Thottal Thodarum

Sep 30, 2013

கொத்து பரோட்டா - 30/09/13

தொட்டால் தொடரும்
பதிவர் சந்திப்பின் போது எனக்கு போன் செய்து நானெல்லாம் வரலாமா? என்றவரிடம் தாராளமா என்றே காலையிலேயே வாயில் பைப் சகிதமாய் வந்துவிட்டார். லஞ்ச் டைமில் “கேபிள் உன் படத்தில நான் நடிக்கணும். ஒரு சான்ஸ் கொடு. சும்மா வாயில பைப் வச்சிட்டு பாஸிங்கில போற மாதிரியிருந்தாக் கூட பரவாயில்லை.. நான் இருக்கணும் உன் படத்துல என்றார். அப்போதைக்கு அவருக்கு என்ன கேரக்டர் கொடுப்பது என்று யோசனையில்லாமல் நிச்சயமா சார்.. என்றேன். ஷூட்டிங்கின் போதுதான் வயதான மிடில் க்ளாஸ் பெண்கள் பத்திரிக்கை ஆசிரியர் கேரக்டருக்கு ஆள் யோசித்த போது சட்டென ஞாபகம் வந்த முகம் பாரதி மணி சாருடய முகம்தான். ஒரே ஒரு காட்சிதான் வரும் எப்படி அவரை அழைப்பது என்ற யோசனையில் அவருக்கு போன் போட்டேன். விஷயத்தை சொன்னேன். பாஸிங்கில வர்றேன்னு சொன்னது சுமமா இல்லை கேபிள் நிஜமாத்தான் என்ற சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார். அவரின் இயல்பான நடிப்பினால் காட்சியின் முடிவு இன்னும் மெருகேறி சிறப்பாக வந்தது. எனக்கு திருப்தி. ஆனால் அவரோ இன்னும் வேற வேற மாடுலேஷன்ல பேசுறேன் நன்னாயிருந்தா எடுத்துக்கோ.. என்றார். நன்றி சார்.. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 29, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய்  வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட்டில் எல்லாம் இம்மாதிரியான படங்கள் வருதே நம்ம ஊருலே வரதேயில்லையே என்று ஆதங்கம் மட்டுமே படும் காலம் விரைவில் குறையுமென்ற நம்பிக்கை வர ஆரம்பித்துவிட்டது. 

Sep 24, 2013

Lunchbox


நெடு நாளைக்கு முன் அ.முத்துலிங்கம் ஒர் சிறுகதை எழுதியிருந்தார். இலங்கையில் இவருக்கு வழக்கமாய் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரும் சிங்களன் ஒருவன் ஒரு முறை வேறு ஒரு வீட்டின்  சாப்பாட்டை கொண்டு வந்துவிட அது ரெகுலராகி, பின்னால் நடக்கும் விஷயங்களைப் பற்றிய கதை. படு சுவாரஸ்யமாய் இருக்கும். கிட்டத்தட்ட அதே கதைதான் இந்த லஞ்ச் பாக்ஸும்.

