கம் ஏகப்பட்ட வண்டிகள். நட்ட நடுவில் மாட்டிக் கொண்டு விட்டேன். திரும்பப் போகவும் முடியாது. ஏனென்றால் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பைக்கும் சைக்கிளும் நுழைந்து அவர்கள் பாட்டுக்கு போய் கொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஆட்டோக்காரர் “சார் இது ஒன்வே சார்” என்றார். “ஆமாங்க .. சாரி பார்க்காம வந்திட்டேன் சாரி. ரிவர்ஸ் போக முடியலை. கார் பெருசு வேற” என்று சோகமாய் சொன்னேன். ஆட்டோக்காரர் என்பதால் என் வண்டிக்கும் ரோட்டுக்குமிடையே இருந்த ஒரு சிறு கே...