Sep 23, 2013

கொத்து பரோட்டா - 23/09/13

நிர்ணையிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு இப்போதுதான் புரிகிறது இத்தனை நாளாய் எப்படி நாம் சுரண்டபப்ட்டிருக்கிறோம் என்று. நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கு போன இடங்களுக்கு எல்லாம் வெறும் எழுபதுக்கும் என்பதுக்கும் சென்று வருவது மகிழ்ச்சியை தராதா என்ன?.  இத்தனைக்கும் காரணம் அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைதான் காரணம்.  இந்த நடவடிக்கைகளினால் தான் அவர்களும் பயந்து மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். பல ஏரியாக்களில் ஸ்டாண்டுகளில் இருக்கும் ஆட்டோக்காரர்கள் இன்னமும் புதிய கட்டணத்திற்கு மாறாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல லோக்கலில் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது அராஜகம் தாங்காமல் மக்கள் ஒரு நாலடி நடந்து வந்து மெயின் ரோட்டில் ஓடும் மீட்டர் போட்ட ஆட்டோக்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள். அரசும் ஊருக்குள்ளேயே ஓடும் ஆட்டோக்களை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சென்னை ஆட்டோக்களில் இருபது சதவிகிதப் ஆட்டோக்கள் தான் புதிய கட்டண அட்டையும், மீட்டரும் பொருத்தியிருப்பதாய் தெரிகிறது. நிஜமாகவே உழைத்து வண்டியோட்டி பிழைக்க நினைக்கும் ஆட்டோக்காரர்கள் நிறைய பேர்  இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாய் இளைஞர்கள். அவர்கள் வாடிக்கையாளர் கேட்காமலேயே மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.  இவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு செய்யும் முனைப்போடு, வாடிக்கையாளர்களாகிய நாமும் தொடர்ந்து மீட்டர் போடும் வண்டிகளை மட்டுமே பயன்படுத்தி, அப்படி பயன்படுத்தாத வண்டிகளின் நம்பரை குறித்துக் கொண்டு புகார் அளிக்க பழக வேண்டும். எதையும் கேட்டே பெற்று வரும் சமூகத்தில் வாழ வேண்டியிருப்பதால். கேளூங்கள் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 21, 2013

6 மெழுகுவர்த்திகள்

ஷாமும், பூனமும் தங்கள் குழந்தையோடு பீச்சுக்கு போகிறார்கள். குழந்தை காணாமல் போகிறது. பெற்றவன் குழந்தையை கண்டுபிடித்தே தீருவேன் என்று அலைந்து திரிந்து தேடுகிறான். அப்படி அவன் தேடிப் போகும் போது நமக்கு தெரிவிக்கப்படும் விஷயங்கள் பிள்ளை பெற்றவர்களின் வயிற்றை கலக்கும்.

Sep 19, 2013

சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணவிலாசம்

நான்கைந்து பேர் போன் செய்துவிட்டார்கள். என்ன இன்னுமா அங்க போய் சாப்பிடலைன்னு. அவ்வளவு நல்லாருக்கான்னு கேட்டதுக்கு இல்லை சொன்னாங்க. நம்மளை லேப் எலி ரேஞ்சுக்கு தான் வச்சிருக்காங்கன்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில அப்படி என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம் ஓரத்தில இருந்திட்டேயிருந்தது.  சரின்னு தொட்டால் தொடரும் ஞாயிறு ஷூட்டிங் ப்ரேக்குல ஒரு நாள் மதியம் போனேன். ஞாயிறுங்கிறதுனால ஹடோஸ் ரோட் காலியா இருந்திச்சு. அவங்க கார் பார்க்கிங் புல். வாலட் பார்க்கிங் எல்லாம் வச்சிருக்கிறதுனால பார்க் பண்ணுற பிரச்சனையில்லை.

Sep 16, 2013

கொத்து பரோட்டா -16/09/13

தொட்டால் தொடரும் படப்பிடிப்பு பத்தாம் தேதி முதல் ஆரம்பித்து வருகிற பதினேழாம் தேதியுடன் முதல் ஷெட்டியூல் இந்திய சினிமா நூற்றாண்டு விழா விடுமுறை காரணமாய் முடிந்து, 25ஆம் தேதி முதல் இரண்டாவது ஷெட்டியூல் ஆரம்பமாகிறது. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டியதுதான். ஆனால் அதற்காக ஒரு வார காலம் விடுமுறை என்பது கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் தேதிகள் குழப்படிக்க வாய்ப்பிருக்கிறது. யார் யார் எல்லாம் பங்கேற்க்க போகிறார்களோ அவர்களை தவிர மற்றவர்கள் அவர்கள் வேலையை செய்யலாம் என்று வைத்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@

Sep 9, 2013

கொத்து பரோட்டா - 09/09/13

”இன்னைக்கு நான் இந்த நிலையில இருக்கிறேன்னா? அதுக்கு காரணம் என் உழைப்பு. சும்மா வந்திரல.. ” என்று வெற்றிப் பெற்றவுடன் சொல்வது சாதாரணம். ஆனால் வெறும் உழைப்பு மட்டும் ஒருவனின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்வேன்.  திறமை, உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்பைக் கொடுத்து ”நீ செய்.. நல்லா வரும்” என்ற ஆதரவை யாராவது நமக்கு கொடுக்காமல் போனால் வாழ்வின் அடுத்த கட்டம் என்பதேயில்லை. தானே நின்ற தானை தலைவன் என்று யாருமேயில்லை. அப்படி பல பேரின் அன்பினால் வளர்க்கப்பட்டு இதோ “தொட்டால் தொடரும்” படத்தின் மூலம் தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரன் மூலமாய் இயக்குனர் ஆகியிருக்கும் இந்நேரத்தில முதல் குறும்பட வாய்ப்பை அளித்த என் தொழில் முறை நண்பர் குலாமுக்கும், நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் சூதுகவ்வும் சிவகுமாருக்கும், விளம்பர ப்டம்  இயக்குனராக்கி முதல் சினிமா செய்வதற்கான அட்வான்ஸ் கொடுத்த இமயம் நெய் உரிமையாளர், துரைராஜுக்கும், சீரியலில் முதல் திரைக்கதை, வசனம், இயக்கும் வாய்ப்பை அளித்த இயக்குனர் என்.வி.நடராஜனுக்கும், கலகலப்பு மூலமாய் என் சினிமா பாதைக்கு புதிய பாதை அமைத்துக் கொடுத்த  இயக்குனர் பத்ரி அவர்களுக்கும் வசனகர்த்தாவாக்கிய இயக்குனர் சக்திவேலுக்கும் என் நன்றியை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நேரில் சென்று அழைக்கவில்லை, போன் செய்து கூப்பிடவில்லை. வெறும் எஸ்.எம்.எஸ் மூலமும், பேஸ்புக் டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய அன்பு இணையதள நண்பர்களுக்கும், நம்மில் ஒருவன் என்ற நட்புணர்வோடு வந்திருந்து வாழ்த்திய பத்திரிக்கையாள நண்பர்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும், ஆகியோருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றிகள். 
@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 8, 2013

உங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டால் தொடரும்..

இன்றைய நாள் என் வாழ்நாளில் ஒர் முக்கியமான நாள். துவார் ஜி. சந்திரசேகரனின் FCS Creations தயாரிப்பில் என் முதல் படமான “தொட்டால் தொடரும்” திரைப்படத்திற்கான ஆரம்ப நாள். நடிப்பு, எழுத்து, வசனம், உதவி இயக்குனர் என்ற பல படிகளைத் தாண்டி இயக்குனர் என்கிற நிலைக்கு என்னை உயர்த்தப் போகும் நாள். இந்த வாய்ப்பை நல்கிய தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரனுக்கு என் நன்றிகள். இந்த இனிய நாளில் என் தந்தையில்லாததை நினைத்து வருத்தமிருந்தாலும், எங்கிருந்தாலும் அவரின் கனவை நினைவாக்கும் எந்தன் முயற்சியை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு, நண்பர்களாகிய உங்கள் அன்பையும், ஆசியையும் வேண்டி.. தொட்டால் தொடரும்...
உங்கள்
கேபிள் சங்கர்

Sep 3, 2013

உக்காந்து யோசிப்பாங்க போல..

ரெண்டொரு நாள் முன் நண்பர் ஒருவர் தன்னுடன் வந்தவரை ஒரு விநியோகஸ்தர் என்று அறிமுகப்படுத்தினார். அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தலுக்கான பார்ட்டி. மரியாதை நிமித்தமாய் வணக்கம் சொல்லிவிட்டு நகர எத்தனித்த போது விநியோக நண்பர் என் கையை பிடித்துக் கொண்டு “எங்க கிளம்பிட்டீங்க?” என்றார். லேசாய் மப்பிலிருந்தார். நான் சகஜமாகி “சொல்லுங்க” என்றேன். சூது கவ்வும் டைரக்டர் உங்க ஃப்ரெண்டா?